நன்றி சங்கா ! கிரிக்கெட் வரலாற்றில் இன்று
80களிலும், 90களிலும் இருந்த ஓர் மூடநம்பிக்கை யாதென்றால், வலது கை ஆட்டக்காரர்களால் மட்டுமே, சிறந்து விளங்க இயலும் என்பது தான். அதற்கு, ஏற்றவாறு, உலக சாதனையாளர்களின் பட்டியலில், முதன்மை பெற்ற பெரும்பான்மையானோர், வலது கை ஆட்டக்காரர்களே. இதனை மாற்றியமைக்க, களம்கண்ட வீரர்களுள் ஒருவரே, குமார் சங்கக்காரா.
இந்த வீரனின் ஆட்டத்தை கண்ட பின், இடது கையாளுபவர்களின் மதிப்பும் பெருகியது. நடைமுறை காலகட்டத்தில், இடது கை வீரன் ஒருவன் களமிறங்கினால், அனைவரும், குறைந்தது 3 நிமிடமாவது, விடாமல் உற்று நோக்குவர். இவ்வாறு களமிறங்கும் இடது கை வீரர்களை, பெரிதளவில் போற்றப்படுவதற்கு, குமார் சங்கக்காரா'வும் ஓர் முக்கிய காரணம்.
அவ்வாறு, பெருமிதம் சேர்த்த வீரனாகிய, குமார் சங்கக்காரா அவர்கள், இதே நாள் 2015ம் ஆண்டு அன்று, கிரிக்கெட் உலகிற்கு டாட்டா கூறி, கண்ணீருடன் விடைபெற்றார். இந்தியா மற்றும் இலங்கை அணிகள், 2015ம் ஆண்டில், 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் மோதிக்கொண்டது. இத்தொடர், துவங்கும் முன், குமார் சங்கக்காரா அவர்கள் தனது ஓய்வாய்ப்பற்றி குறிப்பிட்டார். " இத்தொடரின் 2ம் டெஸ்ட் போட்டியே, எனது கடைசி போட்டி என்று அறிவித்தார்". அப்போட்டி, கொழும்பு'வில் நடைபெறவிருந்தது.
இப்போட்டிக்கு முன், முதல் டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி, இந்திய அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த, 2ம் போட்டியின் மீது, ஆர்வமும் ஏக்கமும் அதிகரித்து காணப்பட்டது. அதற்கு காரணம், இந்திய அணி, எவ்வாறு மீண்டெழுந்து சீறவுள்ளார்கள் என ஒரு பக்கம் எண்ணங்கள் ஓட்டத்தில் இருந்தால், மறுபுறம் குமார் சங்கக்காரா'வின் ஓய்வை எவ்வாறு நமது மனம் ஏற்கவுள்ளது என்கிற கேள்வியும் மனதில் ஓட்டமாய், விரைத்துக்கொண்டு இருந்தது.
குமார் சங்ககாரா அவர்கள், தனது இறுதி போட்டியில், தான் நினைத்த வாறு பெரிதும் ரன்களை குவிக்கவில்லை. முதல் இன்னிங்சில் 32 ரன்களும், இரண்டாம் இன்னிங்சில் 18 ரன்களும் குவித்து வெளியேறினார். அப்போட்டியையும், இந்திய அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
அன்று ஒரு நாள், போன்று சில நாட்கள் மட்டுமே, தான் சரியாக விளையாடாமல் வெளியேறினார். ஆனால், தனது அணியும், தனது நாடும், கிரிக்கெட் உலகில் தலைதூக்கி காணப்படும் என்பதற்காக, 15 ஆண்டுகாலமாக, மிக மிக நல்ல ஆட்டங்களை மட்டுமே வழங்கியுள்ளார்.
இலங்கை அணியின், வைர மகுடமான குமார் சங்ககாரா அவர்கள், தனது ஓய்வு பேட்டியில், " நான் எங்கு சென்றாலும், எனக்கு உத்வேகமாய் இருக்கும் நபர் யார் என்கிற கேள்வியை, பலர் கேட்டுள்ளார்கள். எனது அருகில் உள்ள, என் பெற்றோர்களை விட்டுவிட்டு நான் ஏன் என்னுடைய உத்வேகத்தை கண்டுபிடிக்க, வெகு தூரம் செல்லவேண்டும்" என்று குறிப்பிட்டார். ஒரு மனிதனின் வெற்றிவாழ்வில், தனக்கு பக்கபலமாய் இருப்பது, தன்னுடைய குடும்பம், தன்னுடைய நண்பர்கள் மட்டுமே, என்கிற செய்தியை ஆணித்தரமாய் உரைத்தார்.
ஏஞ்சலோ மத்தியூஸிடம், அவர் இறுதியில் கூறியது " எதற்கும் அஞ்சாதே. நாம் விளையாடும் ஆட்டமோ, என்றாவது ஒரு நாள், முடிவுக்கு வந்து விடும். ஆதலால், உனது முழு கிரிக்கெட் காலத்திலும், அஞ்சாமல், பொறுப்புடன் விளையாட வேண்டும். நம்மை நெருங்கும் தோல்விகளை கண்டு அஞ்சாமல், வெற்றிபெறுவதை பற்றியே சிந்தனைகள் இருக்க வேண்டும். இலங்கை அணியை தலைதூக்கி நிறுத்தும் பொறுப்பு, உனது கைகளில் உள்ளது" என்று, வளர்ந்து வரும் இளம் வீரருக்கு அறிவுரை அளித்தார். ஆனால், இந்த அறிவுரைகள், தனது வாழ்வினை, பளீரென வெளிக்காட்டும்.
அதற்கு ஓர் எடுத்துக்காட்டு, 2011ம் ஆண்டின் உலகக்கோப்பை இறுதி போட்டியில், ஒரு புறம் இந்திய அணி, வெற்றிபெற்று, ஆனந்தமாக திகழ்வர். ஆனால், மறுபுறத்தில் இவரோ, தோல்வியடைந்த இலங்கை அணியின் தலைவரான இவரோ, துக்கத்தில் சிரிப்பார். இத்தோல்வி, எத்தனை ஆண்டு காலமானாலும், தன்னை விடாது துரத்தும், என்கிற விஷயம் தானும் அறிந்ததே. ஆனால், இதனை காரணம் கொண்டு, களத்தை விட்டு வெளியேறாமல், இலங்கையணியுடன், கைகளை கோர்த்து, மேலும் 4 ஆண்டுகாலம் விளையாடினார். இதுவே, இவரின் சிறப்பம்சம்.
தற்போது உள்ள இலங்கை அணி, மிகவும் வாடிய நிலையில், வெற்றியின்றி, காணப்படுகின்றது. இந்நிலை மாறுவதற்கு, இவரை போன்று இன்னொருத்தர் வர வேண்டும். ஆனால், குமார் சங்ககாரா ஒருவர் தான் ! ஆதலால், வேறு ஒருவன், உலக தரத்தில், இலங்கை அணியை வழிநடத்தி, வெற்றி வாகையை சூட வேண்டும்.
"நீ குமார் சங்ககாரா'வ தோக்கடிக்கணும்'னா, இன்னொரு குமார் சங்ககாரா'வா இருக்கணும். ஆனா, இங்க குமார் சங்ககாரா, ஒருத்தர் தான்"
Comments
Post a Comment