சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதல் பிரியாணி - ஐபிஎல் வரலாற்றில் இன்று
இன்று, சரியாய் நான்கு வருடங்களுக்கு முன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தங்களின் முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அதனைப் பற்றிய பதிவினை இனி வரும் கட்டுரையில் காண்போம்.
ஒரு புறம், விராட் கோலியின் உக்கிரமாய் திகழும் பேட்டிங்கினால் பயணம் செய்த பெங்களூரு அணி. மறுபுறம், மாற்று முயற்சியினால் ஏலத்தில் வாங்கிய வீரர்களின் காரணத்தினால் மற்றும் வார்னரின் சிறப்பான வழி நடத்தலால் இறுதியினை அடையும் ஹைதராபாத் அணி. ஒரு புறம் கோலி, கெயில், வாட்சன், டீ வில்லியர்ஸ் எனும் பேட்டிங்'கின் சாம்ராஜ்யம். மறுபுறம், முஸ்தபிசுர், போல்ட், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார் எனும் பந்துவீச்சாளர்கள் சாம்ராஜ்யம். இவர்கள் இருவரும் சந்தித்தால்..........!
போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு ஒப்பனர்களான ஷிகர் தவான் மற்றும் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடினார்கள்.முதல் பந்திலிருந்து பௌண்டரிகளை விளாசினார்கள். பவர்பிளே ஓவர்களில் குறிப்பாய் ஷிகர் தவான் அதிரடி ஆட்டத்தினால் அசத்தினார். ஆனால், பவர்பிளே ஓவர்களில் முடிவில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், டேவிட் வார்னரின் கதகளி ஆட்டம் மட்டுமே. பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்களுக்கு பைத்தியம் பிடிக்கும் அளவிற்கு, நான்கு திசைகளிலும் பந்துகள் பௌண்டரிகளை எட்டியது. குவாலிஃபையர் 2ல் ஆடிய ஆட்டத்தின் தொடர்ச்சியாக இங்கு ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 38 பந்துகளில் 69 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். இடையில் யுவராஜ் சிங், சில கேமியோ இன்னிங்ஸ் விளையாடினார். பின்னர், சில விக்கெட்டுகளை தவற விட்டாலும், இறுதியில் பெண் கட்டிங், வாட்ஸனின் ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 1 பௌண்டரியுடன் 24 ரன்கள் அடிக்க, ஸ்கோர் 209/7 என வந்தது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில், இறுதி போட்டியில் அடிக்கப்பட்ட பெரிய ஸ்கோர் இதுவே. பெண் கட்டிங் 15 பந்துகளில் 39 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். குறிப்பாக டீப் லேக் திசையில் அவர் அடித்த 117 மீட்டர் சிக்ஸர், மிகவும் சிறப்பாக இருந்தது.
பெங்களூரு அணியினை பொறுத்த வரை, அவ்வாண்டில் கோலி 4 சதங்களை அடித்துள்ளார். அது மட்டுமின்றி, அவர் விளையாடும் ஆட்டத்தினால் வெற்றி ஈட்ட முடியும் என்கிற நம்பிக்கை கூடுதலாக இருந்தது. அதற்கு ஏற்ப கிறிஸ் கெயில் மற்றும் விராட் கோலி, இருவருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதல் 10 ஓவர்களில், விக்கெட்டின்றி 112 ரன்களை அடித்திருந்த நிலையில் இருந்தது பெங்களூரு அணி. கிறிஸ் கெயில் மற்றும் விராட் கோலி, இருவருமே அரை சதங்களை பதிவிட்டார்கள். 11வது ஓவரில், கிறிஸ் கையில் 76 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். பெங்களூரு அணியின் இன்னிங்சின் முதல் விக்கெட். "தூதுவன் வருவான் நம்மை தஞ்சையை நோக்கி அழைத்து செல்வான்" என்கிற வசனத்தை ஒப்பிடும் படி " கோலி இருக்கின்றார், அவர் வெற்றியை நோக்கி அழைத்து செல்வார்" என்று பெங்களூரு அணியின் ரசிகர்கள் அனைவரும் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவை அனைத்தும் ஏமாற்றத்தில் தான் முடிந்தது. 13வது ஓவரில் கோலி, 54 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அங்கிருந்து சரிவு மட்டும் தான். வந்தார்கள், சிக்ஸர் அடிக்க முயன்றார்கள், சென்றார்கள். இவ்வாறே கதை அன்று அமைந்தது. சிறுவனான சச்சின் பேபி, சிறிது முயற்சி செய்தார். இறுதி ஓவரில் 17 ரன்கள் தேவை என கணக்கு வந்தது. ஆனால், புவனேஷ்வர் குமார், சிறிது தந்திரமாய் பணிந்து வீசி வெறும் 9 ரன்கள் மட்டுமே வழங்கினார். 9 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி கோப்பையை கைப்பற்றியது. இருப்பினும், பெங்களூரு அணி தான் இவ்வாண்டின் கோப்பையை வெல்லப்போகும், வெற்றிச்செல்வர்கள் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். அன்று சச்சின் பேபி, தன்னால் முடியவில்லை என்று இறுதியில் மைதானத்தில் கண்ணீர் மல்க அழுதார்.
ஆட்ட நாயகன் விருதை வென்றது டேவிட் வார்னர். மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்தது ஹைதராபாத் அணியிற்கு. அவர்கள் எலிமினேட்டர் போட்டியை வென்று, பின்னர் குவாலிஃபையர் 2 போட்டியினையும் வென்று, மற்றும் இறுதிப்போட்டியினையும் வென்றார்கள். இவ்வாறு, எந்த அணியும் செய்ததில்லை.

Comments
Post a Comment