ஐபிஎல் வரலாற்றில் இன்று

7 ஆண்டுகளுக்கு முன், இன்று மலை நேர ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா ஈடன் கர்டன் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. போன முறை கோப்பையினை வென்ற கொல்கத்தா அணி இம்முறை வெற்றியினை பெறுவதற்கு தடுமாறிக்கொண்டு இருந்தது. கொல்கத்தா அணியின் ஒப்பனர்களான கம்பீர் மற்றும் யூசுஃப் பதன், மிகவும் நம்பிக்கையான தொடக்கத்தினை அணிக்கு வழங்கியது. மறுபடியும் குறிப்பிடுகிறேன் " நம்பிக்கையான ".
ஏன் குறிப்பிட்டுள்ளேன் என்பது உங்களுக்கு பின்னர் புரியும்.

முதல் ஆரு ஓவர்களில் 46/1 என்கிற ஸ்கோரினை எடுத்திருந்தது கொல்கத்தா அணி. ஆனால், அதற்கு பின் கொல்கத்தா அணி விக்கெட்டுகளை இழந்தது. மிகப்பெரிய தேய்வு ஏற்பட்டது. யூசுஃப் பதான் சரியான தொடர்பு இன்றி ஜாக்யூஸ் காலிஸ் அவர்களை ரன் அவுட் செய்தார். பின் மீண்டும் யூசுஃப் பதானிடம் சரியான தொடர்புயின்றி ரன் அவுட் ஏற்பட்டது, ஆனால் இம்முறை ரன் அவுட் செய்யப்பட்டது அவரே. காலிஸ் தன்மனதினுள் நினைத்திருப்பார் " வாழ்க்கை ஒரு வட்டமடா".
நையாண்டிகளை புறந்தள்ளிவிட்டு விடுவோம். குட்டையினுள் தேய்ந்து கிடக்கின்ற குப்பையினைப்போல் அன்று அவர்கள் நிலை இருந்ததது( ஒரு எடுத்துக்காட்டுக்காக மட்டுமே குறிப்பிடுகிறேன்)

இடையில் தேபபரத்த தாஸ் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். ஆனால் அவராலும் ஒன்னும் செய்ய இயலவில்லை. இறுதியில் சுனில் நரைன் 2 சிக்ஸர்கள் அடித்தார். கூட்டத்திற்கு மகிழ்ச்சியினை கொடுத்தாலும், கண் கட்டியதற்கு பிறகு சூரிய நமஸ்காரம் செய்து பயனில்லாதது போல் தான் இருந்தது. இறுதியில் 119/9 என்கிற மிக மிக குறைந்த ரன்களை எடுத்தது. ஜடேஜா 3/20 எனவும் அஷ்வின் 3/21 எனவும் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள். அணைத்து பந்துவீச்சாளர்களும் நன்றாக ரன்களை கட்டுப்படுத்தினர். இப்போது புரிந்திருக்கும், நான் ஏன் " நம்பிக்கையான தொடக்கம்" என்கிற வார்த்தையினை இருமுறை பயன்படுத்தினேன் என்று.  

சென்னை அணி பேட்டிங் செய்ய வந்தது. வழக்கத்திற்கு மாறாக முரளி விஜய் பதிலாக ரவிச்சந்திரன் அஷ்வின், மைகேல் ஹஸியுடன் இனைந்து ஓப்பனிங் செய்ய வந்தார். கொல்கத்தா அணியினை போல் இல்லாமல் மிகவும் பொறுமையான தொடக்கத்தினை கொடுத்தது சென்னை அணி. கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் மற்றும் ரன் காப்பாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களை போல் இவர்களும் விக்கெட்டுகளை இழந்தார்கள் ஆனால் அவர்களை விட இவர்களை சுருதி குறைவாக இழந்தனர். பிட்ச் மிகவும் பொறுமையாக செயல்பட்டது ஆனால் இரண்டாம் இன்னிங்சில் ஈரப்பதம் செயல்படும் என்பதை கொல்கத்தா அணி அறிந்துக்கொள்ளவில்லை. ஹஸி ஒரு புறம் மிகவும் பொறுமையாக ஆட்டத்தினை கடைசி வரை கொண்டு செல்ல எண்ணி விளையாடினார். மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்தது. ஆனால் அன்று ஜடேஜாவின் தினம் என்றே கூறலாம். ஜடேஜா உள்ளே வந்தவுடன் ரன்களும் மடமட வென்று வந்தது. சிக்ஸர்கள் மழையாக பொழிந்தது. பந்துவீச்சில் 3 விக்கெட்டுகள் மற்றும் ஒரு கேட்ச் எடுத்தவுடன், பேட்டிங்கில் வெறும் 14 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் நின்று, போட்டியினை வென்று கொடுத்தார். மிகவும் எளிதில் முடிய வேண்டிய போட்டி, இறுதி வரை சென்றது. அனல் பறக்கும் போட்டியாக அமைந்தது 

பொறுமையான திரில்லர் போட்டி ஆனால் அப்போதே குறிப்பிட்டேன் சென்னை அணி கொல்கத்தா அணியினை போல் இல்லை. இப்போது புரிந்திருக்கும். ஆட்ட நாயகன் விருதினை பெற்றது ரவீந்திர ஜடேஜா. வரலாற்றில் கொல்கத்தா அணிக்கும் ஜடேஜாவுக்கும் வாய்க்காதகறாரு தான். 2013ல் இப்போட்டியினை வென்று கொடுத்தது ஜடேஜா. 2018ம் ஆண்டில் சிக்ஸருடன் வென்று கொடுத்தார். 2019ம் ஆண்டில் முக்கிய 31 ரன்களை அடித்து, இறுதியில் போட்டியினை முடித்தார். அதில் மூன்று முறையுமே வென்றது ஜடேஜா !!!         

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood