ஐபிஎல் வரலாற்றில் இன்று
சரியாக இன்று, ஒரு வருடத்திற்கு முன், ஈடன் கார்டன் மைதானத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதியது.
(இங்கு சிரிப்பதற்காக சில கலாய்கள் உள்ளன, மனதினை புண்படுத்துவதற்கு அல்ல என முன்பாகவே நான் குறிப்பிடுகிறேன் )
கோலியின் பெங்களூரு அணி, இதற்கு முன் விளையாடிய 8 போட்டிகளில் ஒன்றை மட்டும் வென்று, மீதி 7 போட்டிகளை எதிரணிக்கு வெற்றியாக பரிசளித்தனர். சில போட்டிகளில், இவர்களை சுற்றி சனிபகவான் இருக்கின்றான் என்பது தோன்றுகிறது. அமானுஷ்யம் பேசுபவன் அல்ல நான். ஆனால் அவர்கள் இரு போட்டிகளில் வெற்றியின் அருகில் வந்து தோற்றனர், குறிப்பாக மும்பை அணி எதிராக நடுவர் கண்டுக்கொள்ளாமல் விட்ட கடைசி பந்தில் நோ பால் பிரச்சனை. அதன் காரணமா மும்பை அணி வென்றது. ஆனால், இவ்வாறு உள்ள நொண்டி காரணங்களை புறந்தள்ளி, அவர்கள் இனி வரும் போட்டிகளை வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் இதற்கு முன் விளையாடிய போட்டியில், 18 பந்துகளில் அவர்கள்(கொல்கத்தா) 53 ரன்களை அடிக்க வேண்டிய நிலை. பந்துவீச்சில் உள்ள எவ்வணியாக இருந்தாலும், அந்நிலையில் வெற்றி சுலபம் என்றே எண்ணிருப்பர். அவ்வாறே பெங்களூரு அணியும் எண்ணினர். ஆனால் பாவம் என்ன செய்வது, அன்று ரசல் அடித்த சிக்ஸர் வெள்ளத்தில், பெங்களூரு அணியின் நம்பிக்கை மொத்தமும் அடித்துச் செல்லப்பட்டது. 5 பந்துகளை மிச்சம் வைத்து கொல்கத்தா அணி அப்போட்டியை வென்றது.
இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதற்கு மும்முறை 205 ரன்களை அடித்து தோற்றனர் பெங்களூரு அணி. இம்முறை இன்னும் அதிகமாக ருங்கள் சேர்க்க வேண்டும் என்று எண்ணி, சிறப்பாக விளையாடினர். கோலி மற்றும் மொயின் அலி, இருவரும் சரமாரியாக பந்துவீச்சாளர்களை தாக்கினர். குறிப்பாக, சூழல் பந்து வீச்சாளரான குலதீப் யாதவ், பாவமின்றி தாக்கப்பட்டு 4 ஓவர்களில் 59 ரன்களை வழங்கினார். இவர்கள் இருவர் மற்றும் ஸ்டோய்னிஸுடன் சேர்ந்து இறுதியில் கோலி முழு வேகத்தினை காட்டினார். தன்னுடைய 5வது ஐபிஎல் சதத்தினை இங்கு பதிவு செய்தார். பார்வையாளர்கள் மனதில்( யாரு சாமி நீங்கள், எவ்வித கிரிக்கெட்டாக இருந்தாலும், அங்கு சதங்களை மிக சாதாரணமாக பதிவு செய்கிறீர்) என் என்னும் அளவில் அவருடைய ஆட்டம் இருந்தது. பெங்களூரு அணி 213/4 என, இமாலய ஸ்கோரினை அடித்தார்கள். மெயின் அலி, தன்னுடைய பங்கிற்கு 66 ரன்களை அடித்தார். கோலி 100 ரன்கள் அடித்த பின் கடைசி பந்தில் விக்கெட்டினை இழந்தார்.
கொல்கத்தா அணி, பெங்களூரு அணியினை போல் அவ்வளவு நல்ல தொடக்கம் அமையவில்லை. டேல் ஸ்டெய்ன் பந்து வீச்சில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தார்கள். "உங்களுக்கு இன்னும் வயதாகவில்லை" என அவர் அணியினுள் திரும்பியவுடன் முதலிலே தாக்கினார். பின் ராபின் உத்தப்பா, திக்கி தடுமாறி 20 பந்துகளில் வெறும் 9 ரன்கள் அடித்து அவருடைய விக்கெட்டினை பறிகொடுத்தார். முதல் 12 ஓவர்களில், 81/4 என நிலையில் இருந்தது. மறுபடியும் இலக்கு மிக தூரமாக இருந்தது. நிறைய சிக்ஸர்களை அடித்தால் மட்டுமே வெற்றியினை பற்றி நினைக்க இயலும். மைதானத்தின் உள்ளே நுழைந்தார் ஆண்ட்ரே ரசல். ராணா ஒருவர் ஏற்கனவே, வேகமாக ரன்களை சேர்த்து இருந்தார். ரசல் வந்தவுடன் பௌண்டரி மழை பொழிய தொடங்கியது. 15வது ஓவரில் 121/4 என கொல்கத்தா ரன்களை எடுத்திருந்தார். பத்தாது, என அவர்களுக்கு தெரிந்தது. ரசல் பலநாள் பட்டினியாக கிடந்த யானையிடம் அமிர்தத்தினை படைத்தால், எவ்வாறு தின்று தீர்த்துவிடுமோ, அவ்வாறு அன்று ரசல் பெங்களூரு பந்துவீச்சாளர்களை ஒரு வழி ஆக்கிவிட்டார். மறுபுறம் ராணாவும் தன்னால் முடிந்த பௌண்டரிகளை அடித்தார். கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவை என்கிற நிலையிற்கு கொண்டு வந்தனர். ரசல் மட்டுமே 8 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு ஃபோர்கள் இக்கடைசி ஓவருக்கு முன் அடித்திருந்தார். ராணா இவ்வோவருக்கு முன் 78(43) அடித்து இருந்தார். கடைசி ஓவர், முதல் பந்து , ரன் ஏதும் இல்லை. இருந்தாவது பந்து வீச வருகிறார் மொயின் அலி. 1 ரன் எடுத்து ரஸ்ஸலிடம் கொடுத்தார். ரசல் முதுகுவலியின் மத்தியில் இவ்வளவு ரன்களை சேர்த்தார். மூன்றாவது பந்து வீச வந்தார். சிக்ஸர் !!. மூன்று பந்துகளில் 17 ரன்கள் தேவை. ரசல் இருக்கும்வரை கவலை கிடையாது, கொல்கத்தா அணியின் ரசிகர்களை பொறுத்த வரை. ஆனால், வீசிய நான்காவது பந்தில் அவருடடைய மட்டையில் சரியாக அமையவில்லை, ஆதலால் ரன் ஏதும் எடுக்க வில்லை. அதற்கு அடுத்த பந்து ரன் அவுட் ஆனார், ரசல். 17 ரன்கள் தேவை ஒரே பந்தில். ராணா சிக்ஸர் அடித்தார், போட்டியினை பெங்களூரு அணி 10 ரங்களில் வென்றது.
கொல்கத்தா அணி ஓர் பழமொழியினை உண்மையாகியுள்ளார்கள். "போராடி தொற்றுப்பார், ஜெயித்தவனும் உன்னை மறக்க மாட்டான்". அன்று வெற்றியினை பெற்ற பெங்களூரு அணி, தங்களின் மனதில் " 210க்கு மேல் அடித்தும் நம்மால் வெறும் 10 ரன்கள் வேறுபாட்டில் தான் ஜெயிக்க முடிந்தது" என நிச்சயம் எண்ணிருப்பர். பெங்களூரு அணி ஜெயித்ததால் ஆட்ட நாயகன் விருதினை பெற்றது விராட் கோலி. ஆனால், உண்மையான ஆட்ட நாயகர்கள் அன்று நிதிஷ் ராணா மற்றும் ஆண்ட்ரே ரசல். நிதிஷ் ராணா 46 பந்துகளில் 85 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரசல் 65 ரன்களை வெறும் 25 பந்துகளில் அடித்திருந்தார். மிகவும் மாறுபட்ட, ரசிகர்களால் வரவேற்கப்பட்ட ஓர் போட்டி
பெங்களூரு அணிக்கு இம்முறையானது காற்று அவர்கள் திசையினை நோக்கி வீசியது. ஆனால் இவ்விரு அணிகள் மோதிய இரண்டு போட்டிகளிலும் பெங்களூரு அணிக்கு எமனாக இருந்தவர் ஆண்ட்ரே ரசல்.

Comments
Post a Comment