NZ vs WI - இரண்டாம் டெஸ்ட், மூன்றாம் நாள் Review
நேத்து நாள் முடியும்போது West Indies team, அவங்களோட first inningsல 124 runs அடிச்சு அதுல 8 wickets இழந்து பரிதாபமா இருந்தாங்க. எப்படி இருந்தாலும், இன்னிக்கி 3வது நாள் குள்ள மொத்தமும் முடிஞ்சிடும்னு எல்லாரும் நெனச்சிட்டு இருந்தாங்க. ஆனா , West Indies had other ideas. அப்படி என்ன பண்ணாங்கன்னு, இந்த Review Showல நாம பாக்கலாம்.
இன்னிக்கி நாள் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துக்குள்ளேயே West Indies அவங்களோட first inningsல all out ஆகுறாங்க. சரி, second innings'உம் இப்படி தான் நடக்கப்போவுதுன்னு எதிர்பார்க்கும்போது, WI batsmen எல்லாரும் திரும்ப fight பன்றாங்க. இந்த வருஷம் முழுக்க ஒழுங்காவே விளையாடாத John Campbell, இன்னிக்கி step up பண்ணுறாரு.
கூடவே எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் contribute பண்ணாலும், கடைசி sessionல சில wickets விட்டாங்க West Indies. அதுக்கு முக்கிய காரணம், என்ன தான் scorecardட பார்க்கும்போது Trent Boult தான் wickets எடுத்து இருந்தாலும், உண்மையான காரணம் Jamieson இன்னொரு endல create பண்ண pressure தான்.
Once again, அந்த incoming deliveries, எல்லா batsmenக்கும் தலைவலியை கொடுத்துச்சு. ஆனா, இந்த முறை Blackwoodட தவிர்த்து மத்தவங்க எல்லாரும் fire பன்றாங்க. முக்கியமா lower orderல இருந்து Jason Holder ஒரு impressive innings ஆடிட்டு இருந்தாரு.
இன்னிக்கி குள்ள wickets விட்டுடுவாங்களா இல்ல New Zealandக்கு second innings அமையுமான்னு doubt இருந்திட்டு இருக்கும்போது, light குறைய ஆரம்பிச்சுது. நெனச்ச நேரத்துல light வரலைன்னா, நாள் முடிஞ்சிடும். Lightடும் வரல, நாளும் முடிஞ்சிடுச்சு. இன்னிக்கி 244/6னு ஒரு நிலைமையில இருக்காங்க. இங்க இருந்து 85 runs அடிச்சதுக்கு அப்புறம் lead எடுக்கலாம்.
Comments
Post a Comment