CSK vs KXIP | KKR vs RR | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, ரெண்டு matches நடந்துச்சு. இந்த ரெண்டு gamesல நடந்த சில சம்பவங்கள் காரணமா, ரெண்டு teams, IPL playoff raceல இருந்து வெளில வந்துச்சு. இது இல்லாம, ரெண்டு matches'உம் one sided'அ தான் போயி முடிஞ்சுது. பெரிய எதிர்பார்ப்பு இருக்கவேண்டிய போட்டி, எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமையே முடிஞ்சிடுச்சு. ஆனாலும், இந்த ரெண்டு gamesல சில turning points இருக்கு. அது என்னன்னு இந்த blogல நாம பாக்கலாம்.
முதல்ல சென்னைக்கும் பஞ்சாபுக்கும் இடையில match நடக்குது. Chennai team எப்போவோ playoffs raceல இருந்து வெளில வந்துருச்சு. இதுக்கு மேல அவங்க தங்களோட கெத்த விட்டு கொடுக்காம விளையாட தான் பாப்பாங்க. ஆனா, பஞ்சாப்'கு அப்படி கிடையாது. Toss ஜெயிக்கிற சென்னை அணி முதல்ல fielding choose பன்றாங்க. ஆரம்பத்துல ஏகப்பட்ட wickets பஞ்சாப் இழந்தாலும், கடைசில ஹூடா ஒரு நல்ல half century அடிச்சது காரணமா, 153/6னு ஒரு fighting total reach பன்றாங்க. 2nd inningsல ball, batகு நல்லா வந்தது காரணமா, சென்னை batsmanனுக்கு விளையாட ரொம்ப ஈஸியா அமைஞ்சுது. ருதுராஜ் வரிசையா 3வது fifty அடிக்குறாரு. பஞ்சாபோட playoff கனவு, கணவாவே முடிஞ்சிடுச்சு.
இந்த match'ஓட Post Match Analysis video'வ என்னோட Cric Muhan YouTube channelல post பண்ணியிருக்கேன். பாருங்க, உங்களோட கருத்துக்களையும் commentsல type பண்ணி போடுங்க !
இங்கிடி'யோட opening spell மற்றும் ஆரம்பத்துல பஞ்சாபுக்கு ஏற்பட்ட collapse தான், அவங்க தோத்ததுக்கு main'ஆன reason. இதுக்கு முன்னாடி matchலேயே, Punjab அணி நெனச்சத விட கொஞ்சம் கம்மி score அடிச்சதுனால Rajasthan கிட்ட தோத்தாங்க. கூடவே, 2nd inningsல dew வருது. Evening Gameனு சொன்னாலும், அந்த pitch used wicket'அ இருக்குறது காரணமா, Chennaiகு support கொடுத்துச்சு.
இதுக்கு அடுத்து, கொல்கத்தாவுக்கும் ராஜஸ்தானுக்கு இடையில match நடக்குது. இந்த matchல தோக்குற team, tournament விட்டு வெளில. கடைசி சில matchesல Rajasthan விளையாடுன ஆட்டம், அவங்க மேல ஒரு கவனத்தை ஈர்த்துச்சு. ஆனா, நடந்தது முழுசும் KKR பக்கம் தான். Toss ஜெயிச்ச ராஜஸ்தான் அணி முதல்ல fielding choose பன்றாங்க. Morgan ஆடுன typical Captain's innings காரணமா, 191னு ஒரு உச்சகட்ட scoreர reach பன்றாங்க. அதை திரும்ப சீக்கிரமா chase பண்ண முயற்சி பண்ணி, Powerplayக்கு குள்ளேயே 5 wickets இழந்துட்டாங்க. அங்க விட்டதுதான், எங்கேயும் மீண்டும் எழவே இல்ல.
இந்த match'ஓட Post Match Analysis videoவையும் அதே YouTube channelல Post பண்ணியிருக்கேன். அப்டியே, இந்த videoவையும் click பண்ணி பாருங்க.
இங்க ராஜஸ்தான் தோத்ததுக்கு நெறைய reasons இருக்கு. முதல்ல Stokes'ஓட spell. ஆரம்பத்துல, Morganனுக்கு outside off stumpல short ball வீசுனாலும், போகப்போக அந்த accuracy miss ஆக ஆரம்பிச்சுது. அதுனால தான் Morgan பிரிச்சு மேஞ்சாறு. ரெண்டாவது, குறிப்பிட்ட oversகுள்ள match'அ முடிச்சா தான், ராஜஸ்தானோட net run rate plusல போயி நிக்கும். அதுக்காக ஆரம்பத்துல வந்த எல்லா ballலயும் அடிச்சு ஆட ஆரம்பிச்சாங்க. அந்த அவசரம் click ஆவாம, wickets மட்டும் தான் விழுந்துச்சு.
Comments
Post a Comment