இலங்கை பார்சல் நிறுவனம்

இலங்கை கிரிக்கெட் அணி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன், ஒரு ஆண்டிற்கு முன், சரியாய் இன்று, உலகக்கோப்பை தொடரில் மோதியது. இலங்கை அணியை பொறுத்தவரை, இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, அடுத்த சுற்றை அடையும் வாய்ப்பு கைகூடும். ஆனால், அது சிறிது கடினம். காரணம், இவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் அணி, இத்தொடரின் தொகுப்பாளரான இங்கிலாந்து அணி ஆகும். தொகுப்பாளர் மட்டுமின்றி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில, சர்வதேச அளவில் முதல் இடத்தை பிடித்த அணி ஆகும். மறுபுறம், சிறிது நிம்மதியுடன் விளையாடும், இங்கிலாந்து அணி.

ஹெட்டிங்க்லே மைதானத்தில், டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  ஒப்பனர்களும் சொற்ப ரங்களுக்கு ஆட்டமிழக்க, ஸ்கோர் 3/2 என இருந்தது. இத்தொடரில் வழக்கம் போன்று, அன்றும் இலங்கை அணியின் பேட்டிங் மோசமாக அமைந்தது. ஆனால், வழக்கத்தை காட்டிலும், சிறிது முன்னேற்றம் தெரிந்தது. காரணம்,  இதற்கு முன் இருந்த நிலையில் விளையாடியிருந்தால், இறுதி இலக்காக 170 அல்லது 180 ரங்களுக்குள் முடிந்திருக்கும். ஆனால், அன்று இடையில் உள்ள வீரர்கள், சிறிது போராடியதால், முழு 50 ஓவர்களையும் விளையாடி, 232/9 என ஸ்கோர் இருந்தது. குறிப்பாக தொடக்க ஓவர்களில், அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆடிய ஆட்டம், மிகவும் அழகாக இருந்தது. ஹெட்டிங்க்லே மைதானத்தில், ஆர்ச்சர் வீசும் பந்துகளை, எதிர்த்து விளையாடிய ஓர் அதிரடி ஆட்டம், அனைவரும் கவனிக்கத்தக்கதாய் இருந்தது. இளம் வீரரிடம் இருந்த விளையாட்டு திறன், புருவங்களை உயர்த்துகின்றது. 40 பந்துகளில் 49 ரன்கள் அடித்தார். ஆனால், அவர் விளையாடிய டிரைவ் ஷாட்டுகள் அனைத்தும் ஓர் கிரிக்கெட் வீரர், தனது ஆட்டத்தை சரியாக விளையாடினால், எவ்வாறு உள்ள பந்துவீச்சாளரையும் எதிர்கொண்டு ரன்கள் குவிக்க முடியும் என அனைவருக்கும் உணர்த்தும் வகையில் இருந்தது. பின்னர் குஷல் மெண்டிஸ், அடித்த முக்கிய 46 ரன்கள் மற்றும் மேத்தியூஸ் அடித்த பொறுப்புடன் கூடிய ஓர் அரை சதம், இவர் அனைத்தும் காப்பாற்றியது. ஆனால், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களையும், நாம் மறந்து விட கூடாது. இறுதிக்கட்ட ஓவர்களில், வேகப்பந்து வீச்சாளர்கள், ஓர் டாட் பந்துகளின் வேட்டையில் இறங்கினார்கள். ஆர்ச்சர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ, விடம் கொடுத்த ரன்களை இறுதிக்கட்ட ஓவர்களில், சில தந்திரமாக வீசப்பட்ட பந்துகளால், கணக்கை சரிசெய்துக்கொண்டார்.

232 எனும் ஸ்கோர், பெரும் போராட்டத்துடன் அடிக்கப்பட்ட ஸ்கோராக இருப்பினும், இங்கிலாந்து அணியிற்கு முன் மிகவும் குறைவு. ஐசிசி தரப்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 96% சதவீத மக்கள் இங்கிலாந்து அணியே வெற்றிபெறும் என்று வாக்களிக்க, மீதம் 4% இலங்கை அணி வெற்றிபெறும் என்று வாக்களித்தனர். அனைவரும் நினைத்தது, கணித்தது, இங்கிலாந்து அணி மிகவும் எளிதாக வெற்றிபெறும் என்று தான். ஆனால், மீதம் 4 சதவீதம் உள்ள மக்களின் கணிப்பு சரியாக இருந்தது. ஆனால், அது பின்னர் தான் தெரிந்தது. காரணம், தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், ரூட், மோர்கன் மற்றும் ஸ்டோக்ஸின் ஆட்டம் சிறிது இங்கிலாந்து அணியின் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்வாறு இருந்தது. ரூட் அரை சதம் அடித்தார். 30 ஓவர்களில் முடிவில் 127 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் இருந்தது. ஆனால், அங்கிருந்து நடைபெற்றது தான், இலங்கை அணியின் பார்சல் தொழில். மலிங்கா மற்றும் தனஞ்சய டீ சில்வா, பந்துவீச்சில் கூற்றுசேர்ந்து, விக்கெட்டுகளை கைப்பற்றினர். மலிங்கா'வின் யார்க்கர் பந்துகள் மற்றும் பொறுமை பந்துகள், இங்கிலாந்து அணியிற்கு தலைவலியை வழங்கியது. ஒரு புறம் ஸ்டோக்ஸ், தனியாக போராட, மறுபுறம் உள்ள வீரர்கள், வாழ் இழந்து நிராயுதபாணியாக இருந்தார்கள். ஸ்டோக்ஸ் ஒரு புறம், உச்சகட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தினால், மறுபுறம் மலிங்கா மற்றும் டீ சில்வா, ஓர் அசாத்தியதை நிகழ்த்த போராடுகின்றார்கள். ஓர் நேருக்கு நேர், சரிக்கு சமம் போட்டி. பந்திற்கு மாட்டியிற்கு உள்ள ஓர் கத்தி சண்டை. இறுதியில் வெற்றிபெற்றது இலங்கை அணி. நெஞ்சில் துணிவிருந்தால், எதையும் சாத்தியமாக்கலாம் என நிரூபித்தனர். ஆனால், மறுபுறம் ஸ்டோக்ஸ், ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் அடித்து, ஓர் படையிற்கு சமமாய் நின்றிருந்தார். போராடினார், ஆனால் முடியவில்லை. 212 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளை இழந்து, தோல்வி அடைந்தது இங்கிலாந்து அணி.

இன்று வலைத்தளங்களில், அந்த கருத்து கணிப்பில் இட்ட புகைப்படத்தை வைத்து பலர், நம்பிக்கை வாசகங்கள் எழுதி வருகின்றனர். "என்றாவது உன்னை ஊக்குவிக்க வேண்டும் என்றும், தன்னம்பிக்கை வழங்க வேண்டும் நினைத்தால், இப்புகைப்படைத்தை பார்த்துக்கொள்" என பலர் கூறிவந்தனர். அவ்வாறு, மிகுந்த போராட்டத்துடன் சாத்தியமாகிய வெற்றி இது. ஆட்ட நாயகன் விருதை பெற்றது, லசித் மலிங்கா - தான் கைப்பற்றிய 4 விக்கெட்டுகள் காரணமாக.      

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?