யுத்தங்களின் ராஜன் - யுவராஜ் சிங்

சரியாக இன்று, ஒரு வருடத்திற்கு முன், யுவராஜ் சிங்க் அணைத்து வகை  போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். அரசனாக களமிறங்கியவர், சேவகனை விடவும் கீழ்தரத்தில் அவமானங்கள் கொடுத்து வெளியனுப்பினார்கள். இங்கு நான் யுவராஜ் சிங் தனது அவமானங்களை பற்றி மட்டுமே கூரவுள்ளேன்.

1999ம் ஆண்டில், 17 வயதில் இந்திய அணியினை அடைகின்றார் யுவராஜ் சிங். இளம் இடது கை ஆட்டக்காராக களமிறங்கிறகும் இவர் தனது முதற் போட்டியிலிருந்தே ஜொலிக்கின்றார். இவரது கிரிக்கெட் உலகினை இரு பாகங்களாக பிரிக்கலாம். 1999-2011ம் ஆண்டின் வரை ஓர் காலம் மற்றும் 2011-2019ம் வரை மற்றோர் காலம். இங்கு நான் இரண்டாவது காலத்தை கூறுகின்றேன். 2011ம் ஆண்டின் உலகக்கோப்பையில் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், யுவராஜ் சிங் தொடரின் நாயகன் விருதை பெற்ற சம்பவம். ஆனால், அத்தொடரில் அவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். களத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுதே வாயிலிருந்து ரத்தம் வெளியே வர, புற்றுநோயின் உக்கிரம் அதிகரித்ததுடன் அறிகுறியாக இருந்தது. இருப்பினும், நான் களத்தில் இறந்தாலும் நான் இந்திய அணியிற்காக போராடுவேன் என போராடி விளையாடினார். அதன் பரிசு, இந்திய அணியின் இரண்டாவது கோப்பை. ஆனால், பக்கவிளைவு யுவராஜ் சிங்கின் புற்றுநோய் பாதிப்பு. அதன் காரணமாக லண்டன் சென்று, அங்கே சிகிச்சை பெற்று குணமடைந்து வந்தார். ஆனால், சிகிச்சை பெற்றால் மட்டும் போதாது. உடற்பயிற்சியிலும் மற்றும் மனதளவிலும் சிறப்பாய் திகழ வேண்டும். மற்றும் தனது ஆட்டம் பழைய வகையில் அருமையாக இருத்தல் வேண்டும்.

தோனி யுவராஜின் மீது நம்பிக்கை வைத்து 2012ம் ஆண்டில், அணியினுள் சேர்த்தார். 2012ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை, இந்திய பாக்கிஸ்தான் தொடர், இந்தியா இங்கிலாந்து தொடர் என மூவற்றிலும் அணியில் இடம் பெற்றார். மூவற்றை சேர்த்தும் சரியான ஆட்டம் இல்லை. வலுவிழந்த நிலையில் தான் இருந்தது. 2013ம் ஆண்டின் ஐபிஎல் தொடரிலும், பெரிதாக ஆட்டம் இல்லை. அதன் காரணமாக, அவரை 2013ம் ஆண்டின் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், இந்திய அணியினுள் சேர்க்கவில்லை. மீண்டும், 2013ம் ஆண்டின் ஆஸ்திரேலியா தொடரில் களமிறக்கப்பட்டார். 20 ஓவர் போட்டியில் நன்கு முன்னேற்றம் தெரிந்தது. ஆனால் 50 ஓவர் போட்டிகளில், நினைத்தவாறு அமையவில்லை. இருப்பினும் 20 ஓவர் போட்டிகளில் பாக்கிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரே சில நல்ல ஆட்டங்கள் கண்டதால், இவரை 2014ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு தயார் செய்தனர். ஆனால், சோகம், 2014ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரில் ஒரு அரை சதத்தை மட்டுமே அடித்திருந்தார். மற்றும், இறுதி போட்டியில் அவர் 11(21) ரன்களுக்கு, மிகவும் தடுமாறிய நிலையில் விளையாடியதால் இந்திய அணி சிறிய ஸ்கோர் மட்டுமே இலக்காக இலங்கை அணியிற்கு எதிரே வைக்க இயன்றது. விளைவு, இலங்கை அணி கோப்பையை கைப்பற்றியது. அன்று, அவர் மீது விழுந்த அவமானங்கள் மிகவும் அதிகம். ஐபிஎல் தொடர்களிலும் மிகவும் அதிக விலை கொடுத்து வாங்கினார்கள். ஆனால், பலனமில்லை ( 2 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக). இதன் காரணமாக 2015ம் ஆண்டின் உலகக்கோப்பை தொடரையும் தான் கைவிட்டார். ஆனால், முயன்றார். அவ்வாண்டின் உள்நாட்டு கிரிக்கெட் விளையாட்டில் நன்கு ஜொலித்தார். மீண்டும் அணியினுள் சேர்க்கப்பட்டார். இம்முறை 20 ஓவர் தொடர்களில் மட்டுமே. 2016ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அணியில் இடம் பெற்றார். ஆனால், மீண்டும் விதி விளையாடியது. இம்முறை காயம். மீண்டும் முயன்றார், 2017ம் ஆண்டில் இந்திய அணியினுள் இடம் கிடைத்தது. இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாட, 2017ம் ஆண்டின் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இடம் கிடைத்தது. அதில் ஒரு அரை சதம் மட்டுமே அடிக்க இயன்றது. பின்னர், ஐபிஎல் கிரிக்கெட்டில் நன்கு விளையாடினால், அணியில் ஓர் வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தார்கள். ஆனால், ஆட்டம் சரியாக இல்லை. 2019ம் ஆண்டின் ஐபிஎல் ஏலத்தில் முதற் சுழற்சியில் விலைபோகவில்லை. இரண்டாம் சுழற்சியில் மும்பை அணி வாங்கியது. ஆனால், அங்கும் வெறும் மூன்று போட்டிகள் மட்டுமே விளையாடி மீதமுள்ள போட்டிகளில் அணியினுள் இடம் கிடைக்கவில்லை. அதன் பின்னர், 2019ம் ஆண்டின் உலகக்கோப்பை அணியிலும் இடம் கிடைக்கவில்லை. வயதும் 37 ஆகிவிட்டது. இதன் பின்னர், ஏதும் செய்ய முடியாது என புரிந்துக்கொண்டு, அவமானங்களுக்கு போதும் என்று முற்றுப்புள்ளி வைக்குமாறு தனது ஓய்வினை அறிவித்தார்.

இரண்டாம் பாகத்தில் போராட்டங்கள் ஏராளம். ஆனால், புற்றுநோய் ஒன்று வாழ்வினை அழித்தது. பிரபல சர்வதேச கிரிக்கெட் வீரர், ஆடம் கில்கிறிஸ்ட் ஓர் பேட்டியில் " புற்றுநோய் மட்டும் வரவில்லையென்றால், யுவராஜ் சிங் கிரிக்கெட் உலகின் அடுத்த பெரிய செய்தியாய் இருந்திருப்பார்". ஆதலால், யாவரேனும் உங்கள் உடல் ஆரோக்யம் மிகவும் அவசியம் என்கிற கருத்துடன் நான் இப்பதிவினை முடிவடைகின்றேன்.     

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood