சென்னை அணியின் முதல் கோப்பை - வரலாற்றில் இன்று
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஓர் ஜாம்பவான் அணி என்பது கிரிக்கெட் பார்க்கின்ற அனைவருக்கும் தெரியும். அவர்கள் 25வது ஏப்ரல், என்கிற தேதியில் 7 முறை விளையாடியுள்ளார்கள். அவ்வாறு அந்த தேதியிற்கும் சென்னை அணியிற்கும் அவ்வளவு நெருக்கும். ஆனால், அதிலுள்ள அனைத்து போட்டிகளிலும், சென்னை அணியிற்கு மிகவும் சிறப்புற்ற, மறக்க முடியாத போட்டி இதுவே ஆகும். ஏன்னென்றால், அவர்கள் தட்டி சென்ற முதற் ஐபிஎல் கோப்பை, இந்த போட்டியில் தான்.
2010ம் ஆண்டின் இறுதி போட்டி 25வது ஏப்ரல் அன்று, மும்பையில் நடைபெற்றது. மோதியது, இப்போது ஐபிஎலில் யார் கில்லாடி என்கிற வாய் தகராறில் உள்ள இரு அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ். டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஹெய்டன் மற்றும் முரளி விஜயின் அருமையாக தொடங்கினார்கள். இருவரும் பௌண்டரிகள் அடித்து, பவர்பிளே ஓவர்கள் நன்கு பயன்படுத்தினார்கள். ஆனால் பவர்பிளே ஓவர்களுக்கு பின், உடனுக்குடன் மூன்று விக்கெட்டுகளை இழந்தார்கள். அதனால், 12 ஓவர்களில் 68/3 என்று சென்னை அணியின் நிலை தேய்ந்து இருந்தது. மும்பை அணி, அந்நேரத்தில் வலுவுடன் இருந்தது. ஆனால், அவர்கள் எதிர்பாராதது ரெய்னாவின் பதிலடி. அவருடைய அதிரடி அரை சதம் மற்றும் தோனி. ஆல்பி மோர்கெல் இடையிடையில் அடித்த முக்கிய ரன்கள், சென்னை அணியினை இறுதியில் 168/5 என்ற இலக்கினை அடைய உதவியது. முக்கியமான செய்தி - அப்போதைய காலத்தில், ஐபிஎல் இறுதி போட்டியில் அடித்த பெரிய ஸ்கோர் இது. மும்பை அணி, சிறிது சிந்தனையுடன் இருந்தது.
மும்பை அணி அந்த இலக்கினை துரத்தி பிடிக்க மைதானத்தினுள் பேட்டிங் செய்ய வந்தார்கள். தொடக்கத்திலேயே, ஷிகர் தவான், தனது விக்கெட்டினை பறிகொடுத்தார். ஆனால் டெண்டுல்கர் மற்றும் அபிஷேக் நாயர், நன்றாக விளையாடி, படி படியாக ஸ்கோரினை உயர்த்தினர். ஆனால், அவர்கள் 11 ஓவர்களில் 67/1 என்ற நிலையில் இருந்தார்கள். ரன் ரேட் ஏற்ப ரன்களை சேர்க்காவிட்டாலும், பின்னர் அடித்து வேகமாக வாகனத்தை செலுத்துவதற்கு வீரர்கள் மிகுந்து இருந்தார்கள். சென்னை அணியிற்கு அந்த விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டிய நிலை. அந்நிலையினை புரிந்துக்கொண்டு, சரியான தருணத்தில் அபிஷேக் நாயர் பின்னர் 4வது இடத்தில் உள்ளே வந்த ஹர்பஜனும், வந்த விரைவில் மீண்டும் பெவிலியன் நோக்கி வெளியேறினார். டெண்டுல்கர் மிகவும் பொறுமையிழந்த நிலையில் தவறான ஷாட் ஒன்றை அடித்து தனது விக்கெட்டினை இழந்தார். அவர் சென்ற சிறிது நேரத்தில் சௌரப் மற்றும் டுமினி இருவருமே தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சென்னை அணி அன்று பந்து வீச்சில் மற்றும் ரன்களை காப்பதில் மிகவும் சிறப்புற்று தெரிந்தார்கள். ஆனால், அவர்களை அச்சுறுத்த வந்தார் பொல்லார்ட். 18 பந்துகளில் 55 ரன்கள் தேவை என்கிற நிலையில் போலிஞ்சர் பந்து வீச, அந்த ஓவரில் 22 ரன்களை குவித்தார் பொல்லார்ட். அதில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பௌண்டரிகளை குவித்து, போட்டி இன்னும் முடியவில்லை என்று சத்தமாக அறிவித்தார். அம்பத்தி ராயுடு, தனது விக்கெட்டினை விட்டுக்கொடுத்து பொல்லர்டினை விளையாட வைத்தார். அவர் இருக்கும் வரை மும்பை தான் வெற்றிபெறுவார்கள் என அனைவரும் ஆவலுடன் இருந்தார்கள். ஆனால், பாவம், அந்த நம்பிக்கையெல்லாம் பாழாக்கும் செயலாக டோனி ஆல்பி மோர்கெலிடம் பந்தினை கொடுத்து, மிட் ஆஃப் பகுதியில் ஹெய்டனை நிறுத்தினார். அவருடைய கணக்கு தவறாமல், பொல்லார்ட் ஹெய்டனிடம் கேட்ச் கொடுக்க, விக்கெட்டினை பறிகொடுத்து செல்ல, அவருடன் சேர்ந்து மும்பை அணியின் நம்பிக்கையும் திரும்ப சென்றது. 146/9 என்கிற நிலையில் மும்பை துரத்தி சென்ற இலக்கினை நெருங்க முடியாமல், பெட்ரோலின்றி நின்றது. சென்னை அணி கோப்பையை வென்றது. ஆட்ட நாயகன் விருதினை பெற்றது சுரேஷ் ரெய்னா - 57*(35)
இதை எவ்வித சென்னை அணியின் ரசிகனுக்கும் மறக்க மாட்டான். குறிப்பாக இந்த கோப்பை சென்னை அணியின் புகழ் எங்கும் பரவியது.
Comments
Post a Comment