ஐபிஎல் சாதனை - வரலாற்றில் இன்று

பொதுவாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி என்கிற பெயரை கேட்டால், ஈ சாலா கப் நமதே, இதயம் மற்றும் லிவர் திருடர்கள், என்கிற நக்கல் நையாண்டிகள் தான் நம் காதில் விழும். அதிலும், பரிதாப நிலை, வலைத்தளங்களில் ஒரு மீமில் பெங்களூரு அணியின் வழக்கமான ஆட்டத்தை கூறும் அளவிற்கு மோசமாக மாறியது. ஆனால், விமர்சனம் செய்வதற்கு முன், ஒரு முறை அவ்வணியின் சிறப்பான சம்பவங்களை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு, ஓர் சிறப்பான சம்பவத்தைப் பற்றி தான் இப்பதிவில் நாம் இனி பார்க்க போகின்றோம்.

2016ம் ஆண்டின் ஐபிஎல் தொடரை எடுத்து பார்த்தால், பெங்களூரு அணியினை நாக்கவுட் சுற்றினை அடைந்ததன் முக்கிய காரணம் விராட் கோலி மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ். அதில் குறிப்பாக கோலி, லீக் சுற்றில் நான்கு சதங்களை பதித்தார். தனது கரங்களில் 6 தையல் போட்ட பின், முதலினை விட மிகவும் உக்கிரமாக விளையாடினார். அதிலும் கடைசி நான்கு போட்டிகளில் அனைத்தையும் வென்றால் மட்டுமே நாக்கவுட் சுற்றினை அடைய முடியும் என்கிற நிலையில், நான்கையும் வென்றார்கள், (பின்குறிப்பு - விராட் கடைசி நான்கு போட்டிகளில் மட்டுமே இரண்டு சதங்களை அடித்துள்ளார்). அதில், முதல் போட்டி மற்றும் கடைசி இரண்டு சதங்களில் முதல் சதத்தை பதித்த போட்டி இது.

சரியாய் இன்று, குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதியது. குஜராத் அணியில் அன்று ரெய்னா, தனக்கு மகள் பிறந்ததால், அப்போட்டியில் இடம் பெற வில்லை. அதனால், பிரண்டன் மெக்கலம் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார். டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அன்று, பெங்களூரில் நடைபெறும் கடைசி மாலை நேரப்போட்டி என்பதால், மரம் வளர்க்கும் விழுப்புணர்வு ஏற்படுத்தும் எண்ணத்தில் பச்சை நிற உடையை அணிந்தார்கள்.

முதல் 6 ஓவர்களில் பெங்களூரு அணி சிறிது பொறுமையாக, தடுமாறிய நிலையில் தான் விளையாடினார்கள். அதிலும் கிறிஸ் கெயில், அன்று மிகவும் தடுமாறி, பந்துகள் சிலவற்றி உட்கொண்டு, 17 பந்துகளில் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கோலியும் சிறிது பொறுமையாக தொடங்கினார். அதன் 6காரணமாக  ஓவர்களில் முடிவில் 42/1 என்று ஸ்கோர் இருந்தது, அதில் முதல் நான்கு ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். ஆனால், டீ வில்லியர்ஸ் உள்ளே இறங்கிய தருணத்திலிருந்து அதிரடியாக விளையாடினார். பௌண்டரிகள் மிகவும் எளிதாக அடித்தார். மறுபுறத்தில் கோலி சிறிது பொறுமையாக ரன்களை சேர்த்து தவறான பந்துகளை மட்டும் பௌண்டரி அடித்தார். டீ வில்லியர்ஸ் அனைத்து திசைகளிலும் பந்துகளை சிதறடித்தார். சிறிதும் பாவம் பார்க்கவில்லை. 16வது ஓவர்களில் முடிவில் தனது சதத்தை பதிவிட்டார். 17வது ஓவரின் முடிவில், 173/1 என்று ஸ்கோர் இருந்தது. அப்போது டீ வில்லியர்ஸ் அடித்திருந்த ஸ்கோர் 112 ரன்கள், கோலி அடித்திருந்தது 52 ரன்கள் மட்டுமே. அனைவரும் டீ வில்லியர்ஸ் 150ஐ நிச்சயம் அடித்து விடுவார், என்று நினைக்கும் நேரத்தில், கோலி திருப்புமுனையாக தாக்க ஆரம்பித்தார். டீ வில்லியர்ஸ், முதல் இன்னிங்சின் பாதி வரை அடித்ததை, இவர் 3 ஓவர்களில் அடித்தார். முதல் 40 பந்துகளில் 51 ரன்களை அடித்திருந்த கோலி, அடுத்த 50 ரன்களை வெறும் 13 பந்துகளில் அடித்தார். பாவம், குஜராத் அணி, " டேய் அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான் டா" என்கிற வசனம் போல் இருந்தது. பிரண்டன் மெக்கல்லம், 19வது ஓவரை

ஷிவில் கௌஷிக்கிடம் பந்தை கொடுக்க, கோலி சிறுவனை சரியாக செய்தார். தரமான செய்கை. கோலியின் பேட்டிங்கை பற்றி நமக்கு தெரிந்தது, அவர் கணக்குடன் விளையாடுவார், சிக்ஸர்கல் சிறிது குறைவாகவே அடிப்பார் என்கிற செய்திகள் தான். அவ்வாறு உள்ள செய்திகளை உடைத்தெறிந்தார். 18வது ஓவரில் மட்டுமே 30 ரன்கள் அடிக்கப்பட்டது. அனைத்தையும் அடித்தது கோலி ஒருவரே. அதில் மட்டும் 1 பௌண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கியுள்ளவது. இறுதியில் 248/3 என்கிற எவரெஸ்ட் இலக்கை அடித்தது பெங்களூரு அணி. கோலி 109(54) ரங்களுக்கு ஆட்டமிழக்க, டீ வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 129(52) அடித்திருந்தார். 20 ஓவர் போட்டிகளில் 229 ரன்கள் பங்கீடு ( பார்ட்னெர்ஷிப் ), மிக அதிக ரன்கள் கொண்ட பார்ட்னெர்ஷிப் ஆகும் (ஐபிஎலில் மட்டும் இல்லை, அனைத்து வகை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் இது பெரிது). மற்றும் ஐபிஎல் தொடரில் முதல் முறையாகவும், 20 ஓவர் தளத்தில் இரண்டாவது முறையாகவும், ஓர் இன்னிங்சில் இரு பேட்ஸ்மேன்கள் சதங்களை பதித்தது ஆகும்.

அந்த தாக்குதலிலிருந்து குஜராத் அணியினால் மீள முடிய வில்லை. 104 ரங்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 142 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நல்ல வேலை, குஜராத் அணி தேவையான போட்டிகளை வென்றதால், நாக்கவுட் சுற்றுக்கு தகுதி பெற முடிந்தது. இல்லையெனில், நெட் ரன் ரேட் என்கிற பதிவு மிகவும் பாதித்து இருந்திருக்கும்.

ஆட்ட நாயகன் விருதினை வென்றது ஏ பி டீ வில்லியர்ஸ். ஆனால், எனக்கு தனிப்பட்ட முறையில் விராட் கோலி ஆடிய ஓர் கதகளி ஆட்டம், டீ வில்லியர்ஸ் விளையாடிய ஆட்டத்தை விட சிறப்பாக தெரிந்தது. சிக்ஸர்கள் வேகமாக அடித்ததை மட்டும் வைத்து நான் கூறவில்லை. தன்னால் எதுவும் முடியும் என்று உலகிற்கு காட்டியது, மற்றும் "காயப்பட்ட சிங்கத்தோட மூச்சுக்காத்து கர்ஜனைய விட பயங்கரமா இருக்கும்" என்கிற கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வசனம் இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அதன் ஆழத்தை நிரூபித்துள்ளார்.      

        

Comments

Popular posts from this blog

A Decade and Future

Happy Birthday Jonathan Trott

Coffee King and Debt