குஜராத் போட்டியை வென்றது - டெல்லி மனதை வென்றது
ஐபிஎல் வரலாற்றில் இன்று
குஜராத் லயன்ஸ் அணி, சரியாக 2 வருடங்களுக்கு முன்பு, சீட் நுனியில் அமர்ந்து பார்க்கும் அளவில் உள்ள ஓர் திரில்லர் போட்டியினை வென்றார்கள். டெல்லியில் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. குஜராத் அணி, மிகவும் பிரம்மாண்டமான தொடக்கத்தினை வழங்கினார். இரு ஒப்பனர்களான பிரண்டன் மெக்கல்லம் மற்றும் டுவெயின் ஸ்மித், அன்று பௌண்டரிகளை சரவெடியினைப்போல் வெடித்தார்கள். உலக அளவில் சிறப்புவாய்ந்த
ஜாஹீர் கானின் பந்துகளை குறிப்பிட்டு தாக்கினார்கள். முதல் 10 ஓவர்களில் 110 ரன்களை அடித்து விக்கெட் இழக்காமல் இருந்தது குஜராத் அணி. அதில், முக்கிய செய்தி, இருவருமே அரை சதத்தினை பதிவிட்டு, எங்களை போன்று சிறப்பான ஒப்பனர்கள் யாவரும் இல்லை என்று சத்தமின்றி செயலில் வெளிப்படுத்தினார்கள். அங்கு இருந்து எப்படியும் 200க்கும் மேற்பட்ட ரன்களை குவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது. ஆனால், தென் ஆஃப்ரிக்கா அணியின் சிறப்பு குணமான ஒன்று, " ஓர் அணி எவ்வளவு நன்றாக தொடங்கி, சிறப்பான நிலையில் இருந்தாலும், அதை சிறிது நேரத்தில் சுருட்டி, காலி செய்வது". அதை சமீப காலத்தில் நம் கண்டிருக்க மாட்டோம். இப்போது நீ ஏன் தென் ஆஃப்ரிக்கா அணியினை பற்றி பேசுகின்றாய் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதற்கு ஓர் காரணம் உள்ளது. டெல்லி அணியில் அன்று விளையாடிய நான்கு வெளிநாட்டு வீரர்களுமே தென் ஆஃப்ரிக்கா அணியை சேர்ந்தவர்கள் தான். அன்று போட்டியினை திருப்பியது அவர்கள் தான். 110/0 என்கிற நிலையிலிருந்து அடுத்த 10 ஓவர்களில் வெறும் 62 ரன்களை அடித்து குறிப்பாக 6 விக்கெட்டுகளை இழந்தது குஜராத் அணி. தாஹிர் ஆரம்பித்த சுழற்சி, கடைசி வரை சிறப்பாக செயல்பட்டது. வடிவேல் காமெடியில் வருவதை போல் "ஆரம்பம் எல்லாம் நல்லா தான் இருக்கு, ஆனா உங்ககிட்ட ஃபினிஷிங் சரி இல்லையேப்பா". தாஹிர் குறிப்பாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக ஓர் இடத்தில், அணியின் தலைவனான டுமினி, மோரிஸிடம் பந்தினை கொடுத்து, ரெய்னா பேட்டிங் செய்ய, அவர் சொல்லிவைத்த மாதிரி லெக் ஸ்லிப் திசையில் ஓர் பீல்டரை வைத்தார். கிறிஸ் மோரிஸ் அதற்கு ஏற்ப, உடலினை நோக்கி ஓர் ஷார்ட் பால் வீசினார். ரெய்னா, பல முறை ஷார்ட் பால் பந்தில் தடுமாறி பேட்டின் பின் பகுதில் எட்ஜ் பட்டு,லெக் ஸ்லிப்பில் உள்ள ஃபீல்டரிடம், கேட்ச் கொடுத்து விக்கெட் இழந்தார். இறுதியில் குஜராத் அணி 171/6 என்கிற ஸ்கோரினை அடித்தார்கள்.

டெல்லி அணி குஜராத் அணியின் போன்று இல்லை. தொடக்கம் மிக சுமாராக அமைந்தது. 16 ரங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தார்கள். அன்று குஜராத் அணியின் சார்பாக தவால் குல்கர்னி அணியின் மேல்பகுதியினை துண்டிக்க சிறப்பாக செயல்பட்டார். அதன் காரணமாக, அணியின் தொடக்கம் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக 10 ஓவர் முடிவில் வெறும் 51/3 என்று குறைந்த ஸ்கோரினை அடித்து, ரன் ராட்டினை விற்று சற்றும் விலகி இருந்தது. பின் பண்ட் தன்னுடைய விக்கெட்டினை இழந்தார். அப்போது மோரிஸ் உள்ளே வர, அணியின் ஸ்கோர் 11 ஓவர்களில் 58/4 என்று இருந்தது. ஆனால், அன்று நடந்த அதிசயம் மோரிஸ் அதற்க்கு பின் அடித்த அடி. குஜராத் அணியின் ஒப்பனர்கள் ஆடிய ஆட்டத்தினை இவர் ஒருவரே சேர்த்து அடித்தார். மருமுனையில் டுமினி பொறுமையாக சிங்களை அடித்து கொடுக்க, இவர் வெறும் 17 பந்துகளில் அரை சதத்தினை பதிவு செய்தார். போட்டி திரும்பியது. 18 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்று இலக்கு மிக எளிதாக அமைந்தது. ஆனால், பின் வரும் வீரர்கள் அவ்வளவு சிறப்பாக பேட்டிங் செய்பவர்கள் அல்ல. டுமினி தனது விக்கெட்டினை இழந்தார். மோரிஸ் தன்னால் முடிந்த வரை போராடினார். கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை, பந்து ப்ராவோவின் கைகளில் இருந்தது. கடைசி ஓவரும், ப்ராவோவும் ஓர் அழகிய காதல் கதை என்று கூறலாம். அன்று வழக்கத்திற்கு மாறாக, அவர் யார்க்கர் பந்துகளை வீசினார். இறுதியில் மோரிஸ் முழுதாக போராடியும் 1 ரன்னில் ஆட்டத்தினை இழந்தது டெல்லி அணி. ஆட்ட நாயகன் விருதினை பெற்றது : கிறிஸ் மோரிஸ் - தன்னுடைய 82*(32), 8 சிக்ஸர்களுடன் சேர்த்து.
அன்று போட்டியினை வென்று குஜராத் - மனதினை வென்றது டெல்லி
Comments
Post a Comment