அடுத்த ஐபிஎல் அணி
ஓர் முழு அலசல்
ஒவ்வொரு அணியின் வலராற்றினை நான் ஆராய்ந்து, ஓர் பதிவிட இதனை தொடர்கிறேன். இதில், முதல் அணியாக நான் டெல்லியிடமிருந்து ஆரம்பித்தேன். அடுத்த அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
2) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :
ஐபிஎலின் முதல் 5 வருடங்கள், டெக்கான் சார்ஜர்ஸ் என்கிற பெயரில், டெக்கான் கிரோனிக்கல் என்கிற செய்தித்தாள் நிறுவனத்தின் கீழ் விளையாடியது. அவ்வைந்து ஆண்டுகளில், 2009ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை இவ்வணி வென்றது. அதுவும் முதல் மூன்று ஆண்டுகள், ஆடம் கில்கிறிஸ்ட் என்கிற பிரபல ஆஸ்திரேலியா அணியின் விளையாட்டு வீரர், இவ்வணியினை நன்றாக வழிநடத்தி சென்றார். நான்காம் ஆண்டு, மிக பெரிய ஏலம் நடந்தது, அந்த ஏலத்தில் அவர்கள் அணியின் முக்கியமாமா வீரர்களான கில்கிறிஸ்ட், ரோஹித் ஷர்மா, ஸ்மித், லக்ஷ்மன், சுமன், R.P சிங்க் போன்ற தங்களின் நட்சத்திர வீரர்களை இழந்தனர். ஆதலால், அடுத்த இரண்டு ஆண்டுகள், மிகவும் சுமாரான விளையாட்டினை வெளிப்படுத்தினர். 2013ம் ஆண்டு, டெக்கான் கிரோனிக்க்ல் அணியின் உரிமையின் இழந்தது, கடன் காரணத்தினால். ஆதலால், அவ்வணியினை, சென்னையினை சேர்ந்த சன் டிவி நிறுவனம், வாங்கியது. அதனால், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆக மாறியது
மாற்றத்திற்கு பின், 2013ம் ஆண்டு, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. ஷிகர் தவான், டேரன் சாமி, கேமெரான் வைட், திசாரா பெரேரா, அமித் மிஸ்ரா, டேல் ஸ்டெயின், கரண் ஷர்மா போன்ற வீரர்களின் ஜொலிப்பான ஆட்டத்தினாலும், மற்றும் சொந்த ஊரில் நடந்த போட்டிகளில் வெற்றி சதவீதம் அதிகம் வைத்ததனாலும், அவர்களால் தகுதி பெற முடிந்தது.
அதற்கு அடுத்த ஆண்டு, ஓர் சுமாரான ஆட்டத்தினால், வெளியேறியது. 2015ம் டேவிட் வார்னர் தலைமையில், முந்தைய ஆண்டினை விட, நன்றாக விளையாடியது. ஆனால், தகுதி பெற இயலவில்லை.
இப்போது 2016ம் ஆண்டின் ஏலத்தில், இவர்கள் ஓர் புதிய யுக்தியை கையாண்டனர். அந்த யுக்தி, மற்ற அணிகள் வலது கை விளையாட்டு வீரர்களை பார்வையிட்டு வாங்கியபோது, இவர்கள் மாற்றாக இடது கை விளையாட்டு வீரர்களை பார்வையிட்டு வாங்கினர். அதற்கு எடுத்துக்காட்டு, யுவராஜ் சிங், பரிந்தர் ஸ்ரன், ஆஷிஷ் நெஹ்ரா, முஸ்தபிசுர் ரஹ்மான்...... இதோடு அவர்கள் ஏற்கனவே வைத்திருந்த இடது கை ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், ட்ரெண்ட் போல்ட், ஷிகர் தவான், இயான் மோர்கன், பீபுள் ஷர்மா போன்றவை சேர்ந்து விளையாடினர். அதன் விளைவு, அவ்வாண்டின் கோப்பையை கைப்பற்றியது ஹைதரபாத் அணி. இதே யுக்தியின் காரணத்தினால், 2017ம் ஆண்டு, அடுத்த சுற்று வரை தகுதி பெற முடிந்தது.
2018ம் ஆண்டின் ஏலத்தில், இம்முறை அவர்கள் பந்துவீச்சில் பார்வையினை வைத்து, அணியினை எடுத்தனர். அதன் காரணமாய், இவ்வாண்டில் இறுதி போட்டி வரை தகுதி பெற்று வந்தது.
2019ம் ஆண்டில், பல வீரர்களுள் குழப்பம், அதன் காரணமாய், அவர்களின் விளையாட்டு சரியாக அமையவில்லை. அவர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தாலும், அவர்களின் தரத்திற்கு அவர்கள் விளையாடவில்லை. இப்போது அவர்கள் மேலும், தனது அணியின் பலத்தை கூட்டுவதற்காக 2020ம் ஆண்டின் ஏலத்தில், சில இளம் வீரர்களை கண்டறிந்தனர்.
ஆகையால், இத்தனை ஆண்டில், அவ்வணியின் கணக்கு, முக்கியமான வெளிநாட்டு வீரர்கள், பந்துவீச்சில் பலம், சொந்த ஊரில் அவர்களை வெல்ல முடியாத ஓர் ஆட்டம், புதிய யுக்திகள், இளஞ்சிறுத்தைகள், எவ்வித இலக்கினை இவர்கள் வைத்தாலும், அதனை திரும்பவும் அடிக்க முடியாத ஓர் பந்துவீச்சு மற்றும் பீலடிங்கில் பாயும் புலிகளாக திகழ்வது, இந்த அணியின் சிறப்பம்சம். எந்த அணியாக இருந்தாலும், அஞ்சாதவாறு விளையாடுவர். அவர்கள் இறுதி வரை விட்டுக்கொடுக்காமல் போட்டியினை விளையாடுவர். ஆஸ்திரேலியா அணியின் குணம், இந்த அணியிடம் உள்ளது.
Comments
Post a Comment