பெரிய ஸ்கோர் விருந்து - ஐபிஎல் வரலாற்றில் இன்று
சரியாக இன்று, 6 வருடங்களுக்கு முன், கிங்ஸ் 11 பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் என இரு அணிகளும், மும்பை வான்கடே மைதானத்தில், குவாலிஃபையர் 2 போட்டியில் மோதியது. இதற்கு முன், இவ்விரு அணிகள் சந்தித்த இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றது பஞ்சாப் அணியே. மற்றும், அந்த இரண்டு போட்டிகளிலும் பெரிய ஸ்கோர் போட்டியாகவே அமைந்தது. ஆனால், மற்றவற்றை புறம்தள்ளி, இப்போட்டியினை வெல்லும் அணியே இறுதிசுற்றுக்கு தகுதி பெரும். சென்னை அணியை பொறுத்த வரை அவர்களின் பந்துவீச்சு சிறிது சீரற்று காணப்பட்டது. ஆனால், மறுபுறம் பஞ்சாப் அணி, 2014ம் ஐபிஎல் தொடரின் சிறப்பான அணிகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும். அவ்வாறு, பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங், மூவகையிலும் வல்லவர்களாக திகழ்ந்தார்கள்.
டாஸ் வென்ற சென்னை அணி, வான்கடே பேட்டிங்'கிற்கு சாதகமாய் இருக்கும் மைதானத்தில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முடிவு சரியாக இருந்தாலும், பந்து வீச்சின் வலு சிறிது குறைந்து தான் இருந்தது. சேவாக் மற்றும் மனன் வொஹ்ரா, இருவரும் ஓப்பனிங் செய்ய வந்தார்கள். மிகவும் வலுவான தொடக்கத்தை வழங்கினார்கள். பவர்பிளே ஓவர்களில் முடிவில் ஸ்கோர் 70/0 என இருந்தது. சேவாக் பல நாட்களாக அடக்கி வைத்திருந்த எரிமலையினை அன்று வெடிக்க வைத்தார். இந்தியா அணியில் கடைசி 14 மாதங்களாக இடம் பெறாதது, தான் இதற்கு முன் விளையாடிய டெல்லி அணியிலிருந்து அவரை ஏலத்தில் வெளியிட்டது மற்றும் தனக்கு வயதாகிற்று, அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்த இனி சாத்தியமில்லை, என்கிற விமர்சனங்களும் மற்றும் பஞ்சாப் பல ஆண்டுகளுக்கு பிறகு பிளே-ஆஃப் சுற்றை அடைந்தது, மற்றும் அவர்களை முதல் இறுதி போட்டியிற்கு அழைத்து செல்ல வேண்டும் என்கிற கட்டாயம், இவையனைத்தும் சேவாக்கை பாதித்துள்ளது. அந்த பாதிப்பின் எதிரொலியாக இன்று சரமாரியாக பௌண்டரிகளை குவித்தார். சிக்ஸர்கள் வெகு எளிதாக குவிக்க, "ஐ யாம் பேக் " என்று மட்டையின் சத்தத்தினால் உரைத்தார். வழக்கமாக, மேக்ஸ்வெல் சென்னை அணியின் எதிராக மோதும்போது முழு பலத்தினை செலுத்துவார். ஆனால், அன்று சேவாகின் தினம். 21 பந்துகளில் அரை சத்தினை குவித்தார். சரி, இதற்கு பின் பொறுமையாக விளையாடுவார் என்று நினைத்தால், வேகத்தில் சிறிதும் குறைபாடு இல்லை. "சூழல் எவ்வாறாக இருந்தாலும், நான் என்னுடைய ஆட்டத்தை தான் விளையாடுவேன், இது தான் அசல் நான்" என சவாளுடன் அடித்தார். குறிப்பாக, ரவிச்சந்திரன் அஷ்வின் வீசிய ஓர் லெங்த் பந்தில், நேராக சிக்ஸர் அடிப்பார், அவையெல்லாம் அசல் சேவாகின் ஆட்டம் தான். 16வது ஓவரில், தனது சாதத்தை 51 பந்துகளை விளையாடி நிறைவு செய்தார். முரளி விஜயை அடுத்து, ஓர் இந்திய வீரர் ஐபிஎல் தொடரில் இரட்டை சத்தினை அடிப்பது இவர் தான் (பின் குறிப்பு:அப்போதைய காலத்தில்). அத்துடன் அவர் நிறுத்திவிடுவார் என நினைத்தால், அதுவும் நடக்க வில்லை. இவருடன் இனைந்து மில்லரும் பௌண்டரிகளை விலாச தொடங்கினார். அடுத்த 7 பந்துகளில் 22 ரன்களை குவித்தார் விரேந்தர் சேவாக். அவர் அடித்த 18 வது ஓவரிலேயே 200 ரன்களை கடந்தது பஞ்சாப் அணி. இறுதியாக 19வது ஓவரின் முதற் பந்தில், 58 பந்துகளை 122 ரன்களை குவித்து தனது விக்கெட்டை இழந்தார். ஃபிலிக் ஷாட் அடிக்க முயன்று, பாட்டின் அடிப்பகுதில் பந்து அடித்து, எக்ஸ்ட்ரா கவர் திசையில் நின்றிருந்த டு ப்ளஸிஸிடம் கேட்ச் கொடுத்து விட்டு சென்றார், அவருடைய இன்னிங்சில் 12 ஃபோர்கள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கியுள்ளது. அவர் ஆடிய ஆட்டம், பஞ்சாப் அணியினை 226/6 என்கிற மிகவும் அதிக ஸ்கோருக்கு அழைத்து சென்றது. சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் எண்களை நாம் பார்க்க கூடாது. மிகவும் பழுதாகிய நிலையில் காணப்பட்டது.
மிகவும் பெரிய ஸ்கோர் அடித்திருந்த இந்நிலையில், பஞ்சாப் தெளிவாக வெற்றியை ஈன்ற நிலையில் இருந்தது. ஆனால், சென்னை அணியினை பொறுத்த வரை, நாக்கவுட் சுற்று என வந்தாலே, அவர்களை வெற்றிக்கொள்வது மிகவும் கடின செயலாகும். முதல் பந்திலேயே டு ப்ளஸிஸ் தனது விக்கெட்டை இழக்க, அழுத்தம் சென்னை அணியின் மீது காணப்பட்டது. உள்ளே இறங்கினார் திரு. ஐபிஎல் சுரேஷ் ரெய்னா. உள்ளே இறங்கிய முதல் பந்திலிருந்து பௌண்டரிகளை விலாச தொடங்கினார். சிக்ஸர்களும், ஃபோர்களுமாய் மழை பொழிந்தது. நேரில் போட்டியை பார்த்தோருக்கு, நல்ல விருந்து என்றே கூறலாம். சேவாக் ஆடிய வேகத்தை விட, இவர் 2 மடங்கு வேகமாய் விளையாட, ஸ்கோரும் ஏறியது. வெறும் 16 பந்துகளில் தனது அரை சத்தினை எட்டினார். அவர் அடித்த சதத்தை விட, இது மிகவும் உக்கிரமான ஆட்டமாய் தெரிந்தது. 5 ஓவர்களில் முடிவில் 67/2 விக்கெட் என ஸ்கோர் இருந்தது. இப்போது பரவிந்தர் அவானா பந்துவீச வருகின்றார். 33 ரன்கள் அந்த ஒரு ஓவரினுள் குவிக்கப்பட்டது. முதல் இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் அடிக்க, மீதம் வீசிய அணைத்து பொந்துகளிலும் ஃபோர்களை அடித்தார். அதில் இன்னும் புருவத்தை உயர்த்தும் விஷயம், அந்த ஓவரில் நோ பால் பந்தினை அவானா வீசினார். அதையும் ஃபோர் அடித்தார். பவர்பிளே ஓவர்களில் முடிவில் 100/2 என ஸ்கோர் இருந்தது. அவர்களாவது 70 ரன்கள் தான் அடித்தார்கள், இவர்கள் 100 ரன்களை குவித்தார்கள் என்பது அதனை விட விரைவாக ஓர் இணையதள விளையாட்டில் சிக்ஸர் அடிப்பது மிகவும் எளிதாக அடித்தார்கள். 25 பந்துகளில் 87 ரன்கள் அடித்தார் சுரேஷ் ரெய்னா. இங்கிருந்து போட்டியை ஜெயிப்பது மிகவும் சுலபம் என நினைக்க, போட்டியில் திருப்பம் ஏற்பட்டது. பிரண்டன் மெக்கல்லம் தவறாக ஓடிய ரன்னின் காரணத்தினால், பையிலே வீசிய பந்தில் ரன் அவுட் செய்யப்பட்டார் சுரேஷ் ரெய்னா. சோகம் என்னவென்றால், பவர்பிளே ஓவர் முடிவடைந்த அடுத்த பந்தில் இது நடைபெற்றது. ரெய்னா 25 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார். அதில் 12 பௌண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. சேவாக் 18 ஓவர்கள் நின்று விளையாடிய ஆட்டத்தை, சுரேஷ் ரெய்னா வெறும் 6 ஓவர்களில் ஆடியுள்ளார். எனக்கு தனிப்பட்ட முறையில், கவர் திசையில் அவர் அடித்த சிக்ஸர், கண்களுக்கு இனியவையாக இருந்தது. இவர் அன்று செய்த சம்பவம் இந்தூர் வரை பேசப்படுகின்றது. சரி, இவர் தனது வேலையினை சிறப்பாக செய்து முடித்துவிட்டார். மற்றவர்கள் அவர்கள் வேலையினை தெளிவாக செய்வார்கள் என நாம் எதிர்பார்த்தால், தங்களின் விக்கெட்டுகளை இழந்துக்கொண்டே இருந்தார்கள். பஞ்சாப் அணி கிடைத்த ஒரு வாய்ப்பிலிருந்து பல வாய்ப்புகளை உருவாக்கியது. ஜார்ஜ் பையிலே சிறப்பாக அணியை வழிநடத்தினார். தோனி ஒரு புறம் ரன்களை அடிக்க மறுபுறம் சறுக்குமரம் விளையாடி கொண்டிருந்தார்கள். விக்கெட்டுகள் வீழ்ச்சி மிகவும் கூடியவையாக சென்னை அணியின் இன்னிங்க்ஸை பாதித்தது. உண்மையில், ரெய்னா விக்கெட்டை கொடுத்து விற்று சென்றவுடனே சென்னை அணியின் ஆட்டமும் சென்றது. இறுதியில் 202/7 என்று ஸ்கோரை அடித்தார்கள். 24 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்று தங்களின் முதல் இறுதிப்போட்டியை அடைந்தார்கள்.
ஆட்ட நாயகன் விருதினை விரேந்தர் சேவாக். ஆனால், உண்மையான ஆட நாயகன் விரேந்தர் சேவாக் மட்டுமல்ல சுரேஷ் ரெய்னாவும் தான்.
" தவுலூண்டு பையன் தான் டா, அவ்ளோ பெரிய இன்னிங்க்ஸையே கொண்டு போனான்" என்று வடசென்னை திரைப்படத்தின் வசன பாணியில் சுரேஷ் ரெய்னா விளையாடிய இன்னிங்க்ஸை நான்
குறிப்பிட்டுள்ளேன்.

Comments
Post a Comment