இந்தியாவின் 2வது உலகக்கோப்பை
ஏப்ரல் 2, 2011 - இந்தியா-ஸ்ரீலங்கா, இறுதி போட்டி
ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி, இன்னிக்கி இந்தியா அவங்களோட ரெண்டாவது உலகக்கோப்பை ஜெயிச்சாங்க. 28 வருஷ கனவு அன்னிக்கி நேரவேறிடுச்சு. இந்த உலகக்கோப்பை நம்ம ஜெயிச்சதுக்கு டீம்'ல உள்ள எல்லா பிளேயர்ஸும் காரணம். ஆஸ்திரேலியா அணி கேப்டன் ரிக்கி போன்டிங், இந்தியா கூட கால் இறுதியில தோத்ததுக்கு அப்பறோம், அவர் கொடுத்த பேட்டியில, இந்தியாவ இந்த உலகக்கோப்பை ஜெய்க்குறதுல இருந்து யாராலயும் தடுக்க முடியாது'னு சொன்னாரு. சரி நம்ம இந்த ஃபைனல்ஸ் மேட்ச்'கு வருவோம். மேட்ச் டெண்டுல்கர் பொறந்த ஊரான மும்பை'ல நடக்குது. டாஸ் வென்ற ஸ்ரீலங்கா முதல்'ல பேட்டிங் சூஸ் பண்ணாங்க. ஜாஹீர் கான் முதல்லேயே உபுல் தரங்கா'வ தெணறடிச்சு அவர் விக்கெட்ட தூக்கினார். அதுக்கு அப்பறோம் நல்ல விளையாடிட்டு இருந்த தில்ஷான் ஹர்பஜன் பௌலிங்'ல சிக்குனாரு. அதுக்கு அப்ரோம் சங்ககாரா மற்றும் ஜெயவர்தனே, ரெண்டு பேரும் ஸ்கோர கொஞ்சம் கொஞ்சமா ஏத்தி திரும்ப நல்ல நிலமைக்கு ஸ்ரீலங்காவ கொண்டு வந்துட்டு இருக்காங்க ஆனா அப்போ தோணியோட ஆயுதம், துருப்பு சீட்டான யுவராஜ் சிங்க் சங்ககாரா விக்கெட்ட தூக்குறாரு. அதுக்கு அப்ரோம் ஒரு பக்கம் ஜெயவர்தனே தனியா ஸ்கோர் ஏத்திட்டு இருந்தாரு. இன்னொரு பக்கம் முக்கியமான நேரத்துல திலன் சமரவீரா மற்றும் கபுகேதரா ரெண்டு பேருமே சீக்கிரம் அவுட் ஆகிட்டு போனாங்க. அதுக்கு அப்பறோம் குலசேகரா முக்கியமா கேமியோ 32 ரன்கள் அடிச்சாரு. ஜெயவர்தனே சதத்தை போட்டாரு. கடைசியா திசாரா பெரேரா, நல்ல ஃபினிஷிங் காரணமா 274/6 னு ஸ்ரீலங்கா நல்ல ஸ்கோர் அடிச்சாங்க. முக்கியமான விஷயம் இந்தியாவுக்கு எதிரா முதல்'ல பேட்டிங் பண்ண டீம் இந்த உலகக்கோப்பை'ல அடிச்ச பெரிய ஸ்கோர்.
இந்தியா அணி பேட்டிங்'கு வந்தாங்க. அதிரடி ஒப்பனர் சேவாக் அன்னிக்கி அதிரடியா தொடங்க முடில, ஆனா ஸ்ரீலங்கா அதிரடியா ரெண்டாவது பந்துலயே அவரோட விக்கெட்டை தூக்கினாங்க. அதுனால தொடக்கம் கொஞ்சம் பாதிச்சிது. கொஞ்ச நேரத்துலயே டெண்டுல்கரும் 18 ரங்களுக்கு அவுட் ஆகிட்டு போனாரு. ரெண்டு பேரையும் விக்கெட் எடுத்தது மலிங்கா. 31/2 னு இந்தியா தடுமாறிட்டு இருந்தாங்க. மும்பை'ல ஒரு மயான அமைதி. எல்லார் மனசுலயும் ஒரு பயம், இந்தியா ஜெயிப்பாங்களோ'னு. உள்ள கோலி வராரு. கம்பீர் மற்றும் கோலி சிறப்பா ஸ்கோர் ஏத்திட்டு இருந்தாங்க. ஆனா கம்பீர் ஒரு ரன் அவுட் மற்றும் ஒரு கேட்ச்'ல இருந்து தப்பிச்சாரு. அவர் அற்புதமா ஒரு அரை சதத்தை போட்டாரு. ரெண்டு பெரும் நல்லா விளையாடிட்டு இருக்கும்போது சரியான நேரத்துல கோலியோட விக்கெட்டை தில்ஷான் எடுக்குறாரு. ஸ்கோர் 114/3. எல்லாரும் யுவராஜ் தான் உள்ள வர போறாருனு நெனச்சிட்டு இருக்கும்போது, ஒரு மாற்று முயற்சியா கேப்டன் தோனி உள்ள வராரு. ரெண்டு பக்கம் ஸ்பின் பௌலர்ஸ் போட்டுட்டு இருக்கும்போது இடது-வலது பேட்ஸ்மேன் விளையாடினா அவங்களோட லைன் லெங்த் டிஸ்டர்ப் ஆகும், அது நால ஈஸியா ரன்கள் ஸ்கோர் பண்லாம்'னு எறங்குறாரு. அது இல்லாம போன உலகக்கோப்பை'ல தோனி முரளிதரன் பந்துவீச்சுல அவுட் ஆனாரு, இந்த முறை தோனி அவரை வெச்சு வாங்கினார். சரியா சொல்லனும்னா கம்பீர் ஒரு பக்கம் நிதார்னமா விளையாடிட்டு இருந்தாரு, இன்னொரு பக்கம் தோனி ரன் எ பால் இன்னிங்ஸ் ஆடிட்டு இருந்தாரு. இப்டியே இவங்க 108 ரன்கள் பார்ட்னெர்ஷிப் போட்டுட்டாங்க. சரி இவங்க முடிக்க போறாங்க னு நினைக்கும்போது கரெக்ட்டா கம்பீர் 97 ரங்களுக்கு அவுட் ஆனாரு. ஸ்கோர் 223/4. உ;உள்ள வந்தது யுவராஜ் சிங்க். தோனி அவரு வந்ததுக்கு அப்ரோம், இந்த டௌர்ன்மெண்ட் முழுக்க நீ அடிச்சிட்ட பங்காளி, இன்னிக்கி நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு, நா பாத்துக்குறேன்'னு மலிங்கா, குலசேகரா, பெரேரானு வர்ற பௌலர்ஸ்ஸ வெளுத்து வாங்கினாரு. அன்னிக்கி தோனியோட முழு பலம் என்னனு தெரிஞ்சிது. சரியா 48.3 ஓவர்'ல, ஸ்கோர் 271/4. தோனி ஸ்ட்ரைக்'ல இருக்காரு. குலசேகரா பந்து வசுறாரு. ஓங்கி ஒரு சிக்ஸர். இந்தியா கப் அடிக்கிறாங்க. இதை விட வேற என்ன வேணும். ரவி சாஸ்திரி கமண்டரி'ல " தோனி ஃபினிஷெஸ் ஆஃப் இன் ஹிஸ் ஸ்டைல், எ மக்னிஃபிசன்ட் ஸ்ட்ரைக் இண்டூ தி கிரௌட், இந்தியா லிஃப்ட்ஸ் தி வேர்ல்ட்கப், ஆஃப்டர் 28 யேர்ஸ், தி பார்ட்டி ஸ்டார்ட்ஸ் இந்த தி ட்ரெஸ்ஸிங் ரூம் ஆண்ட் இட்ஸ் தி இந்தியன் கேப்டன் ஹூ ஹாஸ் பீன் அப்ஸலுட்லீ மக்னிஃபிசன்ட் இந்த தி நைட் ஆஃப் தி ஃபைனல்" இன்னிக்கும் எல்லா ரசிகர்களோட மனசுலயும் இந்த மேட்ச் பாக்கும்போது இந்த கமென்டரி வாசகங்கள் ஒளிச்சிகிட்டே இருக்கும். இந்தியா கப் ஜெய்க்குறதுக்கு முன்னாடியே யுவராஜ் தான் தொடர் நாயகன்'னு முடிவு பண்ணிட்டாங்க. தோனி அவரோட சிறப்பான ஆட்டத்துக்காக அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுத்துட்டாங்க. டெண்டுல்கர் கனவு, பல ரசிகர்களோட கனவு, டோனி மற்றும் அவரோட டீம் ஆன சேவாக், டெண்டுல்கர், கம்பீர், யுவராஜ், ஜாஹீர், ரெய்னா, கோலி, ஹர்பஜன், யூசுஃப் அப்டினு சொல்லிட்டே போலாம். இவங்க எல்லாரோட உழைப்புலயும் கெடச்சு வெற்றி தான் இது.
Comments
Post a Comment