ஐபிஎல் வரலாற்றில் இன்று

2016ம் ஆண்டில், சரியாக இன்று, கிங்ஸ் 11 பஞ்சாப் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜயண்ட்ஸ் அணிகள், விஷக்கப்பட்டணத்தில் மோதியது. இரு அணிகளுமே, பட்டியலில் கீழ் தளத்தில் இருந்த இரு அணிகள். இப்போட்டியினை ஜெயிப்பதற்கு ஓர் காரணம், கடைசி இடத்தினை பிடிக்க கூடாது என்கிற எண்ணம் மட்டுமே. மற்றும் சென்னை அணியின் இரு கால தடையில், அவ்வணியிற்கு மாற்றாக உள்ளே இறங்கிய புனே அணியை, வழி நடத்திய தோனியிற்கு ஓர் பெரிய கருப்பு புள்ளி. காரணம், இது வரை அவரின் தலைமையில், ஒரு முறை கூட தவறாமல் அடுத்த சுற்றினை அடைந்தது சென்னை அணி. முதல் முறையாக, அவர் வழிநடத்திய அணி பட்டியலில் கீழே இருந்தது. அதற்கு அவர் காரணம் அல்ல. அணியில் இருந்த சில குழப்பங்கள், மற்றும் முக்கியமான வீரர்களின் காயங்கள், அதற்கு  பட்ட வீரர்களின் ஆட்டம், இவையனைத்தும் தான். ஆதலால், தோனி தன்னுடைய மதிப்பை உணர்த்த வேண்டிய தருணம் இது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் 6 ஓவர்களில் விக்கெட்டின்றி 52 ரன்களை குவித்தது பஞ்சாப் அணி. ஆனால், 6வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர்களை இறக்கினார் தோனி. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சீராக விளையாடிக்கொண்டிருந்த ஹஷிம் அம்லாவின் விக்கெட்டை  கைப்பற்றினார்கள். மிட் விக்கெட் திசையில் நின்றுக்கொண்டிருந்த பைலே'வை ஷார்ட் மிட் விக்கெட் திசையிற்கு நகர்த்தினார். ரவிச்சந்திரன் அஷ்வின், அதற்கு ஏற்றவாறு, நடு ஸ்டம்ப் லைனில், குட் லெங்த் இடத்தில், பந்து வீச, ஆம்லா பைலேவிடம் கேட்ச் கொடுத்து விட்டு சென்றார். அடுத்த ஓவரில், சாம்பாவிடம் பந்தினை கொடுத்து, சாஹா பேட்டிங் விளையாடும் பொழுது, சரியாக ஸ்லிப் திசையில் ஓர் வீரரை நிறுத்தினார். நினைத்தவாறு, மீண்டும் ஓர் மீன் வலையில் மாட்டியது. இவ்விரண்டு விக்கெட்டுகள் வீஸ்த்தப்பட்டதால், பஞ்சாப் அணியின் ஆட்டத்தில் அடுத்த நான்கு ஓவர்களுக்கு வேகம் குறைந்து இருந்தது. ஆனால், 13வது ஓவரில், சிறிது கவனித்து முரளி விஜய் மற்றும் குர்கீரத் மண் சிங், சாம்பாவை குறிவைத்தார்கள். முரளி விஜய் தனது அரை சத்தினை எட்டினார்.15வது ஓவரின் முடிவில் ஸ்கோர் 120/2 என இருந்தது. இப்போது இவர்களை விட்டால், நிச்சயம் பெரிய ஸ்கோர் வருவதற்கான வாய்ப்பு உள்ளது, என கருதி மீண்டும் அஷ்வினிடம் பந்தினை வழங்க, அவர் முரளி விஜயின் விக்கெட்டை கைப்பற்றினார். மீண்டும் குட் லெங்த் திசையில், மறு புறத்தில் நின்று வீச, சுழற்சி ஏதுமின்றி நேராக வந்து விழுந்த பந்தினை தவற, ஸ்டம்ப்பில் அடித்தது. ஆனால், இவர்கள் கவனிக்கத்தவறியது குர்கீரத் மண் சிங். அவர், சிறிதும் நேரத்தை வீணடிக்காமல், பௌண்டரிகளை விலாச தொடங்கினார். இர்ஃபான் பதான் வீசிய 17வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடிக்க ஸ்கோர் உயர்ந்தது. 18வது ஓவரில், மீண்டும் துணிச்சலுடன் அஷ்வினிடம் பந்தை ஒப்படைத்தார் தோனி. முதல் இரண்டு பந்துகளில் 10 ரன்களை குவித்து தனது அரை சதத்தினை எட்டினார் குர்கீரத் மண் சிங். ஆனால், மூன்றாவது பந்து, சிறிது ஷார்ட் பந்தாக வீசினார். அவர், அதனையும் சிக்ஸர் அடிக்க முயன்று, தீப் ஸ்குவையர் லெக் திசையில் நின்றிருந்த தீபக் சஹாரிடம் கேட்ச் கொடுத்து பாவிலியனை நோக்கி நடையைக்கட்டினார். பின்னர், அதே ஓவரில், டேவிட் மில்லரின் விக்கெட்டையும் கைப்பற்றினார். இறுதியில், சில பௌண்டரிகளின் காரணமாக 172/6 என்கிற ஸ்கோரை அடித்தது பஞ்சாப் அணி.

புனே அணியிற்காக மிகவும் சிறப்பாக, அந்த ஒரு ஆண்டில் மட்டும் 6 அரை சதங்களை பதித்த அஜிங்க்யா ரஹானே  மற்றும் உஸ்மான் கவாஜா உள்ளே இறங்கினார்கள். இருவரும் சிறப்பாக தொடங்கினாலும், ரஹானே பவர்பிளே ஓவர்களில் இடையிலேயே தனது விக்கெர்ட்டை இழந்தார். பவர்பிளே முடிவில் 42/1 என்கிற ஸ்கோரில் இருந்தது. கவாஜா சிறிது தெளிவாக ரன்களை சேர்க்க, மறுபுறத்தில் பைலே தனது விக்கெட்டை இழந்தார். சிறிது நேரத்தில் சௌரப் திவாரியும் அவசரத்தினால், கேட்ச் கொடுத்து சென்றார். உள்ளே இறங்கினார் தோனி.  அப்போது இருந்த ஸ்கோர் 11.3 ஓவர்களில் 78/3. அதே ஓவரில் உஸ்மான் கவாஜா பொறுமையிழந்து கேட்ச் கொடுத்து விட்டு சென்றார். 14வது ஓவரில் இர்ஃபான் பதானும் தனது விக்கெட்டை இழந்தார். ரிஷி தவான், மெதுவாக நகுல் பந்தினை வீச, ஷார்ட் பந்தாக விழுந்தது. அதில், இர்ஃபான் பதான் புல் ஷாட் விளையாட முயன்று, ஷாட் விளையாடி முடித்த பின், பேட்டின் அடியில் பட்டு கீப்பரின் கைகளில் பந்து அழகாக விழுந்தது. அங்கிருந்து, நிச்சயம் புனே அணி தோல்வி அடைந்து விடும் என்று பார்வையாளர்கள் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் உள்ளே இருந்தது தோனி. அவருடன் இனைந்து விளையாட வந்தார் திசாரா பெரேரா. இருவரும், நேரத்தை கடக்காமல், பௌண்டரிகளை அடிக்க தொடங்கினார்கள். கடைசி இரண்டு ஓவர்களில் 29 ரன்கள் தேவை என்று கணக்கு வந்தது. இவ்விடத்தில் முரளி விஜய் செய்த ஓர் தவற்றினை நான் கூற விரும்புகின்றேன். கைல் அப்போட், அக்ஸர் படேல் மற்றும்  ஓவர்கள் இருந்தது.  மோஹித் ஷர்மாவிடம் வழங்க, அவர் பெரேரா'வின் விக்கெட்டையும்  ஆறு ரன்களை வழங்கினார். தேவை 23 ரன்கள், 6 பந்துகளில். உள்ளிருந்தது தோனி மற்றும் அஷ்வின். கடைசி சில ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளரிடம் பந்தினை ஒப்படைக்க மாட்டார்கள். பாதுகாப்பாக வேகப்பந்து வீச்சாளரிடமே பந்தினை ஒப்படைப்பர். அதிலும் தோனி போன்ற வரலாறு சிறப்புமிக்க பினிஷர்களுக்கு எதிராக நிச்சயம் பாதுகாப்பான செயலை மட்டுமே பயன்படுத்துவர். மற்றும், முரளி விஜய், தோணியுடன் ஒரே அணியில் இனைந்து விளையாடுயுள்ளார். ஆனால், ஏன் அவர் அக்சர் படேலிடம் பந்தினை வழங்கினார் என்று தெரியவில்லை. தோனி மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு ஃபோரினை அடித்து ஆட்டத்தை முடித்தார். குறிப்பாக கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தால் தான் வெற்றி என்று இருந்த நிலையில், மிகவும் தெளிவாக, தீப் ஸ்குவையர் லெக் திசையில் ஓர் சிக்ஸர் மற்றும் கடைசி பந்தில் லாங் ஆஃப் திசையில் தனது கையெழுத்து ஷாட்'டாக விளையாடும் ஹெலிகாப்டர் ஷாட்டுடன் முடித்தார்.

" நீ படிச்ச ஸ்கூல்'ல நான் ஹெட்மாஸ்டர் டா" என்று தோனி, தனது சிக்ஸர்களால் முரளி விஜயிடம் உரைத்தார். 


ஆட்ட நாயகன் விருதினை பெற்றது தோனி - தனது 64* (32) காக.                        

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood