MI vs DC | Grand Finale | IPL 2020 | திருப்புமுனை Segment
நேத்து, மும்பைக்கும் டெல்லிக்கும் இடையில, இந்த வருஷ IPL'லோட Final match நடந்துச்சு. Toss ஜெயிக்கிற டெல்லி அணி முதல்ல batting choose பன்றாங்க. இதுக்கு முன்னாடி அவங்க chasingல எல்லா முறையும் சொதப்பியிருக்காங்க. அது காரணமா முதல்ல batting பண்ணி, score defend பண்ணிடலாம்ன்னு ஒரு confidenceல இந்த decision எடுக்குறாங்க. ஆரம்பத்துலயே சரிவு ஏற்பட்டாலும், பின்னாடி ஷ்ரேயஸ் மற்றும் பண்ட் சேர்ந்து fight பன்றாங்க. 156/7னு ஒரு fighting score அடிச்சாலும், மும்பையோட batsmanகளுக்கு இது கொஞ்சம் கூட பத்தாது. ஈஸியா chase பண்ணிட்டு, cup'அ easy'யா ஜெய்ச்சிட்டு போயிட்டாங்க.
இந்த match'ஓட Post Match Analysis videoவ என்னோட Cric Muhan YouTube channelல post பண்ணியிருக்கேன். இந்த IPL'ஓட கடைசி video இது தான். அப்போ இனிமே, videoவே கெடயாதானு கேட்டா, இனிமே international series'ஓட Pre & Post Match Analysis videos post பண்ணுவேன். மத்த நாட்டுல நடக்குற seriesலாம் blogலயும் Podcastலயும் update பண்ணுவேன்னு இங்க நான் announce பண்ணிக்கிறேன்.
இந்த வருஷ IPL'ஓட கடைசி திருப்புமுனை segment இது தான். வழவழ'ன்னு பேசாம straight'அ விஷயத்துக்கு நான் வரேன். இந்த match'அ பொறுத்த வரைக்கும், உண்மையான turning point, மும்பையோட planning தான். First Innings Bowlingல, Boultகும் bumrahவுக்கும் நல்ல swing இருந்துச்சு. அந்த swingக நல்லா பயன்படுத்தி, Stoinis'அ கனக்கச்சிதமா dismiss பண்ணாரு, கூடவே Rahaneவையும் தூக்குறாரு. Rohit Sharma அவர்கள் surprise'அ Jayant Yadavவ உள்ள கொண்டு வராரு. Rahul Chahar வெச்சு move பண்ணியிருந்தாலுமே நல்ல result கெடச்சிருக்கும். ஆனா, பரவாயில்லை left handers இருக்காங்க, ஒரு frontline off spinner'ஓட போவோம்னு உள்ள வராங்க, அந்த திட்டமும் வேலை செய்யுது. Pant மற்றும் Shreyas, நல்ல ஆடுறாங்க, பின்னாடி oversல பெருசா movement இல்லங்கிற விஷயத்தை புரிஞ்சிகிட்டு, Coulternile மற்றும் Boult சேர்ந்து slower short balls போட்டாங்க. அதுல மாட்டுனது Hetmyer, Akshar Patel மற்றும் Rishabh Pant. So, எங்கலாம் அந்த scoring rate அதிகம் ஆகுற மாதிரி இருக்குதோ, அப்போ லாம் strategicalலா dismiss பண்ணியிருக்காங்க, மும்பை இந்தியன்ஸ்.
Comments
Post a Comment