இந்தியா 1/1 - தென் ஆஃப்ரிக்கா 0/3

சரியாய் இன்று, ஓராண்டுக்கு முன், இந்தியா அணியும் தென் ஆப்ரிக்கா அணியும் சௌதாம்ப்டன் மைதானத்தில் மோதியது. இந்திய அணியிற்கு இதுவே முதல் போட்டி. மறுபுறம், தென் ஆஃப்ரிக்கா அணியிற்கு மூன்றாவது போட்டி. ஆனால், அவர்கள் ஒரு வெற்றியுமில்லாமல் இருந்தார்கள். ஆதலால், வெற்றிக்கு ஏங்கிக்கொண்டிருந்தது தென் ஆஃப்ரிக்கா அணி.

டாஸ் வென்ற தென் ஆஃப்ரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தேர்வு செய்தவாறு மிகவும் வலுவாக பேட்டிங் செய்வார்கள் என எதிர்பார்த்தால் அது தான் தவறு. இந்திய அணியின் வேகா பந்துவீச்சாளர்கள் மிகவும் நெருக்கடியான லைன் மற்றும் லெங்த்தில் பந்தினை செலுத்தினார்கள். பும்ராவின் கைகளில் இருந்த பந்து, எமனின் கைகளில் உள்ள பாசக்கயிறு போன்று எதிராணியிற்கு மிகவும் கொடியனவாய் இருந்தது. இரு ஒப்பனர்களும், என்ன செய்ய வேண்டும் என்று ஏதும் புரியாமல், தவறான ஷாட் அடித்து தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தென் ஆஃப்ரிக்கா அணியிற்கு பல ஆண்டுகளாக உள்ள பிரச்சனை, மன அழுத்தத்தை கையாளுவதில் தடுமாற்றம் தான். போட்டியில் அழுத்தமில்லையெனில், அப்போட்டியின் ராஜாவாக இருப்பார்கள். அதிலேயே போட்டியில் அழுத்தம் இருந்தால், சரிவு ஏற்படும். அன்றும் அது தான் நடந்தது. இரு ஓப்பனர்கள் தங்களின் விக்கெட்டுகளை இழந்தவுடன், அடுத்ததாக களமிறங்கிய டூ ப்ளஸிஸ் மற்றும் வண்டெர் டஸ்ஸன், இருவருமே நன்கு தொடங்கியும், அதனை பெரிய ஸ்கோராக மாற்றாமல் விக்கெட்டுகளை இழந்துக்கொண்டு சென்றனர். ஓர் கட்டத்தில், தலைவலி ஏற்பட்டது. எவ்வித சண்டையும் இன்றி கைகள் தூக்கி நின்றது போல் இருந்தது. இடையில் மில்லர் சிறிது நன்கு விளையாடுமாறு தெரிந்தது. ஆனால், அவரையும் வலையை விரித்து இழுத்தது இந்திய அணி. பாதாளத்தை நோக்கி சென்றிருந்த நேரத்தில், கீழ் தளத்தில் விளையாடும் ஃபெழுக்வாயோ மற்றும் கிறிஸ் மோரிஸ், சிறிது வேகமாக கேமியோ இன்னிங்ஸ் விளையாட, 227/9 என 50 ஓவர்களின் முடிவில் தென் ஆஃப்ரிக்கா அணி அடித்தது. இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஃபீல்டர்கள், மிகவும் தீயாக இருந்தார்கள். இப்போது தென் ஆஃப்ரிக்கா அணியிற்கு தான் சவால். இந்திய அணியிற்கு தலைவலி ஏதும் இன்றி நிதானமாக இருந்தது.

ஆனால், இந்திய அணி மீண்டும் பேட்டிங் செய்த போது தான் தென் ஆஃப்ரிக்கா அணி ஏன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது என புரிந்தது. மிகவும் மெதுவாக வருகின்ற விக்கெட் அது. பொறுமையாக விளையாடினாள் மட்டுமே போட்டியினை ஜெயிக்க இயலும். ரோஹித் ஷர்மா அதனை புரிந்து கொண்டு மிகவும் பொறுமையாகவும், தவறான பந்துகளை பௌண்டரியினை நோக்கி அடித்தும் நன்றாக விளையாடினார். ஆனால், மறுபுறத்தில் தவான் மற்றும் கோலி வெகு விரைவாக தங்களின் விக்கெட்டுகளை இழந்தார்கள். ராகுல், சிறிது நேரம் நன்கு துணைபுரிந்து விளையாடினார். ஆனால், அவரும் தனது விக்கெட்டை பறிகொடுக்க ஸ்கோர் 134/3 என இருந்தது. மேலோட்டமாக நாம் பார்த்தால், தலைவலி இல்லை என தோன்றும். ஆனால், இதற்கு மேல் பெரிதாக நம்பிக்கை அளிப்போர் எவரும் இல்லை மற்றும் இங்கிருந்து எவ்வாறு வேண்டுமானாலும் போட்டி திரும்பலாம் என்கிற நிலை இருந்தது. உள்ளே இறங்கினார் தோனி. ரோஹித் மற்றும் தோனி, இருவரும் பொறுமையாக ரன்களை சேர்த்தார்கள். தோனி, களமிறங்கியவுடன் அவர் மனதில் இருந்த ஒரே குறிக்கோள், முடிந்தவரை பொறுமையாக விளையாடி ரோஹித் ஷர்மாவிடம் பேட்டிங் கொடுக்க வேண்டும் என்று தான். அதனை மிகவும் சரியாக செய்தார். மறுபுறம் ரோஹித் ஷர்மா, இத்தொடரில் அடித்த மிகவும் சிறப்பான சாதம் என்று பட்டியலிட்டால் அதில், நிச்சயம் இச்சதம் முதல் இடத்தை பிடிக்கும். 122 ரன்கள் 144 பந்துகளில் அடித்தார். ஆனால், அதில், தனது முழு அனுபவத்தையும் பயன்படுத்தினார். தோனி நன்றாக விளையாடி, இதற்கு மேல் கவலையில்லை என்கிற நிலையில், தனது விக்கெட்டை 34 ரன்களுக்கு இழந்தார். இறுதியில், ஹர்திக் பாண்டியா அழகாய் பௌண்டரியை அடித்து போட்டியை வென்று கொடுத்தார். ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் நின்றார்.

ஆட்ட நாயகன் விருதினை பெற்றது - ரோஹித் ஷர்மா. இந்திய அணியின் வலுவான இரும்பு தூண்.

    

  

Comments

Popular posts from this blog

Happy Birthday Jonathan Trott

கிரிக்கெட்டில் EA கேம் - ஐபிஎல் வரலாற்றில் இன்று

Happy Birthday Paul Collingwood