ஐபிஎல் வரலாற்றில் இன்று

டபுள் த்ரில்லர்கள் 


ஏப்ரல் 10, 2018 :

                                     இதே நாள் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி,  சேப்பாக்'ல மோதினாங்க. (முக்கிய பின் குறிப்பு :  அந்த வருஷத்துல, சென்னை'ல நடந்த ஒரே ஐபிஎல் போட்டி இது). ஊருக்குள்ள போராட்டம் நடந்துட்டு இருந்துச்சு. அரசியல் சாயம் பூசப்பட்ட, தமிழ்நாடு கர்நாடகா தண்ணீர் பிரச்னை. அது காரணமா சென்னை'ல போட்டி நடத்த கூடாதுனு போராட்டம் பண்ணிட்டு இருந்த நேரத்துல, இந்த போட்டி மட்டும் கஷ்ட பட்டு நடந்துச்சு. சரி நம்ம மேட்ச் பத்தி மட்டும் பேசுவோம். டாஸ் வென்ற சென்னை அணி முதலில் ஃபீல்டிங் தேர்ந்தெடுத்தாங்க. கொல்கத்தா அணி சரியான தொடக்கம். குறிப்பா இறுதியில ரசல் 36 பந்துகளுக்கு 88 ரன்கள் அடிச்சு ஆட்டம் இழக்காம இருந்தாரு. குறிப்ப அந்த ஒரு அடியில மட்டும் 11 சிக்ஸர்கள். அது காரணமா கொல்கத்தா அணி 202/6'னு ரொம்ப பெரிய ஸ்கோர் அடிச்சாங்க. அதுவும் இல்லாம, இதுக்கு முன்னாடி போட்டி 160 ரங்களையே சென்னை அணி 9 விக்கெட் இழந்து ஜெயிச்சாங்க, இந்த போட்டி ஜெய்க்குறது கொஞ்சம் கஷ்டம் தான் னு எல்லாரும் முடிவு பண்ணிட்டாங்க. ஆனா அதா பொய்யாக்குற மாறி வாட்சன் மற்றும் ராயுடு, அதிரடியா தொடங்குனாங்க. முதல் 6 ஓவர்'ல 75 ரன்கள் அடிச்சாங்க. ஆனா அதுக்கு அப்பறோம் தொடர்ந்து 3 விக்கெட்டுகளை இழந்தாங்க. உள்ள இருந்தது டோனி மற்றும் பில்லிங்ஸ். தேவை - 7 ஓவர்கள்'ல 91 ரன்கள். பில்லிங்ஸ் பிரிச்சு மேய ஆரம்பிச்சாரு. அதுக்கு அப்பறோம் தோனி அவுட் ஆனார் . பில்லிங்ஸ் தனியா, தன்னோட பெஸ்ட் பேட்டிங்க காட்டினார். ரசல் பேஸ் பௌலிங்'ல ஆஃப் ஸ்டம்ப் கிட்ட நகர்ந்து டில் ஸ்கூப் ஷாட்'ல சிக்ஸர் அடிப்பாரு. அது லாம் ரொம்ப திறமையான பேட்ஸ்மேன் நால மட்டும் தான் அடிக்க முடியும். கடைசியா 56 ரங்களுக்கு தன்னோட விக்கெட்ட இழந்தார். ஆனா தன்னோட வேலைய சரியா செஞ்சுட்டு போனாரு. கடைசி ஓவர்'ல 17 ரன்கள் தேவை. உள்ள இருந்தது பிராவோ மற்றும் ஜடேஜா. முதல் பந்து, நோ பால் ! சிக்ஸர் !!. இப்போ 6 பால்'கு 10 ரன்கள் தேவை னு இருந்துச்சு. அடுத்த பந்து 2 ரன்கள். அடுக்கு அடுத்து 1 ரன். அடுக்கு அடுத்து 1 வைட். அதுக்கு அடுத்து ஜடேஜா ஒரு ரன். திரும்ப பிராவோ ஒரு ரன் அடிக்க, ஆடியன்ஸ் மனசுல, டேய் சீக்ரம் முடிங்கடா, பாடி தாங்காது டா, னு நினைச்சிட்டு இருந்தப்போ தேவை ரெண்டு பால்'ல 4 ரன்கள். ஜடேஜா ஒரு சிக்ஸ் அடிக்க மேட்ச் முடிஞ்சிடுச்சு !!!
ஆட்ட நாயகன் - சாம் பில்லிங்ஸ் 

ஏப்ரல் 9, 2019 :

                                  இந்த நாள் ஒரு வருஷத்துக்கு முன்னாடி மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் 11 பஞ்சாப் போட்டி, வான்கடே மைதானத்துல நடந்துச்சு. டாஸ் வென்ற மும்பை முதலில் ஃபீல்டிங் தேர்வு செஞ்சுது . அன்னிக்கி பொல்லார்ட் கேப்டன்'ஸி பன்றாரு , ரோஹித் ஷர்மாவுக்கு காயம் காரணமா ஓய்வு பெற்றார். முதலில் பேட்டிங் செஞ்ச பஞ்சாப் அணி , 197/4 னு பெரிய ஸ்கோர் அடிக்கிறாங்க. ராகுல் சிறப்பான ஒரு சதம் அடிக்குறாரு. கிட்டத்தட்ட போன வருஷம் இதே அணி கூட இதே மைதானத்துல விட்ட சதத்தை  இந்த வருஷம் அடிக்குறாரு. அது காரணமா இவ்வளவு பெரிய ஸ்கோர் வருது. திரும்ப பேட்டிங் பண்ண வராங்க மும்பை அணி. சிறப்பா தொடங்கினாலும், நடுல நெறய விக்கெட்டுகளை விடறாங்க. 12 ஓவர் முடிவுல, ஸ்கோர் 94/4. பொல்லார்ட் உள்ள இருக்காரு. அவர் ஏற்கனவே நல்ல ஆட்டத்தை இது வரைக்கும் வெளி படுத்தல, ஆனா இன்னிக்கி அடிச்சே ஆகா வேண்டிய நிலை. அன்று அடித்தார். 31 பந்துகளில் 83 ரன்கள் அடிச்சாரு. 3 ஃபோர்கள் 10 சிக்ஸர்கள் அடிச்சாரு. போட்டி திரும்ப மும்பை கையுக்கு வந்துச்சு. ஆனா கடைசி ஓவர்ல அவுட் ஆகிட்டு போனாரு. ஆனா அவர் அடிச்சது நாலா தேவை 4 ரன்கள் 4 பந்துகள்'ல. அதுலயும் உள்ள இருந்தது பௌலர்கள்.  இங்க இருந்து யார் பக்கம் வேணும்னாலும் போட்டி போகலாம். ஆனா பௌலர்கள் எப்டியோ டென்ஷன் இல்லாம கடைசி பந்து'ல ஜெயிச்சு கொடுத்தாங்க. ஆட்ட நாயகன் - பொல்லார்ட் 




                                  

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?