கங்குலி எனும் படைப்பாளி

சௌரவ் கங்குலி, இன்றைய தேதியில், 1972ம் ஆண்டில், பெங்கால் மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் பிறக்கின்றார். கொல்கத்தாவில், கிரிக்கெட்டை கடந்து கால்பந்து விளையாட்டுக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. தனது, இளம் வயதில், இவரும் கால்பந்து வீரராக தனது வாழ்வினை அமைத்துக்கொள்ள வேண்டும்என ஆசை கொள்கின்றார். ஆனால், பின்னர், தனது அண்ணன், பெங்கால் அணியின் கிரிக்கெட் வீரராக திகழ்வதை கண்டு, இவரின் மனத்திலும் ஆசை வருகின்றது.இளம் வயதில் தான் ஓர் வலது கை பேட்ஸ்மேனாக இருந்திருந்தாலும், இவர் அதனை சற்று மாற்றி இடது கை வீரராக களமிறங்கினார்.

இளம் வயதிலிருந்தே துணிச்சலும், முரட்டுத்தனமும் கலந்து விளங்க, பலர் இவரின் குணாதிசயத்தை குறை கூறியுள்ளனர். ஆனால், அன்று அவர்கள் அறியாதது, இவ்வாறு உள்ள குணங்களை வைத்தே இந்திய அணியை வளர்க்கவுள்ளார் என்று. ரஞ்சி கோப்பையில் தான் கண்ட நல்ல ஆட்டங்கள், 1992ம் ஆண்டில் இந்திய சர்வதேச அணியினுள் இடம் பெற்று தருகின்றது. ஆனால், இந்திய சர்வதேச அணியினுள் தனது கோபத்தின் காரணத்தினால், அணியை விட்டு வெளியேற்ற மீண்டும் 1994ம் ஆண்டில் அணியினுள் இடம் பெறுகின்றார். குறைகூறுவோர் குறைந்துகொண்டே இருப்பர், நான் நானாகவே தான் இருப்பேன்.

தனது பேட்டிங்கில் மிக சிறப்பாக பணியாற்றினார். தான் விளையாடும் ஆஃப் திசைகள் ஷாட்டுகள் அவருக்கு "
ஆஃப் திசையின் கடவுள்" என்கிற பெயரையே வழங்கியுள்ளது. 

நமது அட்டியில் குறிப்பிட்ட ஓர் நபர் இருப்பான். அவன் செய்யும் செயல்கள் அனைத்துமே கெத்தாக இருக்கும். தனக்கென உரிய குணமாக இருக்கும். அதனை, வேறு எவராது முயன்றால் சிரிப்பாக மாறி விடும். அவ்வாறு உள்ள நபர் தான் கங்குலி.

மிகவும் சிறப்பான இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்துள்ளார். சில சமயங்களில் பந்துவீசுவதில் விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 2000ம் ஆண்டு காலகட்டத்தில், ஸ்பாட் ஃபிக்ஸிங் எனும் சர்ச்சைகளால் பல வீரர்கள் அணியை விட்டு விளக்கப்படுகின்றனர். அதில், முக்கிய பெயர்களான அசாருதீன் மற்றும் அஜய் ஜடேஜா இருக்கின்றது. டெண்டுல்கர் அப்போது தனக்கு தலைமை பொறுப்பு சரியாகாது என்கிற எண்ணத்தில், அப்பதவியிலிருந்து விலக, அப்போதைய காலகட்டத்தில் இருந்த துணை தலைவரான கங்குலி அவர்களை தலைமை பொறுப்பு நாடுகின்றது. அதாகப்பட்டது, கங்குலியை தேடி, தலைமை பொறுப்பு வந்தடைகின்றது.

கங்குலி'யின் வழிநடத்துதல் மிகவும் துணிச்சலுடனும், முரட்டுத்தனமாகவும் இருக்கும். ஆனால், அவர் தான் இந்திய சர்வதேச கிரிக்கெட் அணி எனும் நிலத்தில், விதையிட்ட உழவன் ஆவர். அவரின் விதைகளே இப்போது மரங்களாக முளைத்து உலகினை ஆண்டது. அவ்வாறு உள்ள விதைகளே சேவாக், கம்பீர், தோனி, யுவராஜ், ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான், சாஹீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா, அஜித் அகர்கர், தினேஷ் கார்த்திக், பார்திவ் படேல், மொஹம்மத் கைஃப் போன்று பலர் களம் கண்டனர்.

"நீவீர் என்னை அடித்தால், நான் உன்னை மீண்டும் அடிப்பேன், இவ்வாறு எதனை முறை நடைபெற்றாலும், நான் மீண்டும் மீண்டும் செய்வேன்" என இரு வரிகளில் அவரை பற்றி கூறிவிடலாம்.

உலகில் உள்ள பல அணிகள், இவரின் வருகையை கண்டு நடுங்கினர். அதே நேரங்களில், செயல்பாட்டிலும் வல்லவர் ஆவார். 2003ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரில் இறுதி போட்டி வரை சென்று, கோப்பையை தவறியது. அப்போது இவர் தான் தலைவன். 2002ம் ஆண்டின் சாம்பியன்ஸ் கோப்பையில் இறுதி வரை இந்திய அணி சென்று, இறுதியில் மழையின் காரணத்தினால் போட்டி தடைபட, கோப்பையை பகிர்ந்தது. 2000ம் ஆண்டின், ஐசிசி நாக்கவுட் தொடரின், இறுதி போட்டி வரை அழைத்து சென்றார், சௌரவ் கங்குலி. நடவெஸ்ட் தொடரின் இறுதி போட்டியில் நடைபெற்றதை எந்த ஒரு கிரிக்கெட் ரசிகனும் தனது வாழ்வில் மறந்திருக்கமாட்டான். சென்ற தொடரில், இந்திய அணியை இங்கிலாந்து அணி தொடர்கடித்த பொழுது, ஆண்ட்ரே பிளிண்டாஃப், தனது ஜெர்சியை கழற்றி சுற்றி கொண்டாடினார். அதற்கு, மீண்டும் குடுத்தாள் எவ்வாறு இருக்குமென புரிந்துக்கொள்வதற்கு நடவெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியிற்கு எதிராக இந்திய அணி வெற்றிபெற, கங்குலி தனது சட்டையை கழற்றி அதனை போன்று மீண்டும் வெற்றியை கொண்டாடினார்.

இவ்வாறு சிறப்புள்ள நபர், தனக்கும் தனது அணியின் பயிற்சியாளராக கிரெக் சாப்பெல்ளுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவங்கள் மற்றும் 2003ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரின் பிறகில் தான் விளையாடிய ஆட்டங்கள், இவையனைத்தும் தனது தலைமை பொறுப்பை பறிக்கச்செய்தது.

ஆனால், மீண்டும் 2006ம் ஆண்டில் அணியினுள் களமிறங்க, இவர் மிக சிறப்பாக விளையாடினார். அதனால், 2007ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரின் அணியினுள் இடம் பெறுகின்றார். 2007ம் ஆண்டின் முழுவற்றிலும்,கங்குலி அவர்களுக்கு சிறப்பானதாக அமைந்தது. இறுதியில் 2008ம் ஆண்டில், இந்திய அணியிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

இப்போது, 12 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கின்றார்.

கேட்டாலும் நம் தலைவன், இப்போதும் ராஜனடா !! இவரின் காரணத்தினால், 2019ம் ஆண்டு வரை கொல்கத்தாவில் கிரிக்கெட் இயங்க, 2019ம் ஆண்டின் அக்டோபர் மாத காலத்தில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பதவியேற்க, தனது முதல் ஆணை, இந்திய அணி விளையாடும் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியாகும். அது நடைபெறும் மைதானம், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானமாகும்.

இப்போது அவரின் அடியில் கிரிக்கெட் இயங்குகின்றது. ஆண்டுகள் கடந்தது, பொறுப்புகள் மாறியது, ஆனால் மாறாதது அரசின் குணங்கள் மட்டுமே !!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கங்குலி எனும் "படைப்பாளி" 

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?