ஐபிஎல் வரலாற்றில் இன்று

சரியாக இன்று, 2 வருடங்களுக்கு முன், ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. ஒரு புறம் சொந்த ஊரில் மிகவும் வலுவுடன் இருந்த ஹைதராபாத் அணி. அவர்கள் ஏற்கனவே அடுத்த சுற்றை அடைந்த நிலையில் இருந்தார்கள். அதிலும், குறிப்பாக இப்போட்டியினை தோல்வியடைந்தாலும், முதல் இரண்டு இடங்களில் ஒரு அணியாக தான் இருக்கும் என்கிற காரணத்தினால், சிறிது நிம்மதியாக விளையாடுவர். கொல்கத்தா அணியினை பொறுத்த வரை இப்போட்டியினை வென்றால், அவர்கள் அடுத்த சுற்றினை அடைவது நிச்சயம். இதனை தோல்வியடைந்தால், அடுத்த சுற்றினை அடைவது சிறிது சந்தேகம் தான்.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி, தங்களின் பந்துவீச்சின் மீது நம்பிக்கை வைத்து பேட்டிங்கை தேர்வு செய்தது. ஷிகார் தவான் மற்றும் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார்கள். முதல் ஆறு ஓவர்களில் 60 ரன்களை அடித்தது ஹைதராபாத் அணி. ஸ்ரீவத்ச கோஸ்வாமி தனது விக்கெட்டை 35 ரன்களுக்கு இழந்தாலும், ஹைதராபட் அணி சீறிக்கொண்டு சென்றது. முதல் 10 ஓவர்களில் முடிவில் 104 ரன்களை அடித்து இருந்தது ஹைதராபாத் அணி. வில்லியம்சனும் சிற்சில சிக்ஸர்களை அடித்து ரன்களின் ஓட்டத்தை அதிகரிக்க, கொல்கத்தா அணியிற்கு சிறிது அச்சுறுத்தியது. அவர்கள், விக்கெட் எடுக்க வேண்டும். ஆட்டத்தில் ஓர் திருப்புமுனை ஏற்பட வேண்டும்.

அந்த திருப்புமுனை 13 வது ஓவரில் வந்தது. கேன் வில்லியம்சனின் விக்கெட்டை கைப்பற்றினார்கள். அங்கிருந்து அடுத்த இரண்டு ஓவர்களுக்கு ரன்கள் மெதுவாகவே வந்தது. அதன் பின், 16வது ஓவரில் ஷிகர் தவான் தனது விக்கெட்டை இழக்க, பரமபதத்தில் பாம்பின் வழியே கீழ் இறங்குவது போல், ஹைதராபாத் அணியின் பேட்டிங் சரிந்தது. கடைசி 5 ஓவர்களில் 31 ரன்களை மட்டுமே அடித்து 7 விக்கெட்டுகளை இழந்தது. ப்ரஸீத் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை கழட்டி அடித்தார். அதிலும் இன்னிங்சின் கடைசி மூன்று பந்துகளில் டீம் ஹாட்ரிக். அதன் காரணமாக 172/9 என்கிற நடுநிலை ஸ்கோரை அடித்தது ஹைதராபாத் அணி. இருப்பினும் கொல்கத்தா அணியை பொறுத்த வரை, சிறிது கடினமுள்ள இலக்கு.

சுனில் நரைன் மற்றும் கிறிஸ் லின், உள்ளே இறங்களினார்கள். சுனில் நரைனின் வேலை, ஓப்பனிங்கில் இறங்கி, அணைத்து பந்துகளையும் பௌண்டரிகளை குவிப்பது மட்டுமே. அதை செய்யத்தவரினால், பெரிய பாதிப்பு ஏதும் இல்லை ஆனால் செய்தால் பவர்பிளே ஓவர்களில் கூடுதல் ரன்களை சேர்க்க உதவியாக இருக்கும். மறுபுறம் கிறிஸ் லின், உலக அளவில் சிறப்பான 20 ஓவர் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர். அதிரடி மட்டும் தான் அவரின் வேதவாக்கு. இருவரும் சேர்ந்து முதல் 6 ஓவர்களில் 66/1 என்று ஸ்கோரினை சேர்த்தது. கொல்கத்தா அணியும் 13வது ஓவர் வரை ஹைதராபாத் அணியினைப் போன்று அதிரடியாக விளையாடினார்கள். 14வது ஓவரில் கிறிஸ் லின் 55 ரங்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால், மொத்தமாக ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை வென்றது கொல்கத்தா அணி. இடையில் சிறிது பொறுமையாக விளையாடினாலும், உத்தப்பா சில பௌண்டரிகளை குவிக்க, ஹைதராபாத் அணியின் கைகளிலிருந்து போட்டி நழுவ தொடங்கியது. அவசரம் மற்றும் ஆரவாரமின்றி, நேர்த்தியாக செய்தார்கள். ஆனால், போட்டி கடைசி ஓவர் வரை சென்றது. உத்தப்பா, ரசல், தங்களின் விக்கெட்டுகளை இழக்க மற்றும் புவனேஷ்வர் குமாரின் 19வது ஓவர், கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவை என்று இருந்தது. பந்து ப்ராத்வெயிட்டின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. நிதிஷ் ராணா, முதல் பந்தில் 4 ரன்களை அடிக்க, மீதமுள்ள 5 பந்துகளில் 1 ரன் மட்டுமே தேவை என்று கணக்கு எட்டியது. திருப்பமாக, அடுத்த பந்தில் விக்கெட் விழுந்தது. ஆட்டமிழந்தது நிதிஷ் ராணா. தேவை 1 ரன் 4 பந்துகளில். மூன்றாவது பந்து, தினேஷ் காத்திக் அதில் ரன் ஏதும் எடுக்காமல், இருக்க கணக்கு 1 ரன் மூன்று பந்துகளில் என வந்தது. அடுத்த பந்தில், பதட்டமின்றி லாங் ஆஃப் திசையில் 1 ரன் எடுத்து, அந்த 1 ரன்னுடன் ஒரு வெற்றியை எடுத்து, அந்த ஒரு வெற்றியை எடுத்தது காரணத்தினால், அடுத்த சுற்றில் ஓர் இடத்தை பிடித்தது கொல்கத்தா அணி.



ஆட்ட நாயகன் கிறிஸ் லின். ஆனால், என்னைப்பொறுத்த வரை இது அனைவரின் உழைப்பால் கிடைத்த வெற்றி. அதுவும், ஹைதராபாத் அணியின் வலுவான பந்துவீச்சை எதிர்த்து, மிகவும் எளிதாக வென்றது கொல்கத்தா அணி.                

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood