மூன்று வீரர்கள், மூன்று உணர்வுகள் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இன்று மூன்று வீரர்கள், தங்களின் பிறந்த நாளினை கொண்டாடுகின்றார்கள் . ஒருவர், வயது வெறும் எண் தான், துணிந்தால் எதுவும் சாத்தியம் என்று உலகிற்கு உணர்த்தியவர். இன்னொருத்தரை, நாம் அனைவரும் இன்று சமீபத்தில் கலாய்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இங்கு பலருக்கு அவருடைய வரலாறு தெரியவில்லை. மூன்றாம் வீரர், தன்னுடைய நாட்டுக்காக எவ்வித பணியாக இருந்தாலும் செய்ய துணிந்தவர். இவர்கள் யார், என்ன செய்துள்ளார்கள் என இப்பதிவில் நாம் பார்ப்போம்.
1. ரவி ஷாஸ்திரி - ஒருவரை கேலி செய்தாலும் முன், அவரின் வரலாற்றினை அறிதல்
இவர், மே 27, 1962 ஆண்டு, பம்பாயில் பிறக்கின்றார். பிறப்பது பம்பாயாக இருந்தாலும், தனது குடும்பம் கர்நாடக மங்களூரை சார்ந்தது. இவரைப்பற்றி கூறவேண்டும் என்றால், நம் நாட்டில் பல வீரர்கள் இப்போது செய்தார்கள் என நாம் போற்றும் செயல்களை, அவர் 35 வருடங்களுக்கு முன்பாகவே செய்துள்ளார். 1981ம் ஆண்டில், இவர் ஆல் ரவுண்டராக அணியில் களம் இறங்குகின்றார். தான் வலது கை, உயரமான பேட்ஸ்மேனாகவும் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் விளையாடுகின்றார். ஒரு பேட்ஸ்மேனாக, பொறுமையாகவே தொடங்கினாலும், அவர் நினைக்கும் நேரத்தில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தன்னால் முழு வீச்சில், பேட்டிங்கை செயல்படுத்த முடியும். இப்போது, நமது இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிப்பது மிகப்பெரிய காரியமாக நமது பேட்ஸ்மேன்'களுக்கு உள்ளது. ஆனால், அப்போது இருந்த காலகட்டத்திலேயே இவர் சிறப்பாக சமாளித்துள்ளார். இப்போது நாம் இவரை மிகவும் எடையுடன் மற்றும் தொந்தியுடன் இருக்கின்றார் என வலைத்தளங்களில் கேலி செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், அப்போதைய காலகட்டத்தில், இந்திய அணியின் மிகவும் பொருத்தமான, சரியான உடல்கட்டுகளுடன் காணப்படும் வீரராக திகழ்ந்தவர். அப்போதைய காலக்கட்டத்தில், ஃபீல்டிங்'கில் அவர் தான் ராஜா. இப்போது 2007ம் ஆண்டில் யுவராஜ் சிங் 6 பந்தில் 6 சிஸேர்கள் அடித்துள்ளார் என போற்றுகின்றோம் அல்லவா? இதனை இவர் 1980களில் செய்துள்ளார். தான் மிகவும் சிறந்த வர்ணனையாளராகவும் செயல்பட்டுள்ளார். தனது பயிற்சி தொழிலிலும், இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது. முட்டியில் காயம் காரணமாய் 31 வயதில் தனது ஓய்வை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை ஒரே இன்னிங்சில் எடுத்தும் உள்ளார். 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே.
2. மைகேல் ஹஸி - வயது வெறும் எண் தான், நமது துணிவில் தான் அனைத்தும் உள்ளது
கிரிக்கெட் விளையாட்டை பொறுத்த வரை, 30 வயதிற்கு மேல் ஓர் வீரர் விளையாடிக்கொண்டிருந்தால், அவரை முதியவர் என்றே அழைக்கும் காலமாக மாறிவிட்டது. காரணம், அனைவரின் கணக்கு, 30 வயதிற்கு மேல், தனது உடல் வலுவிழக்கக்கூடும் எனவும், தனது ஆட்டத்தில் தேய்வு ஏற்படும் எனவும் பல கூறுகளை நாம் அறிவோம். அதற்கு, சிறந்த எடுத்துக்காட்டு 2018ம் சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்த வீரர்களை பார்த்து, "டாடி'ஸ் ஆர்மி"
( அதாவது தந்தைகளின் இராணுவப்படை ) என கூறிக்கொண்டு கலாய்த்தார்கள். அவ்வாறு, இருக்கும் நேரத்தில், மைகேல் ஹஸி, எனும் ஆஸ்திரேலியா நாட்டினை சேர்ந்த வீரர் 29 வயதில் தனது கிரிக்கெட் வாழ்வினை தொடங்குகின்றார். 1975ம் ஆண்டில், மைகேல் ஹஸி, மேற்கு ஆஸ்திரேலியா நாட்டில் பிறக்கின்றார். பல ஆண்டுகளாக மேற்கு ஆஸ்திரேலியா அணியிற்காக விளையாடினாலும், 2004ம் ஆண்டில் தான், தனக்கு சர்வதேச அணியில் விளையாட இடம்பெற்றது. அதிலும் முக்கிய குறிப்பு, தனது கிரிக்கெட் வாழ்வில், 2007ம் ஆண்டில், அதாவது 32 வயதில் தான் அணியில் நிரந்தர இடம் கிடைக்கிறது. அப்போது, அவர் இடையில் இறங்கி போட்டியினை முடிக்கும் பேட்ஸ்மேனாக களம் இறங்குகின்றார். எப்போது விளையாட தொடங்கினால் என்ன, கிடைத்த இடத்தினை நழுவ விடக்கூடாது என்கிற, தன்னுள் இருந்த வேகம், வெற்றியாக மாறியது. முக்கிய சந்தர்ப்பங்களில், ஆஸ்திரேலியா அணியினை பாதாளத்திலிருந்து காப்பாத்தியுள்ளார். இன்னோர் முக்கிய செய்தி, 37 வயது வரை அவர் ஆஸ்திரேலியா அணியின், சிறந்த ஃபீல்டர்களுள் ஒருவர். 79 டெஸ்ட் போட்டிகளில், 6,235 ரன்கள் குவித்துள்ளார். அதில் 19 சதங்கள் மற்றும் 29 அரை சதங்களை பதித்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டில், 185 போட்டிகளில் 5,442 ரன்கள் குவித்து, அதில் 3 சதங்கள் மற்றும் 39 அரை சதங்கள் பதித்துள்ளார். 2010ம் ஆண்டில், 24 பந்துகளில் 60 ரன்களை, பாக்கிஸ்தான் எதிரே அரை இறுதி போட்டியில் குவித்து, வெற்றியை நோக்கி அழைத்துசெல்வதெல்லாம், அவரின் உக்கிர தாண்டவம் என்றே கூறலாம். சென்னை அணியின் ரசிகர்களை கேட்டால், இவரின் பெயர் நிச்சயம் மனதில் இருக்கும். இவர் தான் இப்போது மிஸ்டர்.கிரிக்கெட்
3. மஹேலா ஜெயாவார்தெனே - ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஓர் இரும்பு தூண்
1977ம் ஆண்டு, 27ம் மே அன்று, கொழும்பு'வில் இவர் பிறக்கின்றார். 20 வயதிலேயே, 1997ம் ஆண்டில் இலங்கை சர்வதேச அணியில் இடம் பெறுகின்றார். அங்கிருந்து அடுத்த 18 ஆண்டுகள் இவரின் தோள்களில் தன் இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணி. இந்திய அணியிற்கு டெண்டுல்கர் எவ்வாறோ, இவர் இலங்கை அணியிற்கு அவ்வாறே. குள்ளமான வீரராக களமிறங்க, தனது பதம் சிறிதாக இருந்தாலும், எடுத்து வைத்த பாதை பெரியது. முழு நேர பேட்ஸ்மேனாகவே களமிறங்கும் இவர், முதல் போட்டியிலேயே 66 ரன்கள் அடித்து முத்திரையை பதிக்கின்றார். அங்கிருந்து 5 உலககோப்பைகளில் பங்குபெற்றுள்ளார். பல வித பந்துவீச்சாளர்களை தனது வாழ்வில் எதிர்கொண்டுள்ளார். பேட்டிங்கின் மேல் தலத்தில் இறங்கும் இவர், சிறிது பொறுமையாகவே விளையாடுவார். அவர் பயன்படுத்தும் கட் ஷாட்டுகள் கண்களுக்கு இனியவையாகவே இருக்கும். தனது மேல் கைகளை, மிகவும் எளிதாக பயன்படுத்துவார். மணிக்கட்டுகளையும், அழகாக தனது பேட்டிங்கில் பயன்படுத்துவார். சிலர் மட்டுமே மணிக்கட்டுகளை பயன்படுத்துவதில் வள்ளலாக இருப்பர். அதில், ஐவரும் ஒருவரே. ஒரு நாள் கிரிக்கெட்டில், இலங்கை அணியின் பல வெற்றிகளில் இவர் பங்குபெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில், 374 ரன்களை தனது அதிகப்பட்ச ஸ்கோராக வைத்துள்ளார். நினைத்திருந்தால் பிரையன் லாரா அடித்த 400ஐ கடந்திருக்க இயலும். மிகவும் நேர்த்தியாக, தொடர்ந்து பல போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர் இவர். 2015ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடருக்கு பின், தனது ஓய்வை அறிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில், 149 போட்டிகளில், 11814 ரன்களையும், ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடிய 448 போட்டிகளில், 12650 ரன்களையும் அடித்துள்ளார். இப்போது நான் என் இவரை டெண்டுல்கருக்கு இணங்க ஒப்பிட்டு பேசியுள்ளேன் என உங்கள் அனைவருக்கும் புரியும். அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டு, அந்த பதவியிலும், அவர் சிறப்பான ஆட்டத்தை அணியிற்கு வழங்கியுள்ளார்.
Comments
Post a Comment