மார்ச் 28 - கிரிக்கெட் வரலாற்றில் இன்று
வரலாற்றில் இன்று - மார்ச் 28, 2007
2007 வேர்ல்ட்கப் - ஸ்ரீலங்கா சவுத் ஆஃப்ரிக்கா சூப்பர் 8 போட்டி.
முதல்'ல பேட்டிங் பண்ண ஸ்ரீலங்கா 209'கு ஆல் அவுட் ஆகிட்டாங்க.அந்த ஸ்கோர் கூட தில்ஷான், ரசல் ஆர்னோல்ட் அடிச்ச 50'ஸ் நாள தான் வந்துச்சு. அடுத்து சவுத் ஆஃப்ரிக்கா பேட்டிங் பண்றாங்க. காலிஸ்,க்ரெம் ஸ்மித், கிப்ஸ் மூணு பேருமே அடிச்சு 206/5னு ஜெயிக்குற நிலைமைக்கு கொண்டு வராங்க. வெறும் 4 ரன் அடிச்சா வெற்றி நிச்சயம்னு இருக்குற நேரத்துல மலிங்கா பௌலிங் போட வராரு. சரி சவுத் ஆப்ஃரிக்கா ஜெயிச்சிடுவாங்க நாம நம்ம வேலைய பாப்போம்னு நிறையா பேர் TV'ய OFF பண்ணிட்டாங்க. ஆனா அன்னிக்கி அந்த மேட்ச்'அ முழுசா பாத்தவங்களுக்கு தான் தெரியும் அடுத்து என்ன நடந்துச்சுனு.
மலிங்கா பௌலிங் போட வராரு 44.4 ஓவர்ஸ் முடிஞ்சிடுச்சு, ஸ்கோர் 206/5.ஷான் பொல்லாக் அந்த பால்'ல பௌல்டு ஆகுறாரு.அடுத்த பால்,ஆண்ட்ரே ஹால் மலிங்கா பந்து'ல கேட்ச் குடுத்து விக்கெட்'அ எழக்குறாரு, வரிசையா ரெண்டு பந்துகள்'ல ரெண்டு விக்கெட், ஸ்கோர் 206/7. அடுத்த ஓவர்ல ஒரு ரன் எடுக்குறாங்க. ஸ்கோர் 207/7, ஓவர்ஸ் 46 முடிஞ்சிருச்சு. திரும்ப பௌலிங் போடா வராரு மலிங்கா. இந்த ஓவரோட முதல் ரெண்டு பந்துகள்'ல ரெண்டு விக்கெட் எடுக்குறாரு மலிங்கா. அவுட் ஆகுறது காலிஸ் மற்றும் மகாயா நிடினி. ஸ்கோர் 207/9,மலிங்கா நாலு பால்'ல நாலு விக்கெட் வரிசையா எடுத்து நல்ல நிலமைல இருந்த சவுத் ஆஃப்ரிக்கா அன்னிக்கு அப்போ கிட்டதட்ட அல்லு இல்லை'னே சொல்லலாம்.கடைசி விக்கெட் ஆனா லங்கேல்வெல்டட் எப்டியோ பீட்டர்சன் கிட்ட சிங்கள் தட்டி குடுக்குறாரு. அதுக்கு அடுத்த ஓவர் அவுட் ஆகம மெய்டன் ஆக்கிட்டாங்க. திரும்ப மலிங்கா போடா வராரு, ஸ்ட்ரைக்'ல இருந்தது ராபின் பீட்டர்சன். தேவை, 2 ரன்கள், விக்கெட் 1 தான் இருந்தது. சவுத் ஆஃப்ரிக்கா ரசிகர்கள் மனசுல ஒரே பயம். ராபின் பீட்டர்சன் எப்டியோ அவ்வளவு படபடப்புல பௌண்டரி அடிச்சு மேட்ச் வின் பண்ணி குடுத்தாரு. சவுத் ஆப்ரிக்கா ரசிகர்கள் இன்னிக்கும் அந்த மேட்ச்'அ மறக்க மாட்டாங்க. கைல இருந்த மேட்ச் கிட்டத்தட்ட கைய விட்டு போன நிலைமை வந்த எவனா இருந்தாலும் மறக்க மாட்டான்.
Good!
ReplyDelete