DC vs SRH | IPL 2020 | Qualifier 2 | திருப்புமுனை Segment
நேத்து, ஹைதராபாத்துக்கும் டெல்லிக்கும் இடையில, qualifier 2 match நடந்துச்சு. இந்த match'அ ஜெயிக்குறவன் finalகு போயிடுவான். தோக்குறவன் வீட்டுக்கு போயிடுவான். Toss ஜெயிக்கிற டெல்லி அணி முதல்ல batting choose பன்றாங்க. Dhawan, Stoinis'ஓட start மற்றும் Hetmyer'ஓட அசத்தலான finish காரணமா, 189/3னு பெரிய score அடிக்கிறாங்க. அதை திரும்ப அடிக்கணும்ங்கிற இலக்கோட உள்ள வர்ற SRH, ஆரம்பத்துல wickets இழந்து, பின்னாடி Williamson மற்றும் Samad போராடினாலும், அந்த போராட்டம் பத்தாம வெறும் 172/8 தான் அடிக்கிறாங்க, 17 runs வித்தியாசத்துல DC ஜெயிக்குறாங்க.
இந்த match'ஓட Post Match Analysis videoவ என்னோட Cric Muhan YouTube channelல post பண்ணியிருக்கேன். Videoவ பாருங்க, புடிச்சிருந்தா subscribe பண்ணுங்க. அப்படியே, ஏதாவது inputs சொல்லனும்னா, comment sectionல type பண்ணுங்க.
இங்க, silent killerரா சம்பவம் பண்ண ஹைதராபாத் அணிய, சிக்க வெச்சு சின்னாபின்னமாகினது formலேயே இல்லாத டெல்லி. இதை சாத்தியமாக்கணும்னா நிச்சயமா ஏதாவது திட்டம் இருக்கணும். இல்ல ஏதாவது சம்பவம் நடந்திருக்கணும். அந்த ஒரு விஷயம், இந்த match'ஓட தலையெழுத்தையே மாத்தலாம். அது என்னன்னு, இந்த திருப்புமுனை segment blogல நாம பார்க்க போறோம்.
இந்த match'அ பொறுத்த வரைக்கும், டெல்லி ஜெயிச்சதுக்கு ஒரு முக்கிய காரணம், ஹைதராபாதோட fielding தான். கிட்டத்தட்ட 5ல் இருந்து 6 catch வரைக்கும், இவங்க fielders புடிக்காம விட்டிருக்காங்க. அதுல முக்கியமா வந்தது Dhawan மற்றும் Hetmyer'ஓட catches தான். பொதுவா, டெல்லிக்கு ரொம்பவே சின்ன batting lineup தான். இதுல சில பேர் formல வேற இல்ல. அப்படி இருக்கும்போது catches மட்டும் தவற விடாம புடிச்சிருந்தா, 150 to 160குள்ள தடுத்து நிறுத்தியிருக்கலாம். அது தவறுச்சு. கூடவே, டெல்லியோட catching பக்காவா இருந்துச்சு. நெறய எடத்துல effort போட்டு boundaries'அ தடுத்ததையும் பார்க்க முடிஞ்சுது. இந்த ஒரு விஷயம் தான், முக்கியமான difference'அ அமைஞ்சிருக்கு. இதுக்கு அடுத்து தான் SRH'ஓட top order collapseலாம்.
Comments
Post a Comment