சர்வதேச இடது கையாளுபவர்களின் தினம்

பொதுவாக, நம் வீட்டில் உள்ள பெரியோர் பலர், இடது கை, என்பதை, ஏதோ அதிர்ஷ்டமில்லாததாகவும், ஏதேனும் அசிங்கம் என்றே கருதுகின்றனர். வேறு யாரவது ஒரு பொருள் கொடுத்து, அதை இடது கையில் பெற்றுக்கொண்டால், கடும் சினம் கொள்வர். உலகில் உள்ள 90 சதவீத மக்கள், வலது கையாளுபவர்களாக இருக்கின்றார்கள். மீதம் உள்ளோர் மட்டுமே இடது கையாளுபவராய் இருப்பர். ஆனால், கிரிக்கெட்டை பொறுத்த வரை, இடது கையாளுபவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே வேறு. 

நான், தனிப்பட்ட முறையில், இடது கை பேட்ஸ்மேனாக, களமிறங்குவேன். ஆதலால், தனித்த முறையில் நான் கண்டறிந்துள்ளேன். எவ்வித அணியாக இருப்பினும், பொதுவாக வலது கை வீரர்களுக்கெனவே திட்டம் தீட்டுவர். காரணம், பெரும்பாலானோர் வலது கை வீரர்களாகவே இருப்பர். ஆனால், ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு இடது கை வீரர் களமிறங்கினால், கதை முடிந்தது. 

லெக் ஸ்பின் பந்துவீச்சாளர்களை சமாளிக்கும் திறன் கொண்டோர், இடது கை வீரர்கள் மட்டுமே. ஒரு இடது கை பேட்ஸ்மேன் களமிறங்கினால், பலரின் பார்வையும், அந்த ஒரு வீரன் மீது தான் இருக்கும். பேட்டிங்கிற்கே இவ்வாறு என்றால், பந்துவீச்சாளர்களை பற்றி எண்ணிக்கொள்ளுங்கள். 

ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் களமிறங்கினால், அவன் அரைகுறை வேகத்தில் பந்துவீசினாலும், அதை சமாளிக்க எதிரணி தடுமாறும். இவை வேகப்பந்து பந்து வீச்சிற்கு மட்டுமல்லாது, சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் பொருந்தும். 

இடது கை பந்துவீச்சாளர்கள் கோணமும் வேறுபடும். கோணம் வேறுபாட்டால், செயல்பாடும் வேறுபாடும். செயல்பாடு வேறுபாட்டால், எதிரணி குழம்புவர், தயங்குவர். ஒரு கிரிக்கெட் அணியில், இடது வீரர்களின் அணிவகுப்பு மிகவும் முக்கியமானது. ஒரு புறம் வலது கை வீரனும், மறுபுறம் இடது காய் வீரனும் இனைந்து பேட்டிங் செய்தால், எதிரணியின் பந்துவீச்சு, பெரிதாக குழம்புவர். அதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு, 2011ம் ஆண்டின் உலகக்கோப்பை வெற்றிக்கு ஓர் முக்கிய காரணம், இடது வலது இணையே ஆகும். இந்த கூற்றை ஏதும் செய்ய இயலாது. 

வலது கை வீரர்கள், பல வகையான ஷாட்டுகள் அடித்தாலும், ஓர் இடது கை வீரன் அடிக்கும் கவர் ட்ரைவுக்கு இணையாக ஏதும் நிற்காது. தெறி திரைப்படத்தின் பாணியில் கூறவேண்டும் என்றால், "ஆயிரம் தான் right handers  இருந்தாலும், ஒரு left hander ஆகிட முடியாது". 

ஆதலால், கிரிக்கெட்டை பொறுத்த வரை, இடது கை வீரர்கள் என்றாலே, அதற்கு ஓர் தனி மரியாதை கிடைக்கும். ஆனால், கிரிக்கெட் எனும் விளையாட்டை கடந்து, நிஜ உலகிலும், இடது கைகளை, உயர்வாக கருத வேண்டும். மூட நம்பிக்கைகளை கடந்து சிந்திக்க வேண்டும். அவ்வாறு, சிந்தித்தால் பல சாதனையாளர்களை கண்டறிய இயலும்.     

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood