31/3/2016_ இந்தியா-வெஸ்ட் இண்டீஸ், 2016 டீ20 உலகக்கோப்பை

வரலாற்றில் இன்று 

இன்னிக்கி தான் நாலு வருஷத்துக்கு முன்னாடி இந்தியாகும் வெஸ்ட் இண்டிஸ்க்கும் நடுல டீ20 செமி ஃபைனல் போட்டி நடந்துச்சு. ஒரு பக்கம் ஸ்ட்ராங்கான வெஸ்ட் இண்டீஸ். இன்னொரு பக்கம் புரிஞ்சிக்கவே முடியாத இந்தியா. டாஸ் வின் பண்ண வெஸ்ட் இண்டீஸ் டீம் முதல்'ல பௌலிங் சூஸ் பண்ணாங்க. ஏற்கனவே இந்தியா டீமோட ஒப்பனர்ஸ் இந்த டௌர்ன்மெண்ட்'ல சரியா விளையாடல. அதனால தவானுக்கு பதிலா ரஹானே'வ உள்ள கொண்டு வராங்க. அவங்க ரெண்டு பேருக்கும் நல்லா  விளையாடியே ஆகா வேண்டிய நிலமை. அதுக்கு எத மாறி அன்னிக்கி ரெண்டு பேரும் நல்லா ஸ்டார்ட் பன்றாங்க. பவர்பிளே'ல நல்லா ஸ்கோர் பன்றாங்க.  பெரும் 40ஸ்'ல அவுட் ஆகுறாங்க. உள்ள கோலி ஏற்கனவே கொஞ்சம் பொறுமையா இருந்தாரு. தோனி உள்ள வராரு. கோலி வர்ற பௌலர்ஸ் எல்லாரையும் நாலா பக்கமும் பிரிச்சு மேயுறாரு. நீ போட போட நான் அடிச்சிகிட்டே இருக்கேன்.  கவர் டிரைவ், ஆன் டிரைவ், லெக் கிளாண்ஸ், புல் ஷாட், டவுன் தி கிரௌண்ட், லேட் கட்'னு மொத்த வித்தையையும் ஏறக்குறாரு. அதும் இல்லாம வெஸ்ட் இண்டீஸ் பௌலர்களுக்கு சரக்கு மொத்தமும் தீர்ந்து போச்சு. இதுக்கு நடுல தோணிக்கும் கோலிக்கும் இருந்த அந்த ரன்னிங் பிட்வீன் தி விக்கெட்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருந்துச்சு. ஆஸ்திரெலியா'கு எதிர எங்க விட்டாரோ அங்க இருந்து தொடங்கின மாறி இருந்துச்சு. இந்தியா ஸ்கோர் 192/2. இதுல கோலி 89*(51) அடிச்சு விளாசினார்.
இந்த பெரிய ஸ்கோரை சேஸ் பண்ண வெஸ்ட் இண்டீஸ் உள்ள வராங்க. கெயில் மற்றும் சாமுயேல்ஸ் ரெண்டு பேரும் சீக்கிரமா அவுட் ஆயிட்டாங்க. அதா பாத்துட்டு இந்தியா தான் ஜெயிக்க போகுது'னு, எல்லாரும் முடிவு பன்றாங்க. ஆனா அத பொய்யாக்குற மாறி சார்லஸ் மற்றும் சிம்மன்ஸ் அடிச்சி ஆடுறாங்க. நம்ம பௌலர்ஸும் நடுல நோ பால் போட்டாங்க. கோலி சார்லஸ் விக்கெட்டை எடுக்குறாரு. அடுத்து ரசல் உள்ள வராரு. சரியா 15 ஓவர்'ல சிம்மோன்ஸ் கேட்ச் அவுட் ஆவாரு, ஆனா அந்த பௌலர் போட்ட ஃபிரண்ட் ஃபூட் நோ பால் காரணமா திரும்ப உள்ள வராரு. காட்டுத்தனமா அடிச்சு ஆடுறாங்க.  நீ அடிச்சா மட்டும் தான் பௌண்டரி போகுமா நா அடிச்சாலும் பௌண்டரி போகும்'னு சொல்லி சொல்லி அடிச்சாங்க. கோலியோட ஒட்டு மொத்த உழைப்பையும் வீனா போயிடுச்சு. ஈஸியா சேஸ் பண்ணிட்டாங்க.
                    

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?