CSK vs KKR | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, சென்னைக்கும் கொல்கத்தாவுக்கு இடையில match நடந்துச்சு. இந்த match'அ பொறுத்த வரைக்கும், சென்னைக்கு ஜெயிச்சாலும் தோத்தாலும் ஒன்னும் கெடைக்காது. ஆனா, மத்த teamsலாம் சென்னை தான் ஜெய்காணும்னு ஆசையா இருப்பாங்க. அப்போ தான், கொல்கத்தா'ங்கிற ஒரு எதிரி playoffs raceல இருந்து வெளியேறுவான். இன்னொரு பக்கம், obvious'அ கொல்கத்தா ஜெயிச்சே ஆகணும். Toss ஜெயிக்கிற CSK, முதல்ல bowling choose பன்றாங்க. Nithish Ranaவோட excellent start மற்றும் Dinesh Kartikகோட smart finishing காரணமா, 172/6னு score அடிக்குறாங்க. ருதுராஜ் மறுபடியும் openingல எறங்கி, மீண்டும் மீண்டும் prove பண்ணுறாரு. ஒரு solid batsmanனா விஸ்வரூபமெடுத்து, bowlersஅ பந்தாடுறாரு. அவரைத்தாண்டி அம்பட்டி ராயுடு இடையில ஒரு cameo innings ஆடுறாரு. அது இல்லாம Jadejaவோட finishing காரணமா, கடைசி ballல chase பண்ணி ஜெயிக்குறாங்க.
இந்த match'ஓட Post Match Analysis videoவ என்னோட Cric_Muhan YouTube channelல post பண்ணியிருக்கேன். மறக்காம, click பண்ணி பாருங்க !
எங்க, இந்த match'அ KKR உண்மையிலேயே விட்டாங்க ? CSK எதுக்கு திடீருனு கண்கட்டுன பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க ? நெஜமாவே அந்த "Spark" இப்போ தான் வெளில வருதா ? Dew factor ஒரு காரணமா இருந்துச்சா ? இப்படி காதுக்கு வந்து விழுற கேள்விகள் பல இருக்குது. அதுக்கான answers'அ இந்த blogல நாம பார்க்கலாம்.
இந்த match'அ பொறுத்த வரைக்கும், உண்மையான turning point, மறுபடியும் KKR'ஓட middle order batting failure தான். Dew வரும்ங்கிற factorர புரிஞ்சிகிட்டு, அதுக்கு ஏத்த இவங்க 185க்கும் மேல score பண்ணியிருக்கலாம். அத Nithish Ranaவால மட்டும் பண்ண முடியாது. சரி அது இல்லாம, ஒரு pointல KKR gameகுள்ள வந்துட்டாங்க. ஆனா, Fergusonனோட full toss balls, ஜடேஜா'க்கு அல்வா மாதிரி அமைஞ்சுது. அதுக்கும் காரணம் Dew தான். So, planningல error நடந்துச்சு.
Comments
Post a Comment