நான்காவது ஐபிஎல் அணி
இந்த அணி முதல் மூன்று வருடங்களில் அடிபட்டு, மிதி வாங்கி, இதை விட மிகவும் மோசமான ஆட்டத்தை எவ்வித அணியும் வெளிப்படுத்தியது இல்லை, என்கிற அளவுக்கு விமர்சனம் செய்யப்பட்டது. அதுவும் சௌரவ் கங்குலி, ரிக்கி போன்டிங், கிறிஸ் கெயில், டேவிட் ஹஸி, பிரண்டன் மெக்கல்லம், அஜந்தா மெண்டிஸ், போகிற ஜாம்பவான்கள் நிறைந்த அணியினை வைத்து என்பது தான் மிகவும் அதிர்ச்சி. ஆனால், 2011ம் ஆண்டில், முழு அணியினையும் மாற்றி அமைத்தனர். அதில் முக்கியமானவை, சௌரவ் கங்குலியை அணியினை விட்டு வெளியேற்றியது. அச்சம்பவம், இந்தியா முழுக்க எதிரொலித்தது. இக்கடும் இன்னலினை மீறி, கம்பீரை அணியின் தலைவனாக நியமித்தனர். அணைத்து ஜாம்பவ வீரர்களை வெளியேற்றிவிட்டு புதிய வீரர்களை இறக்கினர். அதில் ஓர் எடுத்துக்காட்டு பிரட் லீ, பிராட் ஹாடின், போன்ற வீரர்கள் உள்ளே வந்தார்கள். பலவித சர்ச்சைகள் வந்தது.
ஆனால், 2011ம் ஆண்டின் ஐபிஎல் தொடரில், கம்பீரின் தலைமையில் அடுத்த சுற்றுக்கு ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தகுதி பெற்றது. அவ்வாண்டின் இறுதியில் நான்காம் அணிகளின் பட்டியலில் நான்காம் இடத்தில் முடித்தது. அதற்கு அடுத்த ஆண்டு தங்களின் முதல் ஐபிஎல் கோப்பையினை வென்றது. அதற்கு பின் ஐயமே. 2014ம் ஆண்டில் இரண்டாவது கோப்பை, பின் 2013, 2015 மற்றும் 2019ம் ஆண்டுகளை தவிர்த்து மீதி அணைத்து ஆண்டுகளில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாத ஆண்டுகளிலும், ஒரு அடியில் அடுத்த சுற்றினை தவற விட்டது (2013ம் ஆண்டினை தவிர்த்து)
இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும், நான் எந்த அணியினை குறிப்பிட்டுள்ளேன் என்று. அந்த அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அவ்வணியின் முதலாளி பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாரான ஷாருக்கான், மற்றும் அவருடைய ரெட் சில்லீஸ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம்.
அவ்வணி முதலில் ஜாம்பவான்களை வாங்கியது. ஆனால் பின் இளம் வீரர்கள், மற்றும் குறைந்த ஓவர்களில் சிறந்து விளங்கும் வீரர்கள் மட்டுமே ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட முடியும் என்று புரிந்து கொண்டு, பின் அணி என்கிற ஒரு மாளிகையினை இடித்து மறுபடியும் முழுதாக கட்டினர். அதன் பரிசு, இரண்டு கோப்பைகள் மற்றும் இப்பொழுது அவர்களுக்கு கிடைக்கும் மரியாதை, பலன்கள். ஆனால் இவ்வணியின் இன்னல், ராஜஸ்தான் அணியினை போன்று வெளிநாட்டு வீரர்களின் அணிவகுப்பு. ஆனால், அவர்களை காட்டிலும் இவர்களின் வெளிநாட்டு வீரர்கள் பாதிக்கு பாதி நபர்கள் தங்களின் மதிப்பினை காட்டிலும் சிறப்பாக விளையாடினர், அது மட்டுமின்றி, இவ்வணியில் இந்திய வீரர்களும் உலக அளவில் விளையாடியவர்களே. ஆனால், இன்னொரு இன்னல் அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்கள். அதனை தேர்வு செய்வதில், சிறிது தவறு செய்கின்றனர். பேட் கம்மின்ஸ், லக்ஷ்மிபதி பாலாஜி, மோர்னே மோர்கெல் போன்ற சிலரை தவிர்த்தால், பல ஆண்டுகளாக அவ்வணியின் வேக பந்து வீச்சாளரின் அணிவகுப்பு அவ்வளவு சிறப்புற்று காணப்படவில்லை.
ஆனால், இவ்வணி ஓர் முயற்சியின் சிகரம். பல சிக்கல்களை கடந்து வந்தார்கள். அதனை நாம் அனைவரும் மறந்து விட கூடாது. இது ஓர் கிரிக்கெட் அணியா ?? என்பதிலிருந்து இதை போன்று அணி வேறு ஏதுமில்லை .... என்கிற வரை இவ்வணியின் பயணம் காட்டுகின்றது. இப்பொழுது முன்னைவிட இன்னும் அதிகமாய் இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை அணியினுள் தேர்வு செய்கிறார்கள்.

Comments
Post a Comment