இந்தியா - ஸ்ரீலங்கா, 20 ஓவர் தொடர், முதல் போட்டி, 2020

இந்தியா ஸ்ரீலங்கா இடையே நடந்த முதலாவது 20 ஓவர் போட்டி, 2020

( எச்சரிக்கை : கலாய்கள் சிரிப்பதற்காகவே, பிறர் மனதினை புண்படுத்துவதற்கு அல்ல ) கடைசியா 1 மாசத்துக்கு முன்னாடி இந்தியா 20 ஓவர் போட்டி விளையாடிச்சு. ஶ்ரீலங்கா எதிராக ஓர் தொடர் 2017'ல விளையாடினோம். அதுக்கு அப்பறோம் விளையாடவே இல்ல.  சரி இந்த மேட்ச்'அ பார்க்கலாம்'னு 6 மணிக்கு'லாம் ரெடியா உக்காந்து, இந்த experts போடுற மொக்க காமெடி'லாம் சகிச்சிட்டு, டாஸ் முடிச்சிட்டு இந்தியா பீல்டிங்'னு சொன்னதுக்கு அப்புறம் மேட்ச் ஆரம்பிக்க போவுது'னு excited’அ இருந்தா, திடீரென மழை'னு நியுஸ் வருது. அட நாரப்பயலே'னு மனசுல நெனச்சுகிட்டேன். சரி பரவாயில்லை'னு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்'ல போடுற பழைய மேட்ச் ஹயிலைட்ஸ்'அ லாம் பார்த்துட்டு, இந்த மேட்ச் எக்ஸ்பெர்ட்ஸ் அப்டேட்'ங்கிற பேருல அவனுங்க பேசுற நியாயத்தலாம் கேட்டுட்டு அவனுங்களே மொக்கையா ஒன்னு சொல்லிட்டு அதுக்கு அவனுங்களே சிரிக்கிறதையும் தாங்கிகிட்டு ,ரெண்டு மணி நேரம் ஒட்டினோம். சரி மேட்ச் இப்பொவாவது ஆரம்பிக்கும்'னு பார்த்தா 5 ஓவர் மேட்ச் தானு சொல்லிட்டானுங்க. சரி ஏதோ இதாவது பார்த்துடலாம்'னு பார்த்தா பிட்ச் ஈரமாக இருக்கு காய வைக்கனும்'னு இவனுங்க பன்ன கூத்து இருக்கே, சை !!!. ஏர் டிரையர், அயர்ன் பாக்ஸ்லாம் பிட்ச் காய வைக்க பயன்படுத்தி நம்ம நாட்டையே பெருமை படுத்திட்டாங்க!!!. பிட்ச் 'கு அடியில bomb இருக்கானு பாத்தா பாகிஸ்தான் காரன் 'லாம் நம்மள கலாய்ச்சானுங்க. கிரிக்கெட்டில் உலகின் மிக செல்வாக்கான நாடு'னு நாம நெனச்சு பெருமை பட வேண்டிய பொன்னான நேரம் இது !!

அப்பவே தெரிஞ்சு போச்சு மேட்ச் கேன்ஸல்டுன்னு. நெனச்சா மாதிரியே கேன்சல் பண்ணிட்டானுங்க.

செல்லூர் ராஜு பண்ணத வடக்கன்ஸ் வெச்சு செஞ்சானுங்க, இப்போ நீங்க பண்ணத பார்த்து நாங்க மட்டும் இல்ல உலகமே வெச்சு செய்யுது.எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம், எங்கள பார்த்தா உலகமே மயங்கி வுழுந்துரும் !!!

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood