ஒரு நாயகன் உதயமாகிறான்

15 வருடங்களுக்கு முன், இன்று  

நம்ம எல்லாருக்கும் தோனி கிரிக்கெட் வரலாற்றில்  அசுரன்'னு தெரியும். கேப்டன்'ஸி நாளும் சரி, விக்கெட் கீப்பிங் நாலும் சரி, இல்ல ஃபினிஷிங் நாலும் சரி, தனக்குனு ஒரு முத்திரையை கிரிக்கெட் உலகத்துல பதிச்சிருக்காரு. 

ஆனா 15 வருஷத்துக்கு முன்னாடி, தன்னோட 5வது ஒரு நாள் போட்டியில, அவர் பாகிஸ்தான் டீம எதிர்க்குறாரு. அதுவும் இந்த போட்டியில அவர் விளையாடுவாரா இல்லையானு மேட்ச் நடக்குற நாள் வரைக்கும் அவருக்கு தெரியாது. ஆனால், அப்பொழுது கேப்டன் கங்குலி, தோனி மேல நம்பிக்கை வெச்சு, இன்னொரு வாய்ப்பு குடுக்குறாரு. இந்த முறை தோனிய  கொஞ்சம் மேல விளையாட வெச்சு முயற்சி பன்றாரு. இந்த போட்டியிலும் சொதப்பிட்ட அவ்வளவு தான். 

முதல்'ல டெண்டுல்கர்  தன்னோட விக்கெட்டை இழந்தாரு. உள்ள வராரு 23 வயசு சிறுவன் தோனி. பாகிஸ்தான் டீம் மொத்தமும், வர்ற சின்ன பையனை செஞ்சு விட்டு அனுப்பிடலாம்'னு இருந்தாங்க. ஆனா இந்த சின்ன பையன் அன்னிக்கி விஷாக்கபட்டணத்துல ருத்ர தாண்டவம் ஆடுவாருனு யாருக்கும் தெரியாது. உள்ள வராரு தோனி. வந்த முதல் பந்து'ல அடிச்சு ஆடறாரு. பௌண்டரிகளும், சிக்ஸர்களுமா விளாசினாரு. பாகிஸ்தான் பௌலர்களுக்கு ஒண்ணுமே புரியல. ஷாஹித் அஃப்ரிடி மண்ட சூடாகி கேட்ட வார்த்தையில திட்ட ஆரம்பிச்சுட்டாரு. ஆனா அப்போ தோனி பொறுமையா கேட்டுட்டு அடுத்த பால் பௌண்டரி அடிப்பாரு. அப்போவே தோனிக்கு அந்த ஒரு பக்குவம் இருந்திருக்கு. சேவாக் கூட அவர் வேகத்துக்கு அதிரடியா ஆடி அவர் அவுட் ஆகிட்டு போனதுக்கு அப்ரோம் கங்குலி அவுட் ஆகுறாரு. அதுக்கு அப்பறோம் டிராவிட் கூட சேர்ந்து இவர் பார்ட்னெர்ஷிப் போட்டு ஆடறாரு. டிராவிட் அன்னிக்கி அவர் பங்குக்கு இவர் கூட சேர்ந்து வேகமா ஆட ஆரம்பிச்சுட்டாரு. இந்த போட்டிக்கு முன்னாடி ஒரு அரை சதம் போடாத தோனி, இந்த போட்டியில தன்னோட முதல் சதத்தோட கிரிக்கெட் உலகத்துக்கு தன்னை அறிமுக படுத்துறாரு. அதுக்கு முன்னாடி நாள் என்ன நடந்துச்சுனு தோணியோட பயோபிக் படத்தை பாத்த எல்லாருக்கும் தெரியும். அன்னிக்கி மொத்த ஊடகமும் ஸ்தம்பிச்சு போயி பார்க்குது. யாருடா இந்த சின்ன பையன் ? இத்தன நாள் எங்கய்யா இருந்தான் ? அப்படி இப்படினு நிறைய....  

148 ரன்கள் அடிச்சு கடைசியா அவுட் ஆகுறாரு. இந்தியாவோட விக்கெட் கீப்பர்கள் பட்டியல்ல இவரோட 148 பெரிய ஸ்கோரா அமையுது. இந்த ரெக்கார்ட இவரே இதே வருஷத்துல பிரேக் பன்றாரு. மொத்தம் 15 ஃபோர்கள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடிச்சு முத்திரையை பதிக்குறாரு. அன்னிக்கி இவர் அடிச்ச அடியின் காரணமா இந்தியா அணி 356 ரன்கள் அடிக்குது. திரும்ப பாகிஸ்தான் அந்த அடியிலருந்து  மீள முடியாம 298 ரங்களுக்கு ஆல் அவுட் ஆகுறாங்க. இந்த போட்டியோட ஆட்ட நாயகன் சந்தேகமே இல்லாத வகையில தோனி. இந்த அடி அவருக்கு பெரிய ஊக்கத்தை ஏற்படுத்திடுச்சு. 

இந்த அடியில் தோனியை தாண்டி கங்குலி அவரோட நம்பிக்கை ஜெயிச்சுடுச்சுனு சொல்லலாம். ஒரு பிளேயர எவ்ளோ நம்ம நம்பிக்கை வெச்சு அவருக்கு வாய்ப்பு குடுக்குறோமோ, அவ்ளோ பெருசா ரிசல்ட் கிடைக்கும். கங்குலி'க்கு தோணியோட முழு பலமும் தெரியும். இங்க நம்ம தான் மொத்தமா கூட்டம் கூட்டமா பிரிஞ்சிக்கிட்டு அடிச்சிக்கிட்டு இருக்கோம். ஆனா அவங்க டீம் குள்ள இன்னமும் அந்த ஒத்துமை இருக்கு. அவங்களுக்கு குள்ள ஒத்துமை இல்லாம, நம்பிக்கை வெக்காம இருந்திருந்தா நமக்கு நல்ல டீம் பிலேயர்ஸ் கெடச்சிருக்க மாட்டாங்க. கப் ஜெயிச்சிருக்க முடியாது. இன்னிக்கி உலக தரத்துல கிரிக்கெட்'னு வந்த இந்தியா டீம் பேர் முதல் இடத்துல இருக்குன்னு அதுக்கு இந்த ஒத்துமை, பிளேயர் மேல உள்ள நம்பிக்கை, நுட்பமான அறிவு, டீமுக்குள்ள பக்குவம் இதெல்லாம் தான்.                 

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood