பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுரேஷ் ரெய்னா !!

 சுரேஷ் ரெய்னா - இந்த பெயர், யாருக்கு தெரியுமோ இல்லையோ, எல்லா CSK Fansக்கும் தெரியும். குறிப்பா, எல்லா Dhoni Fansக்கும், Dhoniக்கு அடுத்து மனசுல ஒலிக்குற ஒரு பெயரா இருக்கும்.

சுரேஷ் ரெய்னா, 27வது நவம்பர் 1986வது வருஷம், உத்தர் பிரதேஷ் மாநிலத்துல பிறக்குறாரு. ரொம்பவே hardworking ஆன cricketer. அதுனால தான், 19 வயசுலயே இந்தியா'கு விளையாடுறாரு, 24 வயசுல Captaincyயும் பண்ணுறாரு. இவரை பத்தி சொல்லனும்னா, Mr. IPLனு ஒரு பட்டப்பெயர் இவருக்கு உண்டு. எல்லா வருஷமும் கொறஞ்சது 350 ரன்கள் ஆவது அடிப்பாரு. அது அவரோட மோசமான வருஷமா இருந்தாலும் சரி, Mass'ஆன வருஷமா இருந்தாலும் சரி. இப்போ, IPLலோட leading run scorers tableல 2வது எடத்துல இருக்காரு. மனுஷன் பழையபடி இருந்திருந்தா, அந்த 2வது இடமும் 1 இடமா மாறியிருக்கும்.

தோனிக்கும் ரெய்னாக்கும் இடையில இருக்குற ஒரு bonding, அது வேற மாதிரி. 2008ல கிரிக்கெட்டே வேணாம்னு ரெய்னா இருந்தப்ப, அவரை CSK'ல pick பண்ணி வாழ்க்கைய மாத்துனது தோனி. பல வாட்டி Indian team கஷ்ட படும்போது, middle orderல இரண்டு தூணா செயல்படுவாங்க. Test Retirement Announcement பத்தி தோனி முதல்ல சொன்னது ரெய்னா கிட்ட தான். Dhoni அவர்கள் International Retirement announce பண்ண கொஞ்ச நேரத்துலயே தன்னோட retirementடையும் ரெய்னா announce பண்ணாரு. இப்படி, ஒவ்வொரு விஷயத்துலயும் ஒன்னா செயல்பட்டிருக்காங்க. 2015 World Cupல Zimbabweகு againstடா நாம 99/4னு தத்தளிச்சிட்டு இருப்போம். Target - 286. இவங்ககிட்ட தோத்தோம்னா அதைவிட அசிங்கம் வேற எதுவும் கெடயாது. அப்படிப்பட்ட அசிங்கத்துல இருந்து, ரெண்டு பெரும் சேர்ந்து batting பண்ணி காப்பாத்துனாங்க. இதுல ரெய்னா 100 வேற அடிப்பாரு. தோனி 85 அடிப்பாரு. இவங்களால, ஒரு பெரிய மானபங்கத்துல இருந்து நாம தப்பிச்சிருப்போம். இப்படி நெறையா சொல்லிகிட்டே போலாம்.

ஆனால், ரெய்னா as a cricketerரா வேற மாதிரி. Middle Order Left Handed Batsman, Occasional Off Soinner மற்றும் ஒரு top class fielder. இப்படி மூனு வகையிலும் கலக்குற ஒரு cricketerர எந்த ஒரு Captainனா இருந்தாலும் விட மாட்டாரு. Front foot வெச்சு பின்னங்கால்'ல நகர்த்தி, அவர் ஆடுற inside out shots எல்லாம் சூர போதை. பாத்துக்கிட்டே இருக்கலாம். Fielding'அ பொறுத்த வரைக்கும், All positionsலயும் அய்யா கில்லி டா. World's Best Fielderனு புகழ் பெற்ற Jhonty Rhodes பாராட்டுன ஒரே Indian Fielder Suresh Raina தான்.

ஒரு சம்பவம் சொல்றேன். 2011ல knockout stage வரைக்கும் Yusuf Pathan தான் finisherரா இருந்தாரு. திடீர்னு தோனி Yusuf Pathan'ன வெளிய எடுத்து வெச்சு ரெய்னா'வ உள்ள கொண்டு வராரு. ஏன், இந்த moveனு தோனி கிட்ட கேக்கும் போது, Yusuf Pathanன விட ரெய்னா கொஞ்சம் technically soundனு சொன்னாரு. Commentators'ஓட சேர்த்து எல்லாரும், India cup ஜெயிக்காதுனு முடிவே பண்ணிட்டாங்க. Cup ஜெயிக்கனும்னா முதல்ல final வரைக்கும் வரனும். அந்த final வரதுக்கு, Quarter Final மற்றும் semi finalல ரொம்ப முக்கியமா செயல்பட்டது, எல்லாரும் negativeவா பேசுன Suresh Raina தான். அதுவும் Pakistanகிட்ட நாம முக்காவாசி wickets'அ இழந்திருப்போம். எல்லாரையும் முடிச்சாச்சுன்னு பாக்கிஸ்தான் teamமே நினைக்கும்போது, கடைசி ball வரைக்கும் நின்னு, 260/9 னு ஒரு respective scoreகு கொண்டு போவாரு. அப்போ, ரெய்னா அவர்கள், தன்னோட batting மூலமா, "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ'ன்னு சொல்லாம சொல்லிட்டு போவாரு.


இதெல்லாம் தான்டி, on-fieldல கொஞ்சம் கூட ego இல்லாம, மத்தவங்களோட வெற்றியை தன்னோட வெற்றியா கொண்டாடுவாரு. அதுக்கு சிறந்த example, 2015 World Cupல, Pakistanக்கு against'அ விராட் கோலி 99*ல இருப்பார். இன்னொரு endல ரெய்னா இருப்பாரு. கோலி அந்த 100th ரன் எடுக்கும்போது, கோலிக்கு முன்னாடியே ரெய்னா celebrate பண்ணுவாரு. A Perfect Team Man. Aggression இல்லாம அவ்வளவு cheerfulலா இருக்குற ஒரு மனுஷன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சின்னதல சுரேஷ் ரெய்னா !

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?