தோனி ரசிகர்கள் மறவாத இரு போட்டிகள்
ஐபிஎல் வரலாற்றில் இன்று
ஏப்ரல் 21, 2012 - சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே நடந்த போட்டி. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்கள். அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், பிட்ச் மிகவும் வேலையினை காட்டியது. அன்று மிகவும் மெதுவாக ஆட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளார்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. மிகவும் பொறுத்து பொறுமையாக அரை சத்தினை அடித்தார் ஓவாயிஸ் ஷா. பார்வையாளர்கள் மனதில் " ஏனடா நீங்கள் ஐபிஎலில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறீர்கள் ?", " நாங்கள் அதிரடி கிரிக்கெட்டினை மற்றுமே காண வந்துள்ளோம்" என மிகவும் பொறுமையிழந்து இருந்தார்கள். 20 ஓவர் முடிவில், 146/4 என்கிற சிறிய ஸ்கோரினை அடித்தார்கள் ராஜஸ்தான் ராயல்ஸ். பந்து வீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்தினர் (இந்த போட்டியில் ரன்களை கட்டுப்படுத்தாமல், வாரி வழங்கினால் தான் குற்றமே)
சென்னை அணி ராஜஸ்தான் போன்றல்லாது மிகவும் தெளிவான தொடக்கத்தினை கொடுத்தனர். டூ ப்ளஸிஸ் அருமையான அரை சத்தினை அடித்தார். சரி, இவர்களாவது கொஞ்சம் விரைவாக ரன்களை அடிக்கிறார்கள் என்று பார்த்தால், பவர்ப்பிளே முடிந்த பின் இவர்களும் பொறுமையாக விளையாட ஆரம்பித்தனர். 29 ரன்கள் 18 பந்துகளில் தேவை என்கிற நிலையில் 2 விக்கெட்டுகள் இழந்தது சென்னை அணி. உள் நுழைந்தார்கள் பிராவோ மற்றும் தோனி. இருவரும் ஆளுக்கு ஒரேய ஒரு பௌண்டரியினை மட்டும் அடித்தார்கள். ஆனால், ஒன்று இரண்டுகளை அழகாக திருடிக்கொண்டே இருந்தனர். கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை. பின்னி பந்து வீச வருகிறார். முதல் பந்து, ஒன்று எடுக்கிறார் பிராவோ. இரண்டாவது பந்தினை வீசவருகிறார் பின்னி. மறுபடியும் 1. மூன்றாவது பந்து, ரெண்டு !!. 4 ரன்கள் தேவை 3 பந்துகளில். அடுத்த பந்து, தோனி 1 ரன்னை எடுக்கிறார். அடுத்த பந்து பிராவோ 1 ரன்னை எடுக்கிறார் !!. கடைசி பந்து, தேவை இரண்டு ரன்கள். மைதானத்தில் உள்ள ரசிகர்கள் எழுந்து நின்றனர். அனைவரிடத்திலும் படபடப்பு. ( பொறுமையிலும் படபடப்பு உங்களால் மட்டுமே கொடுக்க இயலும் ). ஆனால், தோனி பல ஆண்டுகளாக செய்ததை இங்கு சர்வ சாதாரணமாக செய்கிறார். அனைவரும் அவர் பௌண்டரி அடித்து போட்டியினை முடிப்பார் என் எண்ணிய பொழுது , தோணி அழகாக பந்தினை மிட் விக்கெட் திசையில் தட்டிவிட்டு, 2 ரன்களை ஓடி எடுத்து வெற்றியினை ஈன்றார். பொறுமை, மலையளவு அமைதியின் முழு வெளிப்பாடு அன்று தெரிந்தது. போட்டியினை இவ்வாறும் வென்று கொடுக்கலாம். அதிரடி கிரிக்கெட் பாபவர்களுக்கு இம்முறை புடிக்காது, ஆனால் உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு இம்முறை மிகவும் பிடிக்கும். ஆட்ட நாயகன் விருதினை வென்றது டூ ப்ளஸிஸ், தன்னுடைய 73 (52) காரணமாக.
ஏப்ரல் 21, 2019 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே நடந்த போட்டி. சென்னை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் பல ஆண்டுகளாக வாய்கதகறாரு மட்டும் தான் நடந்துட்டு இருக்கு. தோனி - கோலி ரசிகர்களின் யார் ஜாம்பவான் என்கிற போட்டி. பொதுவாழ்வில் தமிழ்நாடு கர்நாடக தண்ணீர் பிரச்சனை, போல பல விஷயங்கள் அடங்கியிருக்கு. ஆனால், பெங்களூரு அணியுடன் சென்னை அணியினை ஒப்பிட்டுப்பார்த்தால் , பெங்களூரு அணி மிகவும் குறைந்த போட்டிகளை மட்டுமே வென்றுள்ளது. அவர்கள், தனிப்பட்ட முறையில் இவ்வாண்டில் இனிமேல் வருகின்ற அணைத்து போட்டியினையுமே வெல்லவேண்டும், என்கிற பாவநிலை. டோனி ரசிகர்களுக்கு மிகவும் மறக்க முடியாத போட்டியாக அமைந்தது. டாஸ் வென்ற சென்னை அணி, முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. பார்திவ் படேல் மிகவும் அருமையான அரைசதத்தினை பதிவு செய்தார். இடையில் விளையாடிய வீரர்கள், அங்கங்கு சில ரன்களை சேர்த்து அதனை பெரிதாக மாற்றத்தவறி தங்களின் விக்கெட்டுகளை இழந்தார்கள். இறுதியில் மெயின் அலியின் சில பௌண்டரிகளின் காரணமாக 161/7 என்கிற நடுநிலை ஸ்கோரினை அடித்தார்கள். தீபக் சஹர் அருமையாக பந்துவீசினார்.
என்ன தான் பெங்களூரில், இது நடுநிலை 50 - 50 ரன்னாக இருந்தாலும், சென்னை அணியில் உள்ள அணைத்து பேட்ஸ்மேன்களின் ஒழுங்கற்ற ஆட்டமாதலால், இதுவே பெரிய இலக்காக தெரிந்தது. ( இவ்வளவு பெரிய இலக்கினை கொடுத்திருக்கார்கள், இன்றாவது நன்றாக விளையாடுங்கள்) என்று அணைத்து சென்னை ரசிகர்கள் மனதில் படபடத்து இருந்தனர். நினைத்தப்படியாக முதல் நான்கு விக்கெட்டுகள் சர்ரென்று வீழ்த்தப்பட்டது. உள்ளிருந்து தோனி மற்றும் ராயுடு. சில ரன்களை இவர்கள் சேர்ந்து சேர்த்தனர். ஆனால் இடையில் சில விக்கெட்டுகள் விழுந்தது. டோனி ஒரு புறம், தனியாக பந்துகளை பௌண்டரிகளுக்கு அனுப்பிட்டு இருந்தார். அரை சாதத்தினை நிறைவேற்றார். கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவை !!. ஓவர் தொடங்கும் முன் கோழி மற்றும் அணைத்து பெங்களூரு ரசிகர்கள் மனத்திலும், "நம் மிகவும் எளிதாக வென்றுவிடலாம்" என்று நினைத்தார்கள். ஆனால் பார்க்க தவறியது, உள்ளேயிருந்த தோனி. உமேஷ் யாதவ் பந்தினை வீச, முதல் பந்தில் 4. இரண்டாவது பந்தில் 6, அதுவும் மைதானத்தை விட்டு வெளியே அடித்தார் தோனி. மூன்றாவது பந்தும் 6 !!. இப்போது தான் போட்டி உள்ளது என உணர்ந்தார்கள். நான்காவது பந்து, 2 ரன்களை எடுத்தார் தோனி. ஐந்தாவது பந்து, அதுவும் 6 !!!. கோலி முகத்தில் வேர்த்து வழிந்தது. ஆட்டத்தினை மீண்டும் சென்னையின் பக்கம் கொண்டு வந்தார் தோனி. கடைசி பந்து, மெதுவாக வந்தது. டோனி அதை விட்டுவிட்டு, பை ரன்களை நோக்கி ஓட, மாரு புறத்தில் இருந்து இம்மூலையினை நோக்கி ஓடினார் தாகூர். கீப்பிங்கில் இருந்த பார்த்திவ் படேல் சரியாக ஸ்டம்பினை நோக்கி பந்தினை அடிக்கிறார். தாகூர் சரியான நேரத்தில், கோட்டை அடைந்தாரா ?. அவர் கோடினை தொட்டிருப்பார், என சென்னை ரசிகர்கள் நினைத்தார்கள்.
ஆனால் துரதிஷ்டவசமாக, அவர் கோடினை தொட முடியவில்லை. பெங்களூரு 1 ரன்னில் வெற்றியினை ஈன்றனர். ஆனால் வெற்றிபெற்ற கோலியும் டோனியின் கடைசி ஓவர் சர்வேடியினை மறந்திருக்க மாட்டார் !!, அவர் தன்னுடைய நேர்காணலில் " தோனி எங்களுக்கு உயிர் பயத்தினை காட்டியுள்ளார்", என்றார். சென்னை அணி தோற்றாலும் அவ்வணியின் ரசிகர்கள் இப்போட்டியினை கொண்டாடினர். "வயதானாலும் இன்னும் உங்களின் ஆட்டம் தேய்ந்து போகவில்லை"
ஆட்ட நாயகன் விருந்தினை வென்றது - பார்த்திவ் படேல். ஆனால், உண்மையான ஆட்ட நாயகன் மஹேந்திர சிங் தோனி தான். பெங்களூரு அணியின் மனதில் "ஒரு போட்டியாவது படபடப்பு இல்லாமல், எளிதாக ஜெயிக்க முடியவில்லை. வருகின்ற அனைத்து அணிகளும் எங்களுக்கு தலைவலியினை கொடுக்கின்றார்கள்"
Super Bro
ReplyDelete