30 மார்ச் 2011 - 9 வருடங்களுக்கு முன் இன்று

இந்தியா - பாகிஸ்தான் போட்டி 


2011 இந்தியா-பாகிஸ்தான் செமிஃபைனல் போட்டி. செம டென்ஷன் உள்ள போட்டி, ஆனா ஒன் சைடட் போட்டியா முடிஞ்சிடுச்சு. ரெண்டு டீம்ஸும் பௌலிங்'ல ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தாங்க. மொஹாலி பிட்ச் வேற ரொம்ப ட்ரய்யா இருந்துச்சு. அதுக்கு ஏத்த பிட்சும் எடுத்து கொடுத்துச்சு.

இந்தியா அணி டாஸ் வின் பண்ணி பேட்டிங் சூஸ் பண்ணாங்க. முதல்ல பேட்டிங் பண்ண இந்தியா அணி, சேவாக் அதிரடியா தொடங்கினாரு. 25 பந்துகள்'ல 38 ரன்கள் அடிச்சு பவர்ப்பிளே ஓவர்கள'ல தேவையான ஸ்கோர் கொண்டு வந்தாரு. 5.4 ஓவர்கள்'ல இந்தியா டீமோட ஸ்கோர் 48/0. அப்போ தான் சரியான நேரத்துல வஹாப் ரியாஸ் சேவாக்'அ LBW எடுக்குறாரு. சேவாக் அவரோட வேலைய சரியா செஞ்சுட்டு போயிட்டாரு. அடுத்து கம்பீர் உள்ள வராரு.டெண்டுல்கரும் கம்பீரும் சேர்ந்து பொறுமையா ஆடி ஸ்கோர் ஏத்திட்டு இருந்தாங்க. நடுல டெண்டுல்கர் அடிச்சு ரெண்டு கேட்ச் பாக்கிஸ்தான் விட்டாங்க. அவங்க ஃபீலடிங் அன்னிக்கி மோசமா இருந்துச்சு. 19வது ஓவர்'ல கம்பீர் ஹஃபீஸ் ஸ்பின்ல ஏமாந்து ஸ்டும்ப்பிங் ஆகுறாரு. அப்போ ஸ்கோர் 118/2, 18.5 ஓவர்கள்'ல. அதுக்கு அப்ரோம் கோஹ்லி 9 ரங்களுக்கு அவுட் ஆகி பெவிலியன்'கு போனாரு. இந்த டௌர்ன்மெண்ட்டோட  நாயகனான யுவராஜ் சிங்க் முதல் பந்துலயே பௌல்டு ஆகி வெளில போனாரு. அப்போ எல்லா ரசிகர்களோட மனசுலயும் ஒரு பயம் இருந்துச்சு. தோனியும் டெண்டுல்கரும் சேர்ந்து ரன்கள் சேர்த்தங்க. அப்போ 3 வாடி டெண்டுல்கரோட கேட்ச்'அ தவற விட்ட பாகிஸ்தான் அணி கடைசியா ஷாஹித்  அஃப்ரிடி அவர் கேட்ச்'அ புடிச்சி 85 ரங்களுக்கு அவரை அவுட் ஆக்குறாங்க. அங்க இருந்து கொஞ்சம் நேரத்துல தோனியும் அவுட் ஆகி போனாரு. உள்ள இருந்தது ரெய்னா மற்றும் ஹர்பஜன். 41.4 ஓவர்களல ஸ்கோர் 205/6னு இருந்துச்சு. இங்க இருந்து போட்டி எப்படி வென போயிருக்கலாம். ஆனா அங்க ரெய்னா டைலெண்டெர்ஸ் கூட நின்னு பார்ட்னெர்ஷிப் போடு ஆடி எப்டியோ இந்தியாவ 50 ஓவர்கள் முழுசா ஆட வெக்க முடிஞ்சுது. இந்தியா அணியோட ஸ்கோர் 260/9, 50 ஓவர் முடிவு'ல. ரொம்ப பொறுப்பா விளையாடி கடைசில 39 பந்துகள்'ல 36 ரன்கள் அடிச்சி ஆட்டம் இழக்காம இருந்தாரு. வஹாப் ரியாஸ் 5 விக்கெட்டுக்கள் எடுத்து இந்தியா அணியோட பேட்டிங்'அ சுக்குநூறா காலி பண்ணிட்டாரு. அந்த 36 ரன்கள் தான் இந்தியா அணியோட தன்னம்பிக்கையா இருந்துச்சுனு கூட சொல்லலாம். அவரும் அவுட் ஆகிருந்தாருன்னா நம்ம 220 குள்ள ஆல் அவுட் ஆகிருப்போம்,பாக்கிஸ்தான் அணிக்கு ரொம்ப எளிமையான சேஸ்'கு வழி வகுத்த மாதிரி ஆயிருக்கும். 

சரி பாகிஸ்தான் அணி பேட்டிங் பண்ண வந்தாங்க. முதல்ல இருந்தே அவங்களுக்கு ஒரு வாய்ப்பும் குடுக்காம அப்போப்போ விக்கெட்டுகள்'ல எடுத்துகிட்டே இருந்தோம். எல்லா பௌலர்சம் சரியான லைன் லெங்த்'ல போட்டு அட்டாக் பண்ணிட்டே இருந்தாங்க. ஆனா மிஸ்பா உல் ஹக் திடீர்னு பயம் காட்ட ஆரம்பிச்சுட்டாரு. அவர் மட்டும் தனியா ஒரு பக்கம் போராடிட்டு இருந்தாரு. ஆனா இன்னொரு பக்கத்துல இருந்த ப்ளேயர்ஸ் எல்லாரும் அவுட் ஆகிட்டே இருந்ததால பிரஷர் காரணமா அவரும் அவுட் ஆகிட்டாரு. அது காரணமா பாகிஸ்தான் அணி 230 ரங்களுக்கு ஆல் அவுட் ஆகிட்டாங்க. இந்தியா அணியோட ஃபீலடிங் ரொம்ப அற்புதமா இருந்துச்சு. பௌலர்ஸ் எல்லாரும் ஆளுக்கு 2 விக்கெட் எடுத்தாங்க. இந்தியா ஜெயிச்சதுக்கும் பாகிஸ்தான் தோத்ததுக்கும் காரணம் ஒன்னு ஃபீலடிங் ரெண்டாவது கடைசில ரெய்னா அடிச்ச ரன்கள். பாகிஸ்தான் அணியில் அப்படி லோயர் மிட்டில் ஒருத்தன் மிஸ்பா உல் ஹக் கூட நின்னு சப்போர்ட் பண்ணிருந்தானா அவங்க ஜெயிச்சிருப்பாங்க. ஆனா டெண்டுல்கர், சேவாக் அடிச்ச ரங்களையும் நம்ம மறந்துட கூடாது. அது தான் நம்ம இந்தியா அணிக்கு அடித்தளம் போட்டுச்சு. ஆட்ட நாயகன் விருதை வாங்கினது சச்சின் டெண்டுல்கர் அவரோட 85(115) காரணமா. ஆனா இந்த வெற்றி எல்லாரோட நல்ல  கேம் காரணமா கெடச்சது. அதே நேரத்துல பாகிஸ்தான் எப்போ உலகக்கோப்பை'ல இந்தியா கூட விளையாடினாலும் தோல்வி தான். அதுனால "அப்பனுக்கு அப்பன் எப்பவுமே இருப்பான். உனக்கு அப்பன் நான் தான் டா" அப்படினு நா சொல்லல, இந்தியா அணியோட பெர்ஃபோர்மன்ஸ்   சொல்லுது. 

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?