பிறந்தநாள் வாழ்த்துக்கள் கில்லி !!

இதே நாள், 1971ம் ஆண்டு, New South Wales மாநகரில் ஒரு சிங்கம் பிறக்கின்றது. 4 பிள்ளைகளுள் கடைக்குட்டியாக ஒரு சிங்கம் பிறக்கின்றது. அன்று, யாருக்கும் தெரியாத செய்தி, இந்த கடைக்குட்டி சிங்கம், உலகின் தலைசிறந்த Wicket Keeper Batsmanனாக வலம் வருவான் என்று. அந்த, ஆஸ்திரேலியா நாட்டின் கடைக்குட்டி சிங்கத்தின் பெயர் தான் Adam Gilchrist. உலகில் உள்ள பல பிம்பங்களை உடைத்த வீரரே இவராவார்.

தன்னுடைய 25 வயது காலத்தில் தான், ஆஸ்திரேலியா நாட்டின் சர்வதேச கிரிக்கெட் அணியினுள் இடம் கிடைக்கின்றது. 37 வயது காலத்தில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றும் விட்டார். வெறும் 12 ஆண்டு காலம் தான், இவர் சர்வதேச கிரிக்கெட்டில் வாழ்ந்தார். அதிலும், முதல் 2 ஆண்டுகள், அணியினுள் " உள்ளே வெளியே " ஆட்டம். Ian Healy, போன்ற ஜாம்பவானாவுக்கும் இவருக்கும் இடையே ஆரம்பகாலத்தில், பெரும் போட்டி. பின்னர், 6ம் 7ம் தளங்களில், பேட்டிங்கை மேற்கொண்டு அதிலும் சொதப்பல்கள்.

இவருக்கு போட்டியும் அதிகரிக்க துவங்கும் போது, ஒபரனாக பரிசோதனை. அதை, சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் ஆபத்து தான். ஆனால், பயன்படுத்திக்கொண்டு தனது முழுவீச்சை வெளிக்காட்டினார். என்னைப்பொறுத்த வரை, ஓர் நம்பிக்கையுள்ளது. Left Hand Batsmanகளும் அவர்களுடைய அதிரடி battingகும், ஓர் தீரா காதல் கதை. கிறிஸ் கெயில், சௌரவ் கங்குலி, ஷிகர் தவான், மைகேல் ஹஸி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, போன்றோர் வரிசையில் முன்னோடியாக திகழும் ஒரு வீரர் தான், ஆடம் கில்கிறிஸ்ட். 

களத்தில் இறங்கிய முதற்பந்திலிருந்து, அதிரடியான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்துவார். 2003ல் இருந்து 2007ம் ஆண்டு காலகட்டங்களில், ஐவரும் மெத்தியூ ஹெய்டனும் இனைந்து, துணிவாக விளையாடும் ஆட்டங்கள் தான், ஆஸ்திரேலியா அணியிற்கு 2 உலககோப்பைகளை கைப்பற்ற உதவியுள்ளது. பொதுவாக, உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில், அதிரடியாக விளையாடுவது என்பது, மிகவும் அழுத்தத்திற்குரிய செயலாகும். அதில், ஆட்ட நாயகனாக செயல்படுவது, சிந்தித்துப் பாருங்கள். ஆனால், இவரோ இரண்டையும் செய்துக்காட்டியுள்ளார், கடினமின்றி. 

உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பராக திகழும் இவரின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்தால், சிறிதளவு கூட பிழையிருக்காது. பொதுவாக , நடுத்தர உயரத்தில் உள்ள ஓர் வீரர், விக்கெட் கீப்பிங்கை மேற்கொள்வது மிகவும் சுலபமாகும். அதுவே, உயர்வாக உள்ள வீரர், தலையின்மேல் பறக்கும் பந்துகளை கைப்பற்ற தடுமாற மாட்டார்கள். அதுவே, மிகவும் கீழ் மற்றும் வலது இடது புறங்களில் பறக்கும் பந்துகளை பிடிப்பதில் சற்று தடுமாற்றம் நிலவும். ஆனால், கில்கிறிஸ்ட் அவர்கள், இதை சர்வ சாதாரணமாக செய்துள்ளார். அது காரணமாக தான், டெஸ்ட் போட்டிகளில் அதிக dismissalகளை நிகழ்த்தியுள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும், 2015ம் ஆண்டு வரை அதிக dismissalகளை நிகழ்த்தியுள்ளார். இவரை மிஞ்சியது, குமார் சங்கக்காரா. ஆயினும், இவருடைய Wicket Keeping முறையையே, தற்போது வளர்ந்து வரும் அனைத்து விக்கெட் கீப்பர்கள், எடுத்துக்காட்டு குறிப்பாக வைத்துள்ளனர்.

அழுத்தம் எவ்வாறு இருந்தாலும், அவரின் முகத்தில் சிறிதும் தெரியாது, புன்னகையுடன் எதிர்கொள்வார். பல முறை, தான் அவுட் ஆகிவிட்டார் என்று தனக்கு முன்னதாகவே தெரிந்து விட்டால், நடுவரின் தீர்வைப்பற்றி சிறிதும் யோசிக்காமல், Pavilionனை நோக்கி திரும்பி செல்வார். சர்வதேச கிரிக்கெட்டில் பல போட்டிகளில் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார். அவற்றுள் 65க்கும் மேற்பட்ட வெற்றி சதவீதம் வைத்துள்ளார். 

இவருடைய flick shotடுகள், கண்களில் மிளிரும். தனது ஆரம்பகாலத்திலிருந்து, இறுதிவரை, உடல்கட்டுகளில் சிறிதும் குறைபாடு இல்லாமல், பராமரித்துக்கொண்டிருக்கிறார். ஒரு கிரிக்கெட் வீரருக்கும், ஆரோக்கியமான உடற்கட்டும், தெளிவான மனநிலையும் மிகவும் அவசியம். தனது Careerல் inconsistentடாக திகழ்ந்தாலும், இவ்வாறு உள்ள மனவலிமை, தன்னை தக்கவைத்துக்கொண்டே இருக்கும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் " கில்லி " என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் ஆடம் கில்கிறிஸ்ட் !!

          

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood