ஏப்ரல் 16, 2016
மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டி. டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. முதலிலே பேட்டிங் செய்த மும்பை அணி, மலையிலிருந்து கீழே விழுவது போல், விக்கெட்டுகள் ஆரம்பத்திலிருந்தே சரிந்தது. பார்திவ் படேல் மட்டும் 34 ரன்கள் அடிக்க மற்றோர் பக்கம் விக்கெட்டுகளை இழந்தார்கள். 17 ஓவர்கள் முடிவில், 99/7 என பரிதாப நிலையில் இருந்தது. ஆனால் இறுதியில் க்ருனால் பாண்டிய மற்றும் டிம் சௌதீ சின்ன சின்ன கேமியோ ரன்களை சேர்க்க, 143/8 என்கிற ரன்களை எடுத்தார்கள். ஆனால் இச்சிறு ரங்கள், எவ்வளவு பெரிய உதவி மற்றும் எதிரணியின் மீது அழுத்தத்தினை போடும் என்பது அப்பொழுது அவர்களுக்கு புரியாது.அனைவரும் சிறப்பாக பந்து வீசினர்.
குஜராத் அணி பேட்டிங் செய்ய மைதானத்தினுள் வந்தார்கள். ஆரோன் ஃபின்ச் முதலில் இருந்தே பொறுமையாக விளையாடினார். நல்ல தொடக்கத்தை கொடுத்தார்கள். ஆனால், யார் வேணும்னாலும் போட்டியின் போக்கினை மாற்றுவார்கள், மும்பை அணியின் வீரர்கள் அதில் சிறப்பானவர்கள். அன்று திருப்புமுனையாக திகழ்ந்த வீரர், மிட்செல் மெக்கலேனகன். அவர் பந்து வீச்சில் குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள், இலவசமாக தங்கள் விசிக்கெட்டுகளை பறிகொடுத்து சென்றனர். நான்கு விக்கெட்டுகளை வெறும் 21 ரன்களை கொடுத்து தனது ஓவர் கணக்கை முடித்து, ஆட்டத்தினை மும்பையின் பக்கம் இழுத்தார். ஆனால் ஃபின்ச் மற்றும் தனியாக முதலில் இருந்துது போராடிக்கொண்டே இருந்தார். கடைசி ஓவரில் இருந்தது ஃபின்ச் மற்றும் குல்கர்னி. தேவை 11 ரன்கள். கையில் மீதி இருந்த விக்கெட்டுகள் - 3. குல்கர்னி மூன்றாவது பந்தில் ஃபோர் அடிக்க, கணக்கு குறைந்தது. பின் ஃபின்ச் ஸ்ட்ரைக்கில் வந்தார். ரன்கள் ஆங்காங்கே ஓடியதால், கடைசி பந்தில் 1 ரன் தேவை என்று இருந்தது. அனைவர் மனத்திலும் படபடப்பு. சூப்பர் ஓவர் வரை போட்டி முடிந்து விட்டுவிடுமோ, என்கிற ஆவல். ஆனால் நிதானமாக பௌண்டரி அடிக்க, குஜராத் லயன்ஸ் இவ்வாட்டத்தினை வென்றது. ஆட்ட நாயகன் - தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆரோன் ஃபின்ச் : 67(54)
Comments
Post a Comment