NZ vs WI - 2ம் Test, நான்காம் நாள், இறுதி சடங்கு

நேத்து முடியும்போது WI team, 65.4 overs முடிஞ்ச நேரத்துல, 244/6னு ஒரு நிலைமையில இருந்தாங்க. அவங்களுக்கு இன்னும் 85 runsகும் மேல அடிச்சா New Zealand திரும்ப 2வது innings விளையாட வருவாங்க. ஆனா அது எதுவும் நடக்கல. இன்னிக்கி 13.3 oversலேயே, மொத்தமா முடிச்சு parcel பண்ணி அனுப்பிட்டாங்க. NZ teamம second innings ஆட விடாம தடுத்தது வெறும் 11 runs. இந்த 4th dayல என்ன நடந்துச்சுனு இந்த review postல நாம பார்க்கலாம். 

என்ன தான் 14 oversகுள்ளேயே இன்னிக்கி நாள் முடிஞ்சாலும், இந்த 14 oversல ஏகப்பட்ட drama நடந்துச்சு. அதே மாதிரி என்ன தான் West Indies தோத்தாலும், அவங்களுக்கு ஏகப்பட்ட positives'ஓட வெளில போவாங்க. அதே நேரத்துல New Zealandகு ஜெயிச்சாலும், இப்போதைக்கு வேற ஒரு விஷயத்துல ஒரு சின்ன ஏமாற்றம் தான். 

இன்னிக்கி நாள பொறுத்தவரைக்கும், NZ bowlerகளான Southee மற்றும் Boult, outside off stumpல pitch பண்ணி, உள்ள வெளிய கொண்டு வந்துட்டு இருந்தாங்க. இதுல எந்த endல இருந்து bowl பண்றாங்களோ, அங்க இருந்து acrossல batsmanனுக்கு move பண்ணிகிட்டே இருக்க, இந்த ஒரு strategy நல்ல விளையாடிட்டு இருந்த Jason Holder'ரோட விக்கெட்டை காவு வாங்குச்சு. 

Outside off stumpல கொஞ்சம் வெளில வீசுன ball, middle and off stump'அ நோக்கி வரும்னு முன்னாடியே decide பண்ணிட்டாரு. ஆனா, bowl பண்ணது straighter delivery. இவரும், pre meditated'அ front foot defense வெக்குறாரு. Outside edge எடுத்து, கழுகு மாதிரி காத்துகிட்டு இருந்த slip fielders கையில catch விழுது.  

ஆனா, இந்த plan ரொம்ப நேரத்துக்கு வேலைக்கு ஆகல. Joshua Da Silva, debutலேயே வேற level maturityயோட விளையாடுறாரு. அவரோட shot making மற்றும் temperament, எல்லாமே பக்காவா இருந்துச்சு. ஏகப்பட்ட well lefts அவருகிட்ட இருந்து பார்க்க முடிஞ்சுது. நல்ல ஒரு 50 அடிச்சு வெளில போனாரு.

இவரைத்தாண்டி Alzarri Joseph. இன்னிக்கி, ரொம்ப aggressive batting, இவருகிட்ட இருந்து பார்க்க முடிஞ்சுது. கிடைக்குற ஒவ்வொரு batting chancesலயும், நல்ல potential வெளில காட்டுறாரு. இவரோட defensive gameம மட்டும் கொஞ்சம் improve பண்ணிக்கிட்டா, நிச்சயமா இவரை batting orderல கொஞ்சம் மேல அனுப்ப வாய்ப்பு இருக்கு. 

கடைசில, Neil Wagner கிட்ட ball கொடுத்து, அவரோ 77 overs used ஆன ballல வெச்சு, inswing பண்ணுறாரு. Wellington conditions'உம் அந்த swingகுக்கு ஏத்த மாதிரி இருந்துச்சு. அங்க Joshua Da Silva மொதல்ல மாட்டுறாரு. அதுக்கு அடுத்து No.11 batsman'ஆன Shannon Gabrielலுக்கு Yorker வீசிட்டு வெளில அனுப்புறாரு. 

317 runsகு all out ஆகுறாங்க West Indies. ஒருவேள, first inningsல நல்லா score பண்ணியிருந்தா ? ஒரு வேள Wagnerருக்கு short ball போடாம, Yorker வீசி முதல்லயே pavilionனுக்கு அனுப்பியிருந்தா ? இப்படி பல கேள்விகள் இருந்தாலும், அவங்கள பொறுத்த வரைக்கும் சில positives அமைஞ்சுருக்கு. அதுல முதல் positive, Blackwoodடோட form. இந்த test seriesல 4 innings West Indies team விளையாடியிருக்காங்க. அதுல 3 innings, இவரு மட்டுமே perform பண்ணியிருக்கார். அந்த 3 inningsல 2 half centuries, 1 century அடிச்சு அசத்தியிருக்காரு. அது காரணமா, West Indies teamமோட ரொம்ப reliable batsmanனா இவரு இருப்பாரு. Permanent spot in test team.

அதுக்கு அடுத்து Alzarri Joseph'ஓட batting. ஏற்கனவே, இந்த வருஷம் இடையில விளையாடுன England vs West Indies matchல, ஒரு முறை இவரை night watchmanனா முன்னாடி அனுப்பிச்சாங்க. அந்த move பண்ணும்போது, இவரோ chance'அ use பண்ணி நல்லா score பண்ணாரு. அங்க இருந்து இந்த seriesல ஒரு crucial fifty அடிக்குறாரு, கொஞ்சம் நல்லா drives'உம் ஆடுறாரு. இன்னும் கொஞ்சம் skills improve பண்ணிட்டா, batting orderல இவரை கொஞ்சம் மேல அனுப்பி, ஒரு extra bowling optionனோட விளையாட வாய்ப்பு இருக்கு.

அதைத்தாண்டி, Joshua da Silvaவோட game. அவ்ளோ நல்லா இருந்துச்சு. ஒரு வேளை Shane Dowrich injuryல இருந்து மீண்டு வந்தாலும், இவருக்கு first preference கொடுக்க வாய்ப்பு இருக்கு. நல்லா வருவாருன்னு நம்புவோம் !

சரி, நியூஸிலாந்து'கு ஜெயிச்சாலும் சோகமான விஷயம் ஒன்னு இருக்குனு சொன்னியே அது என்ன ? நியூஸிலாந்து teamம பொறுத்த வரைக்கும், cricket வரலாற்றுலயே ஒரு முறை கூட test cricketல அவங்க No.1 ranking spot அடைஞ்சதே கெடயாது. இந்த match'அ ஜெயிச்சா அந்த No.1 spot அடைவாங்கன்னு as per reports நெறையா பேர் சொல்லிட்டு இருந்தாங்க. ஜெயிக்கவும் செஞ்சாங்க. ஆனா, ICC ranking points அடிப்படையில, சில decimal points கம்மியா இருக்குற காரணத்துனால No.2 spotலேயே இருக்காங்க. 

முதல் spotல இருக்குற Australia team 116.46 pointsல இருக்காங்க. அதுவே New Zealand, இந்த match'அ ஜெயிச்சதுக்கு அப்புறம் 116.37 pointsல இருக்காங்க. வெறும் 0.09 pointsல அந்த No.1 spot கைவிட்டு போயிடுச்சு. ஆனா, கவலை கிடையாது. இதுக்கு அடுத்து Pakistan கூட test match விளையாடுறாங்க. அதுல ஜெயிச்சா நிச்சயமா அந்த பல வருஷ கனவான No.1 spot அடைஞ்சிருவாங்க. அதே நேரத்துல Australian team, India கிட்ட தோக்கணும். 

    

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt