வரலாற்றில் இன்று

2010ம் ஆண்டில், 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. இம்முறை மேற்கு இந்திய தீவுகளில் தொடர் நடைபெற்றது. இந்நாளில், குரூப் போட்டியில், இந்தியா தெற்கு ஆப்ரிக்கா அணியுடன் செயின்ட் லூஷியா மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற தென் ஆப்ஃரிக்கா அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியாவின் இன்னங்சில், இரண்டாவது பந்திலேயே முரளி விஜய் தனது விக்கெட்டை இழந்தார். உள்ளே இறங்கினார் 23 வயது சிறுவனான சுரேஷ் ரெய்னா. இந்தியா ரசிகர்களுக்கு அவர் என்ன செய்ய கைநேர்ந்தவர் என்று தெரியும், காரணம் ஐபிஎலில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம். ஆனால், உலகெங்கும் உள்ள மற்ற ரசிகர்களை பொறுத்த வரை, இவர் ஓர் கத்துக்குட்டி. இவரை கண்டிப்பாக விரட்டி விடுவார்கள், இந்தியா அணியிற்கு மேலும் ஓர் இன்னல் தான் கண்டிப்பாக நினைத்திருந்திருப்பார்கள். ஆனால், அன்று நடந்த கதை வேறு. களத்தினுள் இறங்கிய அடுத்த நிமிடத்திலேயே பௌண்டரிகளால் ரன்களை சேர்க்க துவங்கினார். பவர்பிளே ஓவர்களை சிறப்பாக பயன் படுத்தினார். ஆனால், மறுபுறத்தில் தினேஷ் கார்த்திக் தனது விக்கெட்டினை இழக்க, ஆறு ஓவர்களில் முடிவில் 36/2 என்று இருந்தது. 20 ஓவர் கிரிக்கெட்டின் ஜாம்பவானாக திகழும் யுவராஜ் சிங்குடன் இணைந்து ரன்களை சேர்க்க, யுவராஜ் நன்கு நின்றபிறகு இருவரும் அடித்து ஆடினார்கள். ஆனால், யுவராஜ் ஓரளவு தனது வேலையினை செய்துவிட்டு, 37 ரங்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால், ரைனாவின் ஆட்டம் அன்று ஓயவில்லை. தென் ஆஃப்ரிக்காவின் பந்து வீச்சாளர்களை உக்கிரமாக தாக்கினார். அதும், குறிப்பாக கடைசி 6 ஓவர்களில் அவர் ஆடிய ஆட்டம், பேயாட்டம் !. அதன் பலன், இந்திய வீரன் 20 ஓவர் கிரிக்கெட்டில் அடித்த முதல் சதத்தினை பதிவிட்டு உலகிற்கு தன்னை வெளிப்படுத்தினார். 9 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை அடித்து, 60 பந்துகளில் 101 ரன்களை அடித்தார். இறுதியில் தோனி பௌண்டரிகளுடன் முடிக்க, ஸ்கோர் 186/5 என 20 ஓவர் முடிவில் இருந்தது. நான் ரவுடி தான் திரைப்படத்தின் பாணியில் "யார்வேணும்னாலும் எதுல வேணும்னாலும் வில்லனாக இருக்கலாம், 20 ஓவர் கிரிக்கெட்'ல இப்போ இங்க நான் தான் வில்லன்"   

தென் ஆஃப்ரிக்கா அணி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள், ஆனால் பேட்டிங்கின் வேகத்தில் தேய்வு ஏற்பட்டது, காரணம் ஃபீல்டர்களின் இடம்  அமைப்பு  அவ்வாறு, அதன் காரணமாக 172/5 என்று முடித்தார்கள். ஆட்ட நாயகன் சந்தேகமின்றி சுரேஷ் ரெய்னா - 101(60). "வல்லவனுக்கு வல்லவன் வர தான செய்வான்"

இது ஓர் இயல்பான வெற்றியானாலும், இந்தியா அணியின் சார்பாக முதல் 20 ஓவர் கிரிக்கெட்டின் சதத்தினை பதிவிட்ட நாள் என்பதால், 10 வருட நினைவாக இதை பதிவிடுகின்றேன். " 

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood