சிறிய ஸ்கோர் - பெரிய வெற்றி

இன்று, 5 வருடங்களுக்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சேப்பாக்கத்தில் மோதியது. ஏற்கனவே அவ்வாண்டில், சென்னை அணி, தங்களின் முதல் போட்டியினை 1 ரன் வித்தியாசத்தில் வென்றது. 

டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் வழக்கத்திற்கு மாறாக, சென்னை மைதானத்தில் பந்துவீச்சைனை தேர்ந்தெடுத்தார்கள். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, மிகவும் அருமையான தொடக்கத்தினை வழங்கினார்கள். பிரண்டன் மெக்கல்லம் மற்றும் டுவெயின் ஸ்மித் பந்துகளை பௌண்டரிகளுக்கு அடித்து தள்ளினார். அதுவும் முதல் 6 ஓவர்களில் 53 ரன்களை குவித்தார்கள். போட்டியின் தொடக்கத்திற்கு முன், வர்ணனையாளர்கள் 160 - 180 வரை சென்னை அணி அடிப்பார்கள் என கணித்தார்கள். ஆனால், நிஜ உலகம் எதிர்பார்ப்பினை விட மிகவும் விசித்திரமானது என்கிற பழமொழியினை நாம் அறிந்திருப்போம். அன்று, அது தான் நடந்தது. பவர்பிளே ஓவர்களுக்கு பின், சென்னை அணியின் ஆட்டத்தில் தேய்வு ஏற்பட்டது. விக்கெட்டுகள் ஒரு புறம் விழ, மறுபுறத்தில் பந்து பேட்டிற்கு வராமல், சற்று குறைந்த வேகத்தில் வந்தது. அதன் காரணமாக, சென்னை அணியினால் 134/6 என்கிற மிக குறைந்த ஸ்கோரில் முடித்தது. கம்பீர் மிகவும் சிறப்பாக அணியினை வழி நடத்தினார். பௌண்டரிகள் செல்லும் வழியினை தடுத்து நிறுத்தி, ரன்களை சிறப்பாக கட்டுப்படுத்தினார்.


போட்டி எளிதாக முடிந்து விடும், என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். அதற்கு ஏற்றவாறு, கொல்கத்தா அணி பவர்பிளே ஓவர்களில் 53/1 என்கிற நல்ல நிலையில் இருந்தது, கம்பீரை தொடக்கத்தில் இழந்தும். ஆனால், இரண்டாம் இன்னிங்சில், சுழற் பந்துவீச்சாளர்களுக்கு நன்கு பிட்ச் வேலைசெய்தது. அது மட்டுமின்றி, பீல்டிங்கில் வழக்கம் போன்று ஜொலித்தார்கள். ஆனால், அன்று டெண் டொஸ்க்காடே என்கிற ஒரு பேட்ஸ்மேன் அச்சுறுத்த தொடங்கினார். தனி ஒருவனாக போராடினார். ஆனால் மறுபுறத்தில் பிராவோ, வருகின்ற வீரர்களின் விக்கெட்டுகளை பறித்துக்கொண்டு இருந்தார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை. அங்கு ரியான் டென்டோஸ்க்காடே, தனி ஒருவனாக பௌண்டரிகளை விளாசினார். கடைசி 2 பந்துகளில் 13 ரன்கள் தேவை. இரண்டு சிஸேர்கள் அடித்தால், போட்டி சாமானில் முடிந்து விடும். பிராவோ, தேவையற்ற பந்துகளை வீசக்கூடாது, என்கிற நிலை. அதற்கு ஏற்றவாறு 6 அடித்தார். கடைசி பந்தில் 7 ரன்கள் தேவை. அப்போது பந்தினை பிராவோ வீச, 4 ரன்களை அடிக்கின்றார்  ரியான் டெண்டோஸ்க்காடே. பாவம் போராடிவிட்டும் தோற்றார்கள். இறுதியில் 132/9 என்று முடித்தார்கள். ஆட்ட நாயகன் - பிராவோ (3/22)

சென்னையின் வெற்றியினை கோமாளி படத்தின் பாணியில் " கிளோஸ் மேட்சஸ்ல நான் கிங்'கு டா"    

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?