இந்தியா - ஆஸ்திரேலியா, 2014 T20 உலகக்கோப்பை போட்டி

           2014 டீ20 உலகக்கோப்பை போட்டி 

சரியா 6 வருஷத்துக்கு முன்னாடி, இன்னிக்கி இந்தியா ஆஸ்திரேலியா டீ20 போட்டி நடந்துச்சு. ஏற்கனவே மத்த மூணு போட்டியும் ஜெயிச்சு செமிஃபைனல் போட்டிக்கு குவாலிஃபை  ஆயாச்சு.  ஆனா யுவராஜ் சிங்கோட ஆட்டத்த எல்லாரும் கேள்வி கேட்டுட்டு இருந்தாங்க. எதுக்கு இவர் டீம்'ல வெச்சுருக்கீங்க, வேற யாரவது உள்ள  வரலாம்'ல, அப்டினு நெறய பேச்சு போய்ட்டு இருந்துச்சு, காரணம் இதுக்கு முன்னாடி மெட்சஸ்'ல அவரு ரொம்ப சுமாரா பேட்டிங் பண்ணாரு. ஆனா இது எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வெக்குற மாறி அன்னிக்கி விளையாடினாரு. 

ஆஸ்திரேலியா அணி டாஸ் வின் பண்ணி பௌலிங் தேர்ந்தெடுத்தாங்க. ஆனா இந்தியா பேட்ஸ்மேன் கிட்ட இருந்து அவ்வளவு சிறப்பான ஸ்டார்ட் கெடயாது. ரஹானே, ரோஹித், கோலி மற்றும் ரெய்னா, நாலு பேருமே சீக்கிரமா அவுட் ஆயிட்டு போனாங்க. உள்ள இருந்தது தோனி மற்றும் யுவராஜ் சிங்க், அப்போ ஸ்கோர் 66/4, 11.3 ஓவர்ஸ் முடிவுல. சேரி நம்ம நிலமை இன்னும் மோசமா போக போகுதுனு எல்லாரும் எதிர்பாத்துட்டு இருந்தாங்க. ஆனா யுவராஜ், தோணியோட சப்போர்ட்'ல வெறித்தனமா பேட்டிங் பண்ணாரு. ஃப்லிக் , கவர்ஸ்'ல டௌன் தி கிரௌண்ட் அப்டினு எல்லா திசையிலும் சிக்ஸ் அடிச்சாரு. யுவராஜ் சிங்க் ஆஸ்திரேலியா அணியிடம்" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ" அப்டிங்கறாரு. 60 ரன்கள் 42 பந்துகள்'ல அடிக்குறாரு, அது காரணமா இந்தியா 20 ஓவர் முடிவுல 159/7 னு ஸ்கோர் எடுக்குறாங்க.

ஆஸ்திரேலியா அணி ரொம்ப மோசமா பேட்டிங் பண்ணாங்க. 86 ரங்களுக்கு ஆல் அவுட் ஆகுறாங்க. ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகள் எடுத்து அவங்க பேட்டிங்கை பொட்டலம் போட்டு பார்சல் பன்றாரு. அது நாலா ஆட்ட நாயகன் விருது அவருக்கு கொடுத்துட்டாங்க. ஆனா உண்மையிலே ஆஸ்திரேலியா அணியை முதல்லயே கதற விட்டது யுவராஜ் தான்.         

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?