ஒரு தலைவன் உருவாகிய தினம்
அனைவருக்கும் தெரிந்திருக்கும் நாளை இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவின் பிறந்தநாள். நாளையில் தானே பிறந்த நாள், இன்று ஏன் இவரைப்பற்றி விமர்சனம் பதிவிடுகின்றாய் ? என நீங்கள் நினைப்பது எனக்கு புரிகின்றது, ஆனால் முழு பதிவினை படித்த பிறகு உங்களுக்கு புரியும். நான் இன்றைய தேதியில் நடைபெற்ற சிறப்புவாய்ந்த ஐபிஎல் போட்டிகளை எவ்வாறு என தேடும்போது, எனக்கு ஒரு முக்கியமான செய்தி கிடைத்தது.
7 வருடங்களுக்கு முன், இன்று, மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் 11 பஞ்சாப் அணி, மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. அன்று தான், முதல் முறையாக, ரோஹித் ஷர்மா மும்பை அணியிற்காக தலைமை பொறுப்பு ஏற்று விளையாடும் முதல் போட்டி. இப்போது நமக்கு தெரியும் அவர் பேட்டிங் மற்றும் தலைவனாக மிக சிறப்புடையவர் என்று, ஆனால் இதற்கு பிள்ளையார் சுழி இட்டது இப்போட்டியில் தான்.
டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா, உடனே பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. டெண்டுல்கர், தனது விக்கெட்டினை உடனடியாகவே இழந்தார். முதல் 6 ஓவர்களில் வெறும் 36/1 என்று மிக குறைந்த நிலையில் இருந்தது. அங்கிருந்து, டுவெயின் ஸ்மித் மற்றும் தினேஷ் கார்த்திக் அடித்து ஸ்கோரினை உயர்த்துவர் என அனைவரும் எண்ணிக்கொண்டு இருந்தார்கள். ஆனால், எதிர்பாராதது, தினேஷ் கார்த்திக் தனது விக்கெட்டினை இழந்தார். அதனால் முதல் 10 ஓவர் முடிவில் 56/2 என்று இருந்தது. அடுத்த 10 ஓவர்களில் 100 ரன்கள், அடித்தால் கூட 156 தான் வரும், அதனைவைத்து மும்பையின் பேட்டிங் பிட்சில் போட்டியினை வெல்வது என நினைத்தல் கடினம். எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் செயலாக டுவெயின் ஸ்மித்தும் தனது விக்கெட்டினை இழந்தார். ஆனால், அணியின் தலைமை பொறுப்பேற்ற ரோஹித் சர்மா மற்றும் அணியின் அடியாளாக( 6 அடிப்பவரை குறிக்கின்றேன்) பொல்லார்ட்டின் தோள்களில் முழு பாரமும் இருந்தது. ஆனால், இருவரும் செய்தனர். குறிப்பாக ரோஹித் ஷர்மா, தலைவனாக முதல் போட்டியிலேயே ஜொலித்தார். கடைசி ஓவரில் 147/3 என்கிற ஸ்கோரில் மும்பை அணி இருந்தது. அங்கு பஞ்சாப் அணி செய்த தவற்று டேவிட் ஹஸியிடம் பந்தினை கொடுத்தார், ஆனால் என்ன செய்வது வேறு பந்துவீச்சாளர் அந்நேரத்தில் எவரும் இல்லை. பலனை அனுபவித்தார். கடைசி ஒரு ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகளை அடித்து 27 ரன்கள், அந்த ஒரு ஓவரில் மட்டும் குவித்தார். அதன் காரணமாக 174/3 என்கிற தேவையான ரன்களை பதிவிட்டார்கள். ரோஹித் சர்மா 39 பந்துகளில் 79 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். போக்கிரி திரைப்படம் பாணியில் " எப்போ வரோம்னு முக்கியம் இல்ல, எப்படி ரன் அடிக்கிறோம்னு தான் முக்கியம் "
பஞ்சாப் அணி, அவ்விலக்கினை துரத்தி பிடிக்க களம் இறங்கியது. இன்னிங்சின் தொடக்கத்திலிருந்து விக்கெட்டுகளை தேவையான நேரத்தில் இழந்தார்கள், ஆனால் ரன் ரேட்டை தெளிவாக கணக்கிட்டு ஆடினார்கள். ஆனால், டேவிட் ஹஸி முக்கிய நேரத்தில் விக்கெட்டினை இழந்த பின், ஒரு புறம் டேவிட் மில்லர் தனியாக போராடி போட்டியினை உயிருடன் வைத்தார். ஆனால், மறுபுறத்தில் விக்கெட்டுகள் சறுக்குமரத்திலிருந்து ஓர் குழந்தை சறுக்கி விழுவது போல், சரிந்தது. ஆனால், ரோஹித் ஷர்மா, புரிந்துக்கொண்டார், டேவிட் மில்லரை விக்கெட் எடுக்காமல் வைத்தால், கண்டிப்பாக போட்டியினை அவர்கள் சார்பாக மாற்றி சென்றுவிடுவார். அதற்காக டேவிட் மில்லருக்கு வேலையினை விரித்தார். டேவிட் மில்லருக்கு எக்ஸ்ட்ரா கவர் மற்றும் மிட் ஆஃப் திசையில் ஃபீல்டர்களை நிறுத்தி வைத்து, இடது காய் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜோன்சனிடம் பந்தினை ஒப்படைத்தார். இவையெல்லாம் 18 வது ஓவரில் நடந்தது. மில்லர் முதல் முறை, சிக்ஸர் அடித்தார். ஆனால், இரண்டாவது முறை, யார்க்கர் பந்தினை வீச, பாட்டின் அடிப்பகுதில் பந்து அடித்து, எக்ஸ்ட்ரா காவேரில் இருந்த டெண்டுல்கரிடம் கேட்ச் கொடுத்தார். தனது விக்கெட்டினை இழந்தார். கடைசி இரண்டு ஓவர்களில் 26 ரன்கள் தேவை என்கிற நிலை, ஒரு விக்கெட் கையில் இருந்தது. ஆனால், பிரவீன் குமாரின் அதிர்ச்சி காத்திருந்தது. நான் மீண்டும் கூறுகின்றேன், "பிரவீன் குமார்". 19வது ஓவரில் 9 ரன்களை குவித்தார், முக்கிய குறிப்பு அதில் 1 சிக்ஸர் பிரவீன் குமார் அடித்தார். தேவை 16 ரன்கள், ஒரு ஓவரில். தவால் குல்கர்னி அந்த ஓவரில் சிறிது அலட்சியத்துடன் வீசினார் என தோன்றியது. காரணம் அவர் வீசிய நோ பால் பந்து அதில் 2 ரன்கள், மற்றும் 1 வைட் பந்து, கணக்கினை குறைத்தது. அது மட்டுமின்றி 11 ரன்கள் 2 பந்துகளில் தேவை என்கிற நிலையில் 1 சிக்ஸர் அடித்து போட்டி இன்னும் முடியவில்லை என்று மும்பை அணியிடம் மீண்டும் ஒரு முறை சத்தமின்றி அறிவித்தார். அனைவரிடமும் படபடப்பு. ஆனால், ரோஹித் ஷர்மா தெளிவாக பேக்வார்டு பாயிண்ட் திசையில் ஒரு ஃபீல்டர் மற்றும் ஃப்ளை ஸ்லிப் திசையில் ஒரு ஃபீல்டரை நிறுத்தினார். பந்துவீச்சாளரிடம், ஆஃப் திசையில் பந்து வீசாமல், நடுவில் உள்ள ஸ்டம்பினை நோக்கி பந்து வீச அறிவுறுத்தார். தாவல் குல்கர்னி, கூறியதை செய்தார் அனால் அதில் தவறு. அத்தவாறு ஒன்றுமில்லை, அப்பந்து ஃபுல் டாஸ் பந்தாக வீசினார். அப்பந்தினை அடிக்கின்றார், ஆனால் அதில் வலுவில்லாமல் டெண்டுல்கரின் கையில் விழுந்தது. முதல் போட்டியிலேயே இவ்வளவு தெளிவான மனநிலையில் பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி, சிறப்பாக தனது தலைமை பயணத்தை உலகிற்கு அறிவுறுத்தினார்.
ஆட்ட நாயகன் விருதினை வென்றது ரோஹித் ஷர்மா, தனது பிறந்த நாள் வருவதற்கு சிறிது நிமிடங்கள் முன்பு. அதற்கு பின் "இட்ஸ் ஜஸ்ட் தி பிகினிங் " என்று ஆரம்பம் திரைப்படம் பாணியில்.

Comments
Post a Comment