ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கருப்பு நாள்

பலர், இதை படிக்கும்போது ஏன் கருப்பு தினம் என்று குறிப்பிடுகின்கிறீர், வண்ணத்தை வைத்து பிரித்து பார்க்க முயல்கின்றாயா? என கொந்தளிப்பவர்களுக்கு, ஓர் விண்ணப்பம். நானும், கருப்பு வெள்ளை பாகுபாட்டினை கண்டுக்கொள்ளாது, சமமாக ஏற்றுக்கொள்பவன். ஆனால், உலகில் உள்ள அனைவரும் நிறைய இடங்களில் கருப்பை தவறாக பயன்படுத்துகின்றார்கள். அதனால், அனைவரிடமும் இப்பதிவு சேரவேண்டும் என்கிற எண்ணத்தில் நான் கருப்பு தினம் என்று குறிப்பிட்டுள்ளேன். நாம் இப்போது பதிவினை கவனிப்போம்.

சரியாக 7 வருடங்களுக்கு முன், இன்று டெல்லி காவல் துறை அதிகாரிகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த மூன்று வீரர்களை,  மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக தகவல் சேகரித்து கைது செய்தனர். அந்த மூன்று வீரர்கள், 2011ம் ஆண்டின் இந்தியாவின் உலககோப்பை அணியினை சேர்ந்த ஸ்ரீசாந்த், 2012ம் ஆண்டில், ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் கைப்பற்றிய அஜித் சண்டிலா மற்றும் அன்கிட் சாவன்.

நீரஜ் குமார், டெல்லி காவல்துறையின் கமிஷனர், இந்த விசாரணையை வழிநடத்தினார். அனைத்து துறைகளிலும் ஏற்றுக்கொள்ள முடியாத சில பக்கங்கள் உண்டு. கிரிக்கெட்டில், அவ்வாறு மறுபக்கங்களாக திகழும் சிலவற்றில் இதுவும் ஒன்று. நீரஜ் குமார், மும்பையில் இருந்து, கிரிக்கெட்டில் ஊழல் மற்றும் தவறு நடைபெறுவதாக சின்ன துப்பு கிடைத்தது. அவர் ஏப்ரல் மாதத்திலிருந்து தனது விசாரணையை தொடர்ந்தார்.

மே 5ல் புனே அணியினை எதிர்த்து நடந்த போட்டி, மே 9ல் பஞ்சாப் அணியிற்கு எதிராக நடைபெற்ற போட்டி மற்றும் மே 15ம் தேதியில் மும்பை அணியிற்கு எதிராக நடைபெற்ற போட்டிகளிலிருந்து உறுதி செய்தனர். கிடைத்த துப்பினை வைத்து இவ்வளவு தூரம் வந்தார்கள், ஆனால் ஆதாரம் ஏதும் இல்லை. அதை ஈட்டுவதற்கு, மே 5ல் அஜித் சண்டிலா வீசிய தனது 2வது ஓவரில் 14 ரன்களை வழங்க வேண்டும் என்று வெளியில் இருக்கும் புக்கீகள் அவரிடம் கூறி செய்வதற்கு பணம் கொடுப்பதாக கூறினர். க்கோரியவாறு அவர் 14 ரன்களை வழங்கினார், ஆனால் தான் அதை செய்வதற்கு முன் ஏதேனும் செய்கையை காட்டாமல் தவற, தனது வழங்கப்பட்ட ஆரம்பக்கட்ட தொகையை திரும்பி பெற்றுக்கொண்டார்.

மே 9ம் தேதியில், பஞ்சாப் அணியிற்கு எதிராக நடைபெற்ற போட்டியில், ஸ்ரீசாந்த் தான் வீசாவுள்ளதாக இருந்த 2வது ஓவரில் 14 ரன்களை வழங்க வேண்டும் என்பது பேரம். அவர், அந்த ஓவருக்கு முன், புக்கியிடம் செய்கை காட்டினார். எவ்வாறு என்றால், தனக்கு துண்டு வேண்டும் என்று வாங்கி அதை பாண்டில் சொருகினார். கைகளையும், கால்களையும் இழுத்தார். இவ்வாறு நேரத்தை கடக்க, சந்தேகம் அதிகரித்தது. அந்த ஓவரில் 13 ரன்களை வழங்கினார்.

பின்னர், 15ம் தேதியன்று, அன்கிட் சவாண் கூறியவாறு, தனது இரண்டாவது ஓவரில் 15 ரன்களை வழங்கினார். இதில், காரங்களை உறுதி செய்துக்கொண்டு, அடுத்த நாள், அதாகப்பட்டது இன்று, 7 வருடங்களுக்கு முன் இவர்கள் மூவரை டெல்லி காவல்துறை கைது செய்தது. மிகவும் சர்ச்சைக்குரிய, ஓர் சம்பவம் இது தான். ராஜஸ்தான் அணி, இவர்கள் கைதான செய்தியினை அடுத்து, இவர்களை விசாரணை முடியும் வரை அணியினை விட்டு விலக்கினார்கள். 

பின்னர், நடைபெற்ற விசாரணையில், அன்கிட் சாவான் ஒப்புக்கொண்டதாக செய்தி வெளிவந்தது. வரலாற்றில் இன்று எனும் பாகத்தில் மறுபக்கம் இதுவே. இச்செய்தி மக்கள் மனதில், தவறான எண்ணம் தோன்றியது. அதற்குபின், " சும்மா கிழி கிழி கிழி" என்று கிழித்தார்கள். கிரிக்கெட்டை இழிவு செய்யும் சம்பவம். வெளியில் செயல்படும் சில குற்றவாளிகள் செய்யும் செயல்களால், கிரிக்கெட் சிலர் பார்வையில் தவறாக பார்க்கப்படுகின்றது.   

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood