ரெய்னா' விற்கு நடைபெற்ற சிக்கல்களின் ஓர் தொகுப்பு

ஆகஸ்ட் மாதம், 29ம் தேதியன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தரப்பிலிருந்து ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில், சென்னை அணியின் CEO'வான, திரு. காசி விஸ்வநாதன் அவர்கள் தெரிவித்தது யாதெனில், " சுரேஷ் ரெய்னா அவர்கள் இந்தியா'விற்கு திரும்பியுள்ளார். தனிப்பட்ட காரணங்களால், இவ்வாண்டின் IPL தொடரில் அவர் பங்குபெற மாட்டார். அவருடைய முடிவுக்கு, சென்னை அணி எப்போதும் துணை நிற்கும்" என'விருந்தது. இவற்றை கேள்விப்பட்ட சில நிமிடங்களிலேயே, ரசிகர்கள் மிகவும் வருத்தமுற்று காணப்பட்டனர். சமூக வலைத்தளங்களில், " Mr.IPL இல்லாத IPL தொடர் எங்களுக்கு வேண்டாம் " எனவும், ரெய்னா'வின் விலகளுக்கு முக்கிய காரணம், சென்னை அணியினுள் ஏற்பட்ட அதிக கொரோனா பாதிப்புகளே எனவும், அதனால் தான் அச்சம் கொண்டு வெளியேறியதாகவும் வதந்திகள் வெளிவந்தது. 

இவ்வதந்திகள் குறித்து அன்று மாலை, செய்திகள் வெளிவந்ததது. ஆகஸ்ட் மாதம், 19ம் தேதியன்று, ரெய்னா'வின் தாய்மாமனுடைய குடும்பத்தை, மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, அதில் தனது தாய்மாமன் அன்றே இறந்ததாகவும், மாமா'வின் குடும்பத்தார் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்திகள் பரவியது. இருப்பினும், சிலர்,  ஏற்கவில்லை. காரணம், சென்னையிலிருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் தொடர்ந்த நாள், ஆகஸ்ட் மாதம் 22ம் தேதியாகும். சந்தேகங்கள் பரவிக்கொள்ள, மறுநாள் வேறுவிதமான செய்தி வெளிவந்தது.

சென்னை அணியின் ownerஆன திரு. ஸ்ரீனிவாசன் அவர்கள் அவுட்லுக் பத்திரிகை நிறுவனத்துக்கு தன அளித்த பேட்டியில், " ரெய்னா அவர்கள் தான் எடுத்த முடிவை கண்டு நிச்சயம் வருந்துவார். அவருடைய முடிவு, எங்கள் அணியை சற்றும் பாதிக்காது. அவருக்கு விருப்பமில்லை என்றால் விடைபெற்றுக்கொள்ளலாம், யாரும் தடுக்க மாட்டோம். அவருடைய 11 கோடி சம்பளத்தை முழுவதுமாக இழந்து விடுவார்" என்றே பரவலாக செய்திகள் வெளிவர, வேறு சில ஊடக நிறுவனங்கள், இந்த செய்தியை பல வகையில், இணைத்து பேசினார்கள். 

அதில், வெளிவந்த தகவல் யாதெனில், " தோனி அவர்கள் சென்னையில், 5 நாட்களுக்கு மட்டும் பயிற்சியை மேற்கொண்டு பின்னர் ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம், என்று தனது யோசனையை தெரிவிக்க ரெய்னா அவர்களுக்கு சற்றும் இதன் மீது உடன்பாடு இல்லாமல் இருக்க, சென்னையிலேயே வாக்குதாம் ஏற்பட்டுள்ளது. பின்பு, ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றவுடன், ரெய்னா அவர்களுக்கு, ஜன்னல் இல்லாத அரை ஒன்று வழங்கியதால், தனக்கு மேலும் சினம் ஏற்பட்டுள்ளது. அதனோடு இனைந்து, சென்னை அணியினுள் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், விரிசல் மேலும் அதிகரித்தது எனவும், அதன் காரணத்தால், சென்னை அணியின் நிர்வாகம் முழுவதும், தோனியின் பக்கம் சாய்ந்ததால், ரெய்னா அவர்கள் சினம்கொண்டு வெளியேறியதாக" கூறினர். ஆனால், அனைவரும் அறிந்தது, ரெய்னா அவர்களுக்கும் தோனி அவர்களுக்கு இடையே உள்ள நட்பு. பல காலங்களாக, இனைந்து கிரிக்கெட் விளையாடி, அதில் இருவருமே, ஒரே நாளில், தங்களின் ஓய்வை அறிவித்தனர். இந்த இரு துருவங்களுக்குள், ஜன்னலின்மை காரணமாக வாக்குவாதம் வருவது, மேலும் குழப்பம் அளிக்கின்றது. 

மறுநாள், ஸ்ரீனிவாசன் கூறியது, " CSK நிர்வாகம், என்றும் ரெய்னா'வின் பக்கம் துணை நிற்கும். என்னுடைய வார்த்தைகள், சூழ்நிலையில் வெளிவந்தவை மட்டுமே" என்று குறிப்பிட, ஜன்னலின்மை எனும் செய்தி உறுதியாகியது. 

ஆனால், இன்று காலை தருணத்தில், ரெய்னா அவர்கள், தன்னுடைய Twitter பக்கத்தில் தெரிவித்தது, " பஞ்சாப் மாநிலத்தில் வசித்துக்கொண்டிருக்கும் எனது குடும்பத்துக்கு நடைபெற்ற சம்பவங்கள், மிகவும் கொடியனவாகும். என்னுடைய மாமா அவர்கள், இறந்துவிட்டார். என்னுடைய அத்தையும், சகோதரர்களும், மருத்துவமனையில் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். சோகம் யாதெனில், நேற்று இரவு, என்னுடைய சகோதரனும் இறந்து விட்டான். அத்தை அவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்" என்றும், " நான் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காவல் துறைக்கு ஓர் மனு அளிக்கின்றேன். யார், இதை செய்திருந்தாலும் அவர்களை கண்டறியுங்கள். இக்கொடிய சம்பவங்களை நிகழ்த்துவோரை, விட்டுவிடக் கூடாது " எனவும், தெரிவித்திருந்தார். 

தற்போது, பலருடைய மனதினுள் கேள்விகள் ஏற்பட்டிருக்கும்.அதில் ஒன்றானது, ரெய்னா இல்லையெனில், அவருடைய இடத்தை நிரப்பிக்கொள்ள, எந்த வீரர் களமிறங்குவார் ? திரு. ஸ்ரீஎனிவாசன், இரண்டு நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், ருதுராஜ் கைக்கவாத், அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். சென்னை அணியை பொறுத்தமட்டில், பல வீரர்கள் முதிர்ந்தோர் ஆவர். ஏதேனும் ஒரு நாளில், அவர்கள் தங்களின் ஓய்வினை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். நிச்சயம், இளம் வீரர்களைக்கொண்டு, ஓர் அணியை கட்டமைக்க வேண்டும். அதற்கு முதல் படி தான், ருதுராஜ் கைக்குவாத், எனும் 23 வயதுடைய வீரருக்கு வழங்கப்படும் வாய்ப்பு ஆகும். ஆனால், அப்போது முரளி விஜயின் நிலை ?. இவையனைத்திற்கும், நான் என்னுடைய, இவ்வாண்டின் அணி அலசலில், முழுவற்றும் தெரிவித்துக்கொள்கிறேன். அட்டவணை வெளியிடப்பட்டவுடன், அணிகளின் அலசல், நிச்சயம் வெளியிடுவேன்.        

ஆதலால், தனிப்பட்ட காரணங்களை, செய்தியாக மாற்றிக்கொள்ள திட்டமிடும் ஊடகங்களே, பணம் கிடைக்கவேண்டும், என்றே எண்ணி பல வதந்திகளையும், கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்களையும் கோர்த்து பேசும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். மக்கள் அனைவரும், உன்னை போன்று, என்னை போன்று, ஊடகங்களை மட்டும் நம்பி வாழ்கின்றார்கள். அவர்களுக்கு, உண்மையாக இருத்தல் என்பது, நம் கடமை ஆகும்.        

எனவே, சென்னை ரசிகர்களுக்கு, நான் கூறிக்கொள்வது ஒன்று மட்டும் தான். 

"என்னதான் நடக்கும், நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே 
தன்னாலே வெளிவரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கின்றான், மயங்காதே"  

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood