கில்லியின் கில்லிதான்டா ஆட்டம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று
*இப்பதிவினை நான் எழுதுவதற்கு முன்பாக ஓர் சின்ன குறிப்பு*
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் பால் வல்தட்டி சிறிது பந்துகளில் பொறுமையாக விளையாடினாலும், அங்கங்கு பௌண்டரிகளை அடித்தார். ஆனால் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஸ்கோர் 4 ஓவர்களில் முடிவில் 25/1 என இருந்தது. அங்கிருந்து, வழக்கம் போல் சரிவு தான் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும்போது நடந்தது வேறு. இரு ஆஸ்திரேலியா நாட்டினை சார்ந்த வீரர்களான ஷான் மார்ஷ் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட், பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்களை வாதம் செய்தார்கள். இவ்விருவர்களில் யாரையும் நான் உயர்த்தியும் தாழ்த்தியும் உரைக்க கூடாது. இப்போட்டி பேட்டிங், அதிரடி கிரிக்கெட் ரசிகர்களுக்கான போட்டி. ஆடம் கில்கிறிஸ்ட் தனது சதத்தை கடைசி ஓவரில் பௌண்டரியுடன் நிறைவு செய்தார். மறுபுறத்தில் ஷாவ்உன் மார்ஷ் 79 ரங்களுடன் ஆட்டமிழக்காம்ல இருந்தார். இறுதியில் 232/2 என 20 ஓவர்களில் முடிவில் ஸ்கோர் இருந்தது. கில்கிறிஸ்ட் தனிப்பட்ட முறையில் 106 ரன்கள் 55 பந்துகளில் குவித்தார், அதில் 9 சிக்ஸர்கள். மறுபுறத்தில் ஷான் மார்ஷ் 79 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். நான் எதிர்பார்த்தது இருவருமே சதங்கள் பதித்து, 20 ஓவர் கிரிக்கெட்டில் சாதனையை நிலைநாட்டுவர் என்று. ஆனால், ஒன்றே படியில் அதனை தவற்றியது பஞ்சாப் அணி.
இது திரில்லர் போட்டி அல்ல. ஒரு பாகத்தை சேர்ந்த போட்டியாகவே அமைந்த போட்டி. ஆனால், நான் இதை பதிவிடுவதற்கு ஓர் முக்கிய காரணம் ஆடம் கில்கிறிஸ்ட் எனும் ஓர் வரலாறு சிறப்பு பெற்ற வீரர் தான். உடனே நீங்கள், என்ன கேட்கலாம், ஒரு விளையாட்டு வீரருக்காக என் பதிவிடுகின்றாய் என ? 2011ம் ஆண்டில் அவர் உலகக்கோப்பை தொடரில் பங்குபெறவில்லை. ஐபிஎல் தொடரை பொறுத்த வரை 2009ம் ஆண்டில் டெக்கான் சார்ஜ்ர்ஸ் அணியிற்காக கோப்பையை வென்றெடுத்தாலும், 2011ம் ஆண்டில் அவரை வெளியிட்டனர். பஞ்சாப் அணியிற்காக இப்போட்டியினை விளையாடுவதற்கு முன், சரியான தொடராக அவருக்கு அமையவில்லை. ஆதலால், பல நெருக்கடிகளில் இவர் சிக்கியிருந்தார். இவரின் விளையாட்டு காலம் சிறப்பாக அமைந்தாலும், தனது முடிவு நினைத்து அளவிற்கு பிரம்மாண்டமாக அமையவில்லை. எனவே, அவருக்கு ஓர் பாராட்டு அஞ்சலியாக நான் இதை எழுதுகின்றேன்.
மே 17, 2011ம் ஆண்டில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் கிங்ஸ் 11 பஞ்சாப் அணி, தரம்ஷாலா மைதானத்தில் மோதியது. அவ்வாண்டில் இதற்கு முன் இவ்விரு அணிகள் நேர்கொண்ட பொழுது, பெங்களூரு அணி 205 ரன்களை அடித்து, 80 ரன்கள் அருகில் வென்றது. அதில் கிறிஸ் கெயில் சதம் அடித்தார். இம்முறை, பழிக்கு பழி கொடுக்க முடிகின்ற தருணம். மற்றும், பஞ்சாப் அணியிற்கு வெற்றி மிகவும் அவசியம். மறுபுறத்தில், பெங்களூரு அணி, பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தது.

எனக்கு மிகவும் சிறப்பான தருணம் ஒன்று அல்ல, இரண்டு தருணங்கள் உள்ளது. முதலில், 10வது ஓவரில், லங்கேல்ட்வெல்ட் பந்து வீசிய போது, மூன்று சிக்ஸர்கல் வரிசையாக அடித்து தனது அரை சதத்தை பதிவிட்டார். அதில், முதல் சிக்ஸர், டீப் பாயிண்ட் திசையில் 124மீட்டர்
தொலைவு சென்றது. 40 வயதில், தனது உடல் வலு மிகவும் அதிகம் என அந்த ஒரு சிக்ஸர் மட்டுமே காட்டும். மற்றும் இரண்டாவது சிறப்பு தருணம், வண்டெர் வாத் வீசிய 15வது ஓவரில், ஷான் மார்ஷ் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 ஃபோர்களை அடித்து 30 ரன்கள் அடித்தார். இரு ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்கள், தங்களின் இயல்பான ஆட்டம் சீராக செயல்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு இதுவே ஓர் ஆதாரம்.
நான் மீண்டும் கூறுகின்றேன், இது ஒரு பாகத்தை சார்ந்த போட்டியாக அமைந்தது. தொடக்கத்திலேயே, பெங்களூரு அணியின் சிறப்பான ஆட்டக்காரரான கிறிஸ் கெயில், 7 பந்துகளில் ரன்கள் ஏதும் குவிக்காமல், தடுமாறி தனது விக்கெட்டை இழந்தார். அப்போதைய நிலை, கிறிஸ் கெயில் மற்றும் விராட் கோலி தவறினால், பெங்களூரு அணியிற்கு வெற்றி வாய்ப்பு அப்போட்டியில் தவறி விடும். அன்று, இருவருமே சொதப்பியதால், வெற்றி வாய்ப்பு தவறி, 121 ரங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆட்ட நாயகன் விருதை பெற்றது - ஆடம் கில்கிறிஸ்ட். "உங்களுக்கு இன்னும் வயசே ஆகல"
Comments
Post a Comment