சிங்கப்பெண்களின் பிறந்தநாள்

கிரிக்கெட் துறையில், பல ஆண்டுகளாக பெண்களும் பங்கு பெறுகின்றார்கள். ஆனால், ஆண்களின் ஆட்டத்தை பாற்பர்தற்கு உள்ள மவுசு பெண்களின் ஆட்டத்திற்கு கிடையாது. இதற்கு, முக்கியம் காரணம், பலருடைய வீட்டில், பெண்களை வளர்க்கும் விதத்தில் உள்ள குறைபாடு. பெண்கள் வெளியே சென்று விளையாட கூடாது, வீட்டினுள் அடக்கமாக இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடு, கட்டாயங்கள் மற்றும் குப்பை நெகிழிகள். அதனை மீறி சில பெண்கள் சாதனை படைத்தார்கள். அவ்வாறு சாதனை படைத்த இரு பெண்டிர்களின் பிறந்த நாள் இன்று.

அஞ்சும் சோப்ரா - மே 20, 1977

டெல்லியை சேர்ந்த பெண்ணான அஞ்சும் சோப்ரா, தனது 9 வயது காலத்திலிருந்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருக்கின்றாள். தன்னுடைய முழு குடும்பமும் விளையாட்டு துறையினை சேர்ந்தவர்களே. தனது தந்தை ஓர் தடகள வீரர், மற்றும் வர்ணனையாளர். தான் பல விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார். நீச்சல், தடகளம் மற்றும் கூடைப்பந்து விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். 17 வயதில், 1994ம் ஆண்டில் இந்திய சர்வதேச அணியிற்காக விளையாட தொடங்கினார். முதலில் தன்னை ஓர் ஆல் ரவுண்டர் வீராங்கனையாக களமிறக்கப்பட்டு, பின்னர் தன்னை ஒரு பேட்ஸ்வுமேனாக மாற்றிக்கொண்டார். எவ்விடத்தில் இறக்கி அவளை விளையாட வைத்தாலும் அதில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவாள். 6 உலகக்கோப்பை தொடர்களில் பங்குபெற்றுள்ளார். மற்றும் 100 ஒரு நாள் போட்டிகளில் பங்குபெற்ற முதல் வீராங்கனை ஆவர். தான் தலைவி பொறுப்பினை ஏற்றுக்கொண்டு, இந்திய அணியினை 2003, 2005 மற்றும் 2009 உலகக்கோப்பை தொடர்களில் இந்தியா அணியினை வழிநடத்தினார். ஓர் சிறப்பான இடது காய் வீராங்கனை, ஓப்பனிங் இடத்திலிருந்து 10வது இடம் வரை அணைத்து இடங்களிலும் விளையாடி தனது சிறப்பை வெளிப்படுத்தியுள்ளார். 2012ம் ஆண்டில் தனது கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். இப்போது, கிரிக்கெட் மற்றும் கபடி தொடர்களில் வர்ணனையாளராக பணிபுரிகின்றார். 127 ஒரு நாள் போட்டிகளில் 2,856 ரன்களை அடித்துள்ளார். பல ஆண்டுகளாக கிரிக்கெட் உலகிற்கு தன்னை அர்ப்பணித்து கொண்டு, விளையாடியுள்ளார். ஆனால், நம் கண்ணில் காணப்படாத பல வீரர், வீராங்கனைகளுள் இவரும் ஒருவரே.

சாரா டெய்லர் - மே 20, 1989

இங்கிலாந்து நாட்டினை சேர்ந்த இவள், அவரை போன்று 16,17 வயதில் கிரிக்கெட் உலகிற்கு தனது கால்களை பதித்தார். மிகவும் அழகான வலது கை பேட்ஸ்வுமேனாக திகழும் இவர், விக்கெட் கீப்பிங்கிலும் சிறந்து விளங்குவர். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிற்காகவே அளவெடுத்து செதுக்கிய வாறு சில வீரர்கள் உளர், அவர்களுள் இவளும் ஒருத்தி. தன்னை பொறுத்த வரை சிறிது அதிரடியான ஆட்டத்தை விளையாடும் வீரர். மிகவும் நேர்த்தியாக, மாறுபடாமல், வரிசையாக சிறப்பு ஆட்டத்தை வெளிப்படுத்துபவர். அதிலும், நேராக இறங்கி வந்து சிக்ஸர் அடிப்பதில் வள்ளல். ஆனால், அவளிடம் இருந்த சில மன இன்னல்கள், அவளின் கிரிக்கெட் வாழகியிற்கு முற்றுப்புள்ளி வைத்தது. மிகவும், ஜாம்பவானாக திகழ வேண்டியவள், ஆனால் எவ்வித துறையாக இருந்தாலும் உடல் மற்றும் மனம் இரண்டும் சமநிலையில் இருந்தால் மட்டுமே சாதனையை பாதிக்க இயலும். அதில், ஏதேனும் ஒன்று தவறினால், நேருவது முடிவு தான். தற்சமயத்தில், ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல், சில மன இன்னல்கள் காரணமாக தனக்கு சிறு காலம் இடைவெளி வேண்டும் என்று தனது நாட்டின் கிரிக்கெட் கவுன்சிலுக்கு ஓர் மனு அனுப்பினார். அதை, உலகில் உள்ள பல வீரர்கள் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு, சாரா டெய்லரும் தனது நாட்டின் கௌன்சிலுக்கு செய்தியினை கூறி சிறிது காலம் இடைவெளி பெற்று திரும்பினாலும், மீண்டும் தனது மனக்கவலை நினையிற்கு திரும்பியதால் 2019ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார்

              

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood