26வது மார்ச் 2015

வரலாற்றில் இன்று - 26/3/2015 


2015ம் ஆண்டு 26வது மார்ச் - இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியிடையே நடந்த அரை இறுதி போட்டி 

ஆமாம் , அன்னிக்கி இந்தியா அணி தோத்துட்டாங்க.ரசிகர்கள் நிறைய பேரு ஆசைப்பட்ட மாறி நம்மளோட வேர்ல்ட் கப் கனவு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம போயிடுச்சு. ஆஸ்திரேலியா அணி அவங்களோட அஞ்சாவது வேர்ல்ட் கப் ஜெயிக்க இந்தியாவ தோக்கடிச்சது ஒரு முக்கிய காரணம் . நியூஸிலாந்து அணி அவங்களோட அரையிறுதி போட்டி ஊட்பட எல்லாமே நியூஸிலாந்து'ல விளையாடினாங்க,அதுனால இறுதி போட்டியில ஜெயிக்க முடிஞ்சுது.சரி நம்ம நிலைமைக்கு வருவோம்.

இந்த வேர்ல்ட்கப் ஆரம்பிக்குறதுக்கு முன்னாடி இந்தியா அணி கண்டிப்பா சொதப்பும்'னு தான் மக்கள் சொன்னாங்க. காரணம், வேர்ல்ட்கப்'கு முன்னாடி நம்ம டீமோட பேரஃப்போமன்ஸ் அவ்ளோ மோசம். ஹோம் மட்சஸ் தவற மத்த எல்லா இடத்துலயும் இந்தியா அடி வாங்கிச்சு. ஆனா, வேர்ல்ட்கப்'ல இந்தியா அரை இறுதி போட்டி வரைக்கும் ஒரு மேட்ச் கூட தோக்காம வந்தாங்க. 

நிறைய பேர், நம்ம குரூப்ல இருந்த டீம்ஸ் எல்லாம் ரொம்ப சுமார்'னு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா வேர்ல்ட்கப்'னு வந்தா எல்லா டீமும் டஃப் குடுக்கும். அதனால எல்லா போட்டியுமே முக்கியம் தான்  

அரையிறுதி போட்டியில,ஆஸ்திரேலியா அணி டாஸ் வின் பண்ணி பேட்டிங் தேர்ந்தெடுத்தாங்க. ஃபின்ச் மற்றும் ஸ்மித் நாலா பக்கமும் நம்ம பௌலர்ஸ்'அ சிதறடிச்சிட்டு இருந்தாங்க.யாதவ்,ஷமி மற்றும் மோஹித் ஷர்மா மூணு பேருமே ரொம்ப பாதிக்கப்பட்டாங்க. இவங்க விக்கெட்ஸ் எடுத்துட்டோம் இனிமே நமக்கு கவலை கெடயாது'னு நெனச்சு கொஞ்ச நேரம் கூட சந்தோச பட முடில. கடைசில மிட்செல் ஜான்சன் 7 பால்'ல 21 ரன்கள் அடிச்சி 328/7 னு ரொம்ப ரொம்ப பெரிய ஸ்கோர்'அ அடிச்சாங்க. வேர்ல்ட்கப் போட்டியில அதுவும் அரையிறுதி போட்டியில 250'கு மேல அடிக்கிற ஒவ்வொரு ரன்னும் பயத்த தான் குடுக்கும். அதுவும் ஸ்டார்க், ஜான்சன், ஃபால்குனர், ஹெசிலவுட்'னு ஒரு ராட்சச ஃபாஸ்ட் பௌலிங் எதிர்க்க ரொம்பவும் கஷ்டமான இலக்கு. ஆனால் வேற வழியே இல்ல, இத அடிச்சி தான் ஆகணும்'னு தவான் மற்றும் ரோஹித் ரெண்டு பேருமே ஓப்பனிங் எறங்குறாங்க.  ரொம்ப பாஸிட்டிவா பேட்டிங் பண்றங்க. 12 ஓவர்ஸ்'ல 73/0 னு இந்தியா அடிக்க, நம்ம தான் ஜெயிக்க போறோம்னு ரொம்ப சந்தோஷமா இருந்தோம். அப்போ தான், தவான் மேஸ்வெல் கிட்ட டீப்'ல கேட்ச் குடுத்து அவுட் ஆகுறாரு. உடனே மடமட'னு கோலி ரோஹித் மற்றும் ரெய்னா அவங்க அவங்க விக்கெட்டை இழந்தாங்க. 108'கு 4 விக்கெட் இழந்த நிலை'ல தோனி ரஹானே கூட சேர்ந்து ஆட உள்ள வராரு. அப்போ ரொம்ப மோசமான நிலைமையில இருந்தோம். சரி, இவங்க ரெண்டு பேரும் எப்படியாவது மேட்ச்'அ கொண்டு போவாங்க'னு நம்பிட்டு இருந்தோம். ஆனா அந்த நம்பிக்கை கொஞ்ச நேரத்துக்கு மட்டும் தான். ரஹானே 36வது ஓவர்'ல 44 ரங்களுக்கு அவுட் ஆனார். அப்போ ஸ்கோர் 178/5. சரி தோனி இருக்காரு எப்படியாவது கொண்டு போயிடுவாருனு நம்பிட்டு இருந்தோம். இன்னொரு பக்கம் ஜடேஜா, அஸ்வின் டக்கு டக்குனு அவுட் ஆயிட்டு இருந்தாங்க. ஆனா தோனி இருக்காரு, கண்டிப்பா ஏதாவது பண்ணுவாரு'னு ரசிகர்கள் நம்பிட்டு இருந்தாங்க. அவரும் முடிஞ்ச வரைக்கும் போராடி பாத்தாரு. கடைசி'ல இன்னொரு எண்டு'ல சப்போர்ட் எதுவும் இல்லாம பிரஷர் காரணமா 65 ரங்களுக்கு ரன் அவுட் ஆகிட்டு போனாரு.அவர் போனதோடு வேர்ல்ட்கப் கனவும் கூடவே சேர்ந்து போயிடுச்சு. நமக்கும் வேர்ல்ட்கப்'கும் நடுல நந்தி மாதிரி குறுக்க நிக்குறது இந்த ஆஸ்திரேலியா அணி தான். 2003 வேர்ல்ட்கப்'ல இறுதி போட்டியில போயி மேட்ச்'அ தோத்தது ஆஸ்திரேலியா அணி கூட தான். 2011 நம்ம டீம் கப் ஜெயிக்க காரணமும் கால் இறுதி போட்டியில ஆஸ்திரேலியா அணி கூட ஜெயிச்சது தான். அது தான், நிதரசமான உண்மையும் கூட. இந்தியா கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு இந்த நாள் ஒரு கருப்பு நாளாக அமைஞ்சுது.                

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?