சீரும் சயீத் அன்வர்

சரியாய் இன்று, 1997ம் ஆண்டு, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், பெப்சி விடுதலை கோப்பை தொடரில் விளையாடியது. இரு அணிகளும் 2 போட்டிகளில் ஆளுக்கு ஓர் போட்டியினை வென்றுள்ளது. இந்நிலையில், இப்போட்டியினை வெல்லும் அனியிற்கே இறுதி சுற்றினை அடைவதற்கான டிக்கெட் கிடைக்கும்.

டெண்டுல்கர் அணியினை வழிநடத்திய சிறிய காலத்தில் நடந்த ஓர் நான்கணியினை கொண்ட தொடர் இது. சென்னை பேட்டிங் பிட்சில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, எவ்வித வேறுபாடுமின்றி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே ஷாஹித் அஃப்ரிடி தனது விக்கெட்டை பறிகொடுத்து சென்றார். உள்ளிருந்தது சயீத் அன்வர் மற்றும் ரமீஸ் ராஜா. சயீத் அன்வர், பந்து வீச்சாளர்களை பௌண்டரிகள் வாயிலாக எதிர்கொண்டு விளையாடினார். ரன்களை அருமையாக சேர்க்க, ஸ்கோரின் வேகம் உயர்த்தப்பட்டது. மறுபுறத்தில், அணியின் தலைவன் ரமீஸ் ராஜா, மிகவும் பொறுமையாக விளையாடினார். கும்ப்ளே வீசிய ஓர் ஓவரில், டெண்டுல்கர் அவரை விளக்குவதற்காக ஸ்லிப் திசையில் ஓர் வீரரையும் மற்றும் லெக் கல்லி திசையில் ஓர் வீரரையும் நிறுத்தி வைத்தார். ஆனால், நினைத்து செய்த திட்டம் அனைத்தும் பாழடையும் வகையில் நேராக பௌண்டரிகளை சாத்தினார். தனது அரை சாதத்தினை வெறும் 44 பந்துகளில் எட்டினார். அப்போது ஸ்கோர் 13.4 ஓவர்களில் 75/1 என இருந்தது. வழக்கமாக அஃப்ரிடி விளையாடும் அதிரடி ஆட்டத்தை, இவர் இன்று நிறைவு செய்தார். டெண்டுல்கரும் அன்று, தனது யுக்தியில் பல தவறுகளை செய்தார். இடது கை வீரருக்கு, லெக் சுழற்சி பந்து வீச்சாளர் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளரை பந்து வீச வைத்தார். சயீத் அன்வர் மனதில் " கண்ணா லட்டு தின்ன ஆசையா?" என்கிற கேள்வி எழும்ப, " நான் ஓடுற பஸ்ஸுல இருந்து ஒரு ரூபாய் கீழ விழுந்தாலே உருண்டு போயி எடுப்பேன், ஆயிரம் ருபாய் கிடைச்சா சும்மா விடுவேனா ?" என்கிற வசனத்திற்கேற்ப கிடைத்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தினார். இடையில், அவருக்கு கால்களில் பிடிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக, ஷாஹித் அஃப்ரிடி அவருக்கு பை ரன்னராக உள்ளே இறங்கினார். கால்களுக்கு வேலையில்லை என்றால் என்ன நேர்ந்தது, அது தான் கைகள் உள்ளதே என்று அங்கிருந்து ஆட்டத்தின் வேகம் சிறிதும் குறைய விடாமல் ரன்களை குவித்தார். தனது 100 ரன்களை கடந்தார், அப்போது அணியின் ஸ்கோர் 26 ஓவர்களில் 133/2 என இருந்தது. 100 ரன்களை தொடும் வரை அங்கங்க சில லக்ஷ்மி வெடிகளை தான் வெடித்திருந்தார். ஆனால், தனது சதத்தை கடந்த பின், பௌண்டரிகளின் சரவெடி மட்டுமே. சிக்ஸர்களும், பௌண்டரிகளுமாக மட்டுமே ஆட்டத்தினை எதிர்கொண்டார். அபே குருவில்லா, ராபின் சிங், சுனில் ஜோஷி, அணில் கும்பளே, வெங்கடேஷ் பிரசாத் என ஒருவரையும் விடாமல் தாக்க, தனது 150ஐ கடந்தார். அவருடைய சீரான ஆட்டத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, அவர் விளையாடிய ஸ்குவையர் கட் ஷாட் மற்றும் நேராக அடித்த சிக்ஸர். இடது பேட்ஸ்மேனுக்கே உரிய ஷாட், ஆஃப் திசையில் விளையாடும் கட் மற்றும் டிரைவ் ஷாட்டுகள். அதனை இவரின் அன்றைய ஆட்டத்தில் தெளிவாக பார்த்தோம். 47வது ஓவரில், ஓர் பௌண்டரியின் வாயிலாக, ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனிப்பட்ட நபரின் அதிக ஸ்கோரினை எட்டினார். 190 ரன்கள் இவர் மட்டுமே அடிக்க, அணியின் அப்போது இருந்த ஸ்கோர் 293/3 என இருந்தது. இதற்கு முன், இருந்த அதிக ஸ்கோர், 1984ம் ஆண்டில் விவியன் ரிச்சர்ட்ஸ் அடித்த 189 ரன்கள். அதனை தாண்டினார். அதற்கு அடுத்த பந்து மீண்டும் ஓர் 4 ரன்களை அடிக்க, அவருடைய தனிப்பட்ட ஸ்கோர் 194 ரன்களாக உயர்த்தப்பட்டது. அன்று, அவரிடம் மீதம் இருந்தது 3 ஓவர்கள். நினைத்திருந்தால், முதல் இரட்டை சதத்தினை இவர் பதித்திருக்கலாம். ஆனால், அன்று அது நடக்கவில்லை. டெண்டுல்கர் வீசிய ஓவரின் அடுத்த பந்தில், பேக்வார்ட பாயிண்ட் திசையில் பௌண்டரி அடிக்க முயன்று, அங்கு நின்றிருந்த கங்குலியிடம் கேட்ச் கொடுத்து விட்டு சென்றார். கங்குலி பந்தினை கைப்பற்றியவுடன், மைதானத்திலும் படுத்துவிட்டார். மனதினுள் அவ்வளவு நிம்மதி கிடைத்தது.

ஆனால், வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ்சாக மாறியது. சென்னை ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டினார்கள். மீண்டும் கூறுகின்றேன், ஓர் பாகிஸ்தான் அணியின் வீரருக்காக சென்னையினை சேர்ந்த ரசிகர்கள் கைதட்ட, கிரிக்கெட்டில் விளையாட்டுத்திறன் இன்னும் உலகில் உயிருடன் தான் இருக்கின்றது என அன்று புரிந்தது. கிரிக்கெட்டில் இரு நாட்டவருக்கும் சரியான பகை பல ஆண்டுகளாக நடைபெறுகின்ற நிலையில், இவ்வாறு உள்ள சில மனிதநேய, பக்குவமுள்ள ரசிகர்கள் இருப்பதால் கிரிக்கெட் இன்றும் வாழ்கின்றது.

சயீத் அன்வர் 22 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசினார். அதனை முறியடிக்க 13 ஆண்டுகள் ஆயிற்று. 13 ஆண்டுகளுக்கு பிறகு டெண்டுல்கர், ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தினை பதித்தார். ஆனால், அன்று அவர் தனது விக்கெட்டை இழக்காமல் இருந்திருந்தால், டெண்டுல்கர் மட்டும் அல்ல, சேவாக் அடித்த இரட்டை சத ஸ்கோரினையும் சேர்த்து கடந்திருப்பார். ஆனால், தனது வாழ்வில், தான் பெருமைக்கொள்ளும் சம்பவம் இது. அதன் காரணமாக 327/5 என்கிற ஸ்கோரினை அடைந்தது பாக்கிஸ்தான் அணி.

இந்தியா அணி, அவ்வாட்டத்தில் மிகவும் பாதித்தது. பேட்டிங்கில், சிறப்பாக விளையாடினாலும், இறுதியில் விக்கெட்டுகள் பல சரிந்து, 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ராகுல் டிராவிட், இந்திய நியிற்காக சிறப்பாக சதம் அடித்தார். ஆனால், பேட்டிங்கில் பெரிது ஆழமில்லாதல் தோல்வியடைந்தது இந்திய அணி. ஆட்ட நாயகன், கேள்வியின்றி சயீத் அன்வர். பாகிஸ்தான் அணி அடித்த முழு ஸ்கோரில் 70 சதவீதம் ரன்களை இவர் மட்டுமே அடித்தார். 146 பந்துகள், அதாகப்பட்டது 24.2 ஓவர்களை அவர் ஒருவர் மட்டுமே விளையாடுயுள்ளார்.           

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood