சிறந்த ஐபிஎல் போட்டி

இரண்டு ஆண்டுகளுக்கு முன், சரியாக இன்று, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ஹைதராபாதில் மோதியது. பெங்களூரு அணியினை பொறுத்த வரை, இப்போட்டியை ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயம். பார்வையாளர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. காரணம், அனைத்து ஆண்டுகளும் இப்படி தான், முதலில் சில போட்டிகளில் தோல்வி அடைந்து, பின்னர் வருகின்ற போட்டிகளை வென்றே தீர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் நிலை வந்துவிடும்.  மறுபுறத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நல்ல நிலையில் உள்ளது. ஆதலால், நொண்டி காரணங்களை கூறாமல் பெங்களூரு அணி ஜெயிக்க வேண்டும்.

டாஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாதின் பிட்ச் மிகவும் மெதுவாக இருக்கும், பேட்டிங் செய்வதற்கு நேரங்கள் கடக்க கடக்க குழப்பமாய் அமையும். அதில், இரண்டாவது பேட்டிங் எடுத்தது ஓர் நல்ல முடிவு. ஆனால், சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் எவ்வித ஸ்கோராக இருந்தாலும் அதை கட்டுப்படுத்திடுவார்கள். அது ஓர் எச்சரிக்கை.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தொடக்கம் அவ்வளவு சிறப்பானது அல்ல. 6 ஓவர்களில் முடிவில் 36/2 என்கிற ஸ்கோரில் இருந்தது. தவான் மற்றும் ஹேல்ஸ், இரு வருமே பவர்பிளே ஓவர்களுள் தங்களின் விக்கெட்டை இழந்தார்கள். பின்னர், 9வது ஓவரில் மனிஷ் பாண்டேவும் தனது விக்கெட்டை இழக்க, 10 ஓவர்களின் முடிவில் 61/3 என்று ஹைதராபாத் அணியின் ஸ்கோர் இருந்தது. ஆனால், உள்ளிருந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் ஷாகிப் அல் ஹாசன். இருவருமே சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். அதிலும் குறிப்பாக கேன் வில்லியம்சன், பௌண்டரிகளுடன் ஸ்கோரினை உயர்த்தினார். தன்னுடைய அரை சதத்தினையும் அடைய (இத்தொடரின் 5வது அரை சதம்), மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பியது. 56 ரங்களுக்கு கேன் வில்லியம்சன் தனது விக்கெட்டை இழக்க, ஸ்கோர் 16 ஓவர்கள் முடிவில் 112/4 என இருந்தது. அங்கிருந்து, கண்டிப்பாக 150ல் இருந்து 160 வரை நிச்சயம் இறுதி ஸ்கோராக முடித்திருப்பார்கள். ஆனால், அன்று நடந்தது சரிவு தான். சறுக்குமரத்திலிருந்து கீழே விழுவது போல், மடமடவென விக்கெட்டுகள் விழுந்தது. அதிலும் சிராஜ் சஹா'வை வீழ்த்த, 153 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீச, நாடு ஸ்டம்ப் மற்றும் லெக் ஸ்டம்ப், இரண்டையும் சேர்த்து தனியாக அடித்தது, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது . இறுதி ஓவரில் நடந்தது ஒரு வகையான தற்கொலை முயற்சி தான். இரண்டு ரன் அவுட், இவர்களே, தேவையின்றி இரண்டு ரன்கள் எடுக்க முயன்று, விக்கெட்டுகளை இலவசமாக பறிகொடுத்தது, அணியின் கவனக்குறைவை காட்டுகின்றது. இந்தியில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 20 ஓவர்கள் முழுவதும் விளையாடி. வடிவேல் காமெடியில் வருவதை போல் " பில்டிங் ஸ்டராங்'கு ஆனா பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்'கு" இருந்தது ஹைதராபாத் அணியின் பேட்டிங்.     

நாம் மீண்டும் கூறுகின்றேன், ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு, எவ்வித ஸ்கோரினையும் கட்டுப்படுத்தும் அளவிற்கு வலுவானது.  அதை சமாளிக்க வந்தார்கள் பெங்களூரு அணியின் ஒப்பனர்கள். பெங்களூரு அணி, தொடக்கத்தில் ஒரு விக்கெட்டை இழந்தாலும், பவர்பிளே ஓவர்களில் 55/1 என்று சிறப்பாக தொடங்கியது. கோலி பவர்பிளே ஓவர்களை நன்கு பயன்படுத்தினார். ஆனால், இங்கு சானக்யன் கென் வில்லியம்சனின் வழிநடத்துதல், எவ்வாறு என்று வெளிப்பட்டது. ஒரு புறத்தில் ரஷீத் கானிடம் பந்து கொடுத்து, ஸ்லிப் திசையில் ஓர் ஃபீல்டரை நிக்க வைத்தார். அது மட்டும் மின்றி  கல்லி மற்றும் பேக்வார்ட பாயிண்ட் திசையில் பீல்டர்களை நிறுத்தி வைத்தார். அவர் பந்து வீச, பேட்ஸ்மேன்கள் மனதில் அழுத்தம் ஏற்பட்டது. மாரு புறத்தில் வந்த பந்துவீச்சாளர்கள், அவ்வழுத்தத்தினை பயன்படுத்தி விக்கெட்டை கைப்பற்றினார்கள். இவ்வாறு, 4ஓவர்கள் தொடர்ந்து நடந்தது. அதன் காரணமாக 12 ஓவர்கள் முடிவில் 85/5 என்று சுருண்டது. உள்ளிருந்தது கிராண்ட்ஹோம் மற்றும் மந்தீப் சிங். பொறுமையாக விளையாடி 16 ஓவர்கள் முடிவில் 108/5 என்று ஸ்கோரை சேர்த்தது. இப்படியே ஓவர்களை நகர்த்தினாள் வெற்றி என்று எண்ணி ரஷீத் கானிடம் பந்தினை கொடுத்தார் கேன் வில்லியம்சன். ஆனால் அங்கு நடந்தது தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. கிராண்ட்ஹோம் ரஷீத் கான் வீசிய ஓவரில் இரண்டு பந்துகளில் வரிசையாக இரண்டு சிஸேர்கள் அடிக்க, ஆட்டம் சூடாகியது. அந்த ஓவரில் மட்டும் 14 ரன்கள் குவித்து 122/5 என 17 ஓவர்கள் முடிவில் ஸ்கோரினை உயர்த்தினார்கள். கே.ஜி.எஃப் திரைப்பட வசனம் "அப்பனுக்கு அப்பன் எப்பவுமே இருப்பான்" என்பது இந்நிலையில் நன்கு பொருந்தியது. தேவை 25 ரன்கள் 18 பந்துகளில்.  அடுத்த ஓவர், புவனேஷ்வர் குமார் பந்து வீச, யார்க்கர் பந்துகள் மூலமாக ரன்களை கட்டுப்படுத்தினாலும், அதில் ஓர் பௌண்டரி சென்றதால் 6 ரன்கள் அடிக்க முடிந்தது. 12 பந்துகளில் 19 ரன்கள் தேவை. பெங்களூரு அணியினால் தான் போட்டியினை வெல்ல முடியும், என அனைவரும் எண்ணினார்கள். சித்தார்த் கௌல், அடுத்த ஓவரில் தெளிவாக யார்க்கர் மற்றும் லோ ஃபுள் டாஸ் பந்துகளை வீச, 7 ரன்கள் மட்டுமே குவிக்கப்பட்டது. தேவை 12 ரன்கள், மீதமுள்ளது 6 பந்துகள். புவனேஷ்வர் குமாரிடம் பந்து கொடுக்கப்பட்டது. அவர் செய்ய வேண்டியதை செய்தார். வீசிய அணைத்து பந்துகளும் யார்க்கர். பட்ஸ்மானின் உடலினை நோக்கி, சில பந்துகள் ஸ்டும்பிலிருந்து ஸ்டம்ப் லைன் திசையில் வீசப்பட்டது. கடைசி பந்து, தேவை 6 ரன்கள், ஸ்ட்ரைக்கில் இருந்தது கிராண்ட்ஹோம். புவனேஷ்வர் குமாரின் மனதில் அவ்வளவு தெளிவு இருந்தது. கடைசி பந்து, ஆஃப் ஸ்டம்ப்பை விட்டு சற்று வெளியே யார்க்கர் பந்தை வீச, அதா அடிக்க முயன்று, ஸ்டும்ப்பில் அடித்துக்கொண்டார். 5 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் விருதின் பெற்றது - கேன் வில்லியம்சன். தனது பேட்டிங்கிற்காக வழங்கப்பட்டது. ஆனால், என்னை பொறுத்த வரை தனது சாதுர்யமான யுக்தியின் காரணத்திற்காக அவர் தான் ஆட்ட நாயகன்.  

ஆனால், இப்போட்டியை கண்டபொழுது "வாழ்க்கை ஒரு வட்டம்" என்கிற செய்தி நன்கு புரிந்தது.

         

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt