ஐபிஎல் திரில்லர் போட்டி

ஏப்ரல் 17, 2011 - புனே வாரியர்ஸ் இந்தியா vs டெல்லி டேர்டெவில்ஸ் போட்டி, மும்பை 

இப்போது நிறையா மக்கள் புனே வாரியர்ஸ் இந்தியா  அணியினை மறந்திருப்பீர். ஆனால், 7 வருடங்களுக்கு  கிரிக்கெட் ரசிகர்களிடம், குறிப்பாக ஐபிஎல் ரசிகர்களிடம் கேட்டிருந்தால், " அந்த அணி மிக நல்ல தொடக்கத்தினை கொடுப்பார்கள் ஆனால் பின் வாழைப்பழத்தோல் மேல் கால் வைத்து வழுக்கி விழுந்த கதையினை போல், தோல்வியினை மட்டுமே சந்தித்துக்கொண்டிருப்பர் " என்பார்கள். அவர்கள் ஐபிஎல் தொடரில் வெறும் மூன்று ஆண்டுகள் தான் விளையாடினர். அம்முவாண்டுகளுமே இதே தான் செய்தனர். 2013ம் ஐபிஎல் தொடர் முடிந்தவுடனே அவ்வணியினை நீக்கியதாக பீ.சீ.சீ.ஐ அறிவித்தது. என்னடா போட்டியினை விட்டுவிட்டு அவ்வணியின் வரலாற்றை கூறுகிறாய் ? என வாசகர்கள் மனதில் ஓடும் எண்ணத்தினை நான் அறிவேன். 


அது மாலை நேரப்போட்டி. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தது. ஜெஸ்ஸி ரைடர் சிறப்பான தொடக்கத்தினை வெளிப்படுத்தினார். சிக்ஸர் மழையினை பொழிந்தார். மற்றோர் பக்கம் கிரேம் ஸ்மித், மிதுன் மன்ஹாஸ் சிறிது சிறிதாக பக்கபலமான ரன்களை சேர்த்தனர். ஜெஸ்ஸி ரைடர் 27 பந்துகளில் 60 ரன்களை அடித்து குவித்தார். இவர்கள் மூவரும் தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்த பொழுது 10 ஓவர்களில் 98/3 என நிலையில் புனே இருந்தது. அங்கிருந்து அணியின் தலைவன் யுவராஜின் வேட்டை தான். டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களுக்கு மைதானம் முழுக்க சுற்றுலா பயணம் கூட்டிக்கொண்டுச் சென்றார். 32 பந்துகளில் 66 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 4 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடித்து விளாசினார். இந்தியில் புனே அணி 187/5 என்கிற ரன்களை அடித்து 188 ரன்களை இலக்காக டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு வைத்தது.

டெல்லி அணியின் தொடக்கமும் மிக சிறப்பாக இருந்தது. அங்கு வெறும் ஜெஸ்ஸி ரைடர் மட்டும் அடித்திருந்தால், இங்கு இரு ஒப்பனர்களுமான டேவிட் வார்னர் மற்றும் விரேந்தர் சேவாக், சேர்ந்து பந்துவீச்சாளர்களை தாக்கினார். ஆனால் அன்று யுவராஜ் சிங், பேட்டிங்கில் மட்டும் அல்ல பந்துவீச்சிலும் ஜொலித்தார். இவ்விரு ஒப்பனர்களும் தங்களின் விக்கெட்டுகளை இழந்த பின், இடையில் இருந்த இர்ஃபான் பதான், நமன் ஓஜா மற்றும் மேத்யூ வேட் மூவரும் சீக்கிரமாக விக்கெட்டுகளை இழக்க 14 ஓவர்கள் முடிவில் 120/5 என்கிற நிலையில் இருந்தது. அங்கிருந்து சிறிது சிறிதாக ஃபின்ச் மற்றும் வேணுகோபால் ராவ் றுணைகளினை சேர்த்தார்கள். கடைசி மூன்று ஓவர்களில் 41 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது 18வது ஓவரில் 20 ரன்களை குவித்தார்கள். 2 ஓவர்களில் 21 ரன்கள் தேவை என்று கணக்கு குறைந்தது. யுவராஜ் சிங் பந்து வீச வருகின்றார். முதல் பந்தில் ஃபிஞ்சின் விக்கெட்டினை எடுத்தார். பின் வேணுகோபால் ராவ் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பௌண்டரியை அடித்தார். ஆனால் கடைசி பந்தில், அவரின் விக்கெட்டையுமே கைப்பற்றினார். அன்று அவர் வீசிய நான்கு ஓவர்களில் 29 ரன்களை வழங்கி 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இப்பொழுது கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை. உள்ளே இருந்ததது ஜேம்ஸ் ஹொப்ஸ் மற்றும் பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம். ஹோப்ஸ், ஆஸ்திரேலியா அணியிற்காக பல சிக்ஸர்களை இறுதியில் அடித்துள்ளார். இன்று அதனை மீண்டும் செய்வாரா என்று கேள்வி. ஆனால் முடிவு, முதல் இரண்டு பந்துகளிலே போட்டியினை ஒரு பௌண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து எளிதாக முடித்து கொடுத்தார். பெரிய ஸ்கோர் த்ரில்லர்களாக முடிந்தது. 

ஆட்ட நாயகன் - யுவராஜ் சிங். எப்போதாவது ஒரு முறை தான் தோற்ற அணியினை சேர்ந்த ஒரு வீரருக்கு ஆட்ட நாயகன் விருதினை வழங்குவர். ஒவ்வொரு சில நிகழ்வுகளுள் அப்போட்டியும் ஒன்று. 

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt