தலைசிறந்த போட்டி - ஐபிஎல் வரலாற்றில் இன்று

ஐபிஎலில் சிறந்த அணிகள் என்று நாம் வரையறை கொடுத்தால், அதில் கண்டிப்பாக சென்னை மற்றும் மும்பை அணிகளின் பெயர் தலையான  இடத்தை பெற்றிருக்கும். எப்போதும்  அணிகளுக்கு வாய் தகராறு தான். சரி, இவ்விரு அணிகள் அமைதியாக இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் தகராறு எப்போதும் இணையதளங்களில் இருக்கும். மிகவும் சிறப்புமிக்க அணிகள் ஆகும். இவ்விரு அணிகள் விளையாடினால், அப்போட்டி மிகவும் சிறப்பாகவே அமையும். இவ்விரு சிறப்பான அணிகளான மும்பை மற்றும் சென்னை ஓர் கடைசி பந்து திரில்லர் போட்டியில் பங்குபெற்றால்......... !


சரியாக 8 ஆண்டுகளுக்கு முன், சென்னை மற்றும் மும்பை அணிகள், வான்கடே மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி ஓப்பனரான முரளி விஜய் சிறப்பாக தொடங்கினார். ஆனால், மறுபுறத்தில் இருந்த டூ ப்ளஸிஸ் சொற்ப ரங்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் விக்கெட்டை இழந்த சிறிது நேரத்திலேயே முரளி விஜயும் 41 ரங்களுக்கு ஆட்டமிழக்க, 6.4 ஓவர்களில் 52/2 என்று இருந்தது. அங்கிருந்து ரெய்னா மற்றும் பிராவோ அழகாக ரன்களை சேர்த்தார்கள். ரன் ரேட்டை குறைய விடாமல், பந்து வீச்சாளர்களை சரிபார்த்து தாக்கினார்கள். ரெய்னா 36 எங்களுக்கு ஆட்டமிழக்க, தோனி உள்ளிறங்க, ருண்களின் வேகம் கூடியது. ஆனால், பிராவோ 40 ரன்களுக்கு ஆட்டமிழந்த சிறிய நேரத்தில், தோனியும் லாங் ஆண் திசையில், பௌண்டரியையொட்டி நின்றிருந்த ரோஹித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து, 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மும்பை அணி இறுதியில் மிகவும் சிறப்பாக பந்துவீசினர். ஃபீல்டிங்கிலும் சிறப்பாக ரன்களை கட்டுப்படுத்தினர். அதன் காரணமாக கடைசி மூன்று ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அதன் காரணமாக 173/8 என்று நினைத்ததை விட 15 ரன்கள் குறைந்த ஸ்கோரை அடித்தது சென்னை அணி. மும்பை அணியின் சார்பாக ஆர்.பி.சிங் மற்றும் மலிங்கா ஆளுக்கு தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

மும்பை அணி பேட்டிங் செய்ய இறங்கினார்கள்.முதல் ஓவரில் மெய்டன் ஆனது. மூன்றாவது ஓவரில், ஃபிராங்கிளின் தடுமாறி தனது விக்கெட்டை இழக்க 14/1 என 3 ஓவர்களின் முடிவில் இருந்தது. அங்கிருந்து டெண்டுல்கர் பந்துகளை மிகவும் அழகாக பௌண்டரிகளுக்கு செலுத்தினார். டெண்டுல்கர் பல ஆண்டுகளாக ஏன் தனது பேட்டிங்கிற்காக பெயர் பெற்றிருக்கார் என்பது இவ்வொரு போட்டியில் தனது ஆட்டத்தில் தெரியும். கவர் திசையில், உள் வட்டத்தில் நான்கு ஃபில்டர்களை வைத்தும், அவர்களை மீறி 4 ரன்களை அடிக்கின்றார். அதிக சிக்ஸர்கள் அடிக்கணும் என்கிற மனநிலையினை மாற்றி 20 ஓவர் போட்டியில் 4 ரன்கள் மூலமாகவும் ரன்களை சேர்க்கலாம் என பாடம் எடுக்கின்றார். லேட் கட், ஸ்குவையர் கட், புள் ஷாட் போன்று அணைத்து வகையான ஷாட்களை அடித்தார். மறு புறத்தில் ரோஹித் ஷர்மா, பவர்பிளே முடிந்ததற்கு பின் நிதானமாக டெண்டுல்கரிடம் ஸ்ட்ரைக் கொடுக்க, அவர் தனிப்பட்ட முறையில் பௌண்டரிகள் மூலமாக ரன்களை குவித்தார். இருவரும் மிகவும் அழகாக போட்டியினை சென்னை அணியின் கையிலிருந்து பிடுங்க, சென்னை அணியிற்கு விக்கெட் மிகவும் அவசியமாக இருந்தது.

ஆட்டம் சூடுபிடிக்காமல் இருந்த அது எப்படி சென்னை மும்பை போட்டியாக இருக்க முடியும் ?? திருப்பம் ஏற்பட்டது அஷ்வின் ரூபத்தில். 15.5 ஓவரில், 134/1 என்கிற நிலையில் டெண்டுல்கரின் விக்கெட்டினை வீழ்த்தினார் ரவிச்சந்திரன் அஷ்வின். அங்கு தோனியின் மூளை எவ்வளவு கூரானது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அஷ்வின் ஸ்டம்பை விட்டு சற்று வெளியிலே பந்துவீச, டெண்டுல்கர் அதை அடிக்க, சில்லி மிட் ஆண் திசையில் நின்றிருந்த டூ ப்ளஸிஸ், அற்புதமாக டைவ் அடித்து அப்பந்தினை கைப்பற்றினார். 74 ரங்களுக்கு தான் செய்ய வேண்டிய செயலை செய்து முடித்து சென்றார். ஆனால் அங்கிருந்து, பாதாளத்தினுள் விழத்தொடங்கியது மும்பை அணி. கிடைத்த ஒரு வாய்ப்பிலிருந்து, பல வாய்ப்புகளை உருவாக்கி, பொறியினை வைத்து சொல்லி சொல்லி விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். மும்பை அணியின் முதுகு எலும்பை எளிதாக உடைத்தார்கள். " இல்லாத ஒரு வாய்ப்ப உருவாக்கவும் தெரியும், அந்த வாய்ப்பு நழுவி போச்சுன்னா இழுத்து தக்க வெச்சுக்கவும் தெரியும் " என்கிற வசனம் சென்னை அணியிற்கு அப்போதைய சூழ்நிலையில் நன்கு பொருந்தியது.    

ஆனால் டுவெயின் ஸ்மித், அச்சுறுத்த தொடங்கினார். 19வது ஓர் சிக்ஸர் அடிக்க, போட்டியில் நாங்கள் இருக்கோம், என்று விழுந்த பின் உயர்வு வரும் ஓர் முயற்சி. 19 ஓவர்களில் முடிவில் 158/7 என்று இருந்தது. தேவை 16 ரன்கள் வெற்றிபெற. உள்ளிருந்து டுவெயின் ஸ்மித் மற்றும் லசித் மலிங்கா. பந்து வீசியது முதல் ஓவரில் மெய்டன் வீசிய ஹில்ஃபென்ஹாஸ். முதல் பந்து, ஒரு ரன் எடுத்தார் டுவெயின் ஸ்மித். இரண்டாவது பந்து, லசித் மைங்க ஸ்ட்ரைக்கில், விக்கெட் ! நாடு ஸ்டம்பில் பந்து வேகமாக அடித்தது. 15 ரன்கள் 4 பந்துகளில், ஆர்.பி.சிங் எப்படியோ 1 ரன் அடித்து டுவெயின் ஸ்மித்திடம் ஸ்ட்ரைக்கினை கொடுத்தார். தேவை 14 ரன்கள், 3 பந்துகளில். பௌண்டரிகள் மிகவும் அவசியம் !. இவ்விடத்தில் சென்னை அணி மிகவும் வலுவுடன் இருந்தது. ஆனால், கிரிக்கெட்டை பொறுத்த வரை ஆட்டத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நான்காவது பந்து வீச வந்தார் ஹில்ஃபென்ஹாஸ், சிக்ஸர் !!. போட்டி இன்னும் முடியவில்லை. மீதமுள்ள 2 பந்துகளில் 8 ரன்கள் தேவை. அடுத்த பந்து, பந்துவீச்சாளரின் தலையின் மேல் 4 !! கடைசி பந்தில் நான்கு தேவை. ஸ்ட்ரைக்கில் இருந்தது டுவெயின் ஸ்மித், பந்து வீசுகின்றார் ஹில்ஃபென்ஹாஸ் 4 !!! மும்பை போட்டியினை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

சென்னை அணி போராடியும் தோல்வியடைந்தனர், ஆனால் அப்போராட்டம் மிகவும் வலிமையானது. மும்பை அணி சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஃபீல்டிங்கை கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார்கள், அதே நேரத்தில் டுவெயின் ஸ்மித்தின் அதிரடி ஆட்டத்தினை சென்னை மறந்திருக்காது !! ஆட்ட நாயகன் விருதை வென்றது டுவென் ஸ்மித் - தனது 24*(9) காக.

"உலகெனும் பரமபதம், விழுந்த பின் உயர்வு வரும்" என்கிற வரி மும்பை அணியின் ஆட்டத்தின் வாயிலாக நாம் அதன் பொருளினை அறியலாம்.

சென்னை அணியிலிருந்து, " எவ்வித சூழலாக  இருந்தாலும் தன்னம்பிக்கையினை தளர விடாமல் போராடினால், கண்டிப்பாக பலன் அடையலாம்  " என்கிற செய்தியை அறியலாம்.                
         

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood