பங்களா புலிகளின் வேட்டை - 2019 உலகக்கோப்பை நினைவுகள்

இன்று, சரியாக ஒரு வருடத்திற்கு முன், பங்களாதேஷ் அணி தென் ஆப்ஃரிக்கா அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியின் வெற்றியை திருடியது. திருடினார்கள் என்று நான் கூறியதன் காரணம், அவர்களின் ராஜதந்திரத்தை பாராட்டி. சில போட்டிகளில் நன்கு விளையாடினாள் மட்டும் பத்தாது, எந்த ஓர் அணி, மற்ற அணியினை காட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுகின்றாரோ, அவ்வணியே வெற்றிபெற முடியும். இப்போது போட்டியில் என்ன நேர்ந்தது என பார்ப்போம்.

பங்களாதேஷ் அணி, தங்களின் முதல் போட்டியை எதிர்கொள்கின்ற நிலை. மறுபுறம், தென் ஆஃப்ரிக்கா அணி, இங்கிலாந்து அணியிற்கு எதிரே விளையாடிய முதற் போட்டியில் மண்ணை கவ்வியது. இப்போது, இவருக்கு முதற் வெற்றி கிடைக்கும் என்பது தான் நாம் பார்க்க வேண்டும். டாஸ் வென்ற தென் ஆஃப்ரிக்கா அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
பேட்டிங் விக்கெட்டில் பந்துவீச்சு தேர்வு செய்தது நல்லது என்றாலும், போட்டியினை வெல்லுதற்கு தேவையான செயல்களை சிறப்பாக செய்தல் வேண்டும். பங்களாதேஷ் அணியின் ஒப்பார்கள் மிகவும் அதிரடியாக ஆட்டத்தை துவக்கி வைத்தார்கள். அதில் முக்கியமாக சௌம்யா சர்க்கார், பந்து வீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். இங்கு அவர் விரைவாக ரன்களை குவித்தாலும், தென் ஆஃப்ரிக்கா அணியின் ஃபீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. அது மட்டுமின்றி, விக்கெட்டில் வேகம் எடுக்காத நிலையில்,  அதில் அரைக்குழி பந்துகள் பலவற்றினை வீசினார்கள். ஆனால், அது எடு பட வில்லை. வேகமின்றி வீசப்பட்டதால், மட்டையிற்கு வசதியாய் பந்து வர, அழகாய் கட் ஷாட்டுகள் பங்களாதேஷ் அணியின் வீரர்கள் விளையாடினார்கள். நல்ல தொடக்கத்திற்கு பிறகு, இரு ஒப்பனர்களுமே தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தார்கள். விக்கெட்டுகள் பறிபோனால், மீண்டும் அணியின் வாகனத்தை சரி செய்வதற்கு, நல்ல பேட்டிங் உள்ள அணி, சிறிது நேரம் எடுத்து தவறான பந்துகளை மட்டுமே பௌண்டரிகளுக்கு அடித்து பார்ட்னெர்ஷிப் சேர்ப்பார்கள். அதனையம் பங்களாதேஷ் அணி செய்தது, ஷாகிப் மற்றும் முஷ்பிகுர் ரூபத்தில். இருவரும் இனைந்து 142 ரன்கள் கூட்டாக சேர்க்க, பங்களாதேஷ் அணியின் பக்கம் முன்னதை விட வளைவாக போட்டி சாய்ந்தது. அப்பொழுதே இவர்கள் 300 ரன்களை எட்டிவிடுவார்கள் என எண்ணினார்கள். இருவரும் 70 ரன்கள் அருகில் அடித்து ஆட்டமிழந்தனர். கட்டிடத்திற்கு நன்கு வலுவான  அடித்தளம், மற்றும் கட்டிடத்தை காட்டினால் மட்டும் போதாது, அதற்கு வண்ணங்கள் அடித்து, அழகாய் வடிவமைத்தலில் தான் கட்டிடத்தின் நிறைவு பெறுகிறது. அவ்வாறு தேவையாக கருதப்பட்ட்ட நிறைவு பணியை செய்தார்கள் மொஸாடெக் மற்றும் மஹ்முதுல்லா. இறுதியிலும் அதிரடியாக முடிக்க, 330 ரன்களை அடித்தது பங்களாதேஷ் அணி. நான் கூறியவாறு, தென் ஆஃப்ரிக்கா அணி, பந்துவீச்சில் மிகவும் குழப்பத்துடன் இருந்தார்கள், மற்றும் ஃபீல்டிங்கில் செய்த தவறுகள் எதிராணியிற்கு 30 ரன்கள் கூடுதலாக பரிசளித்தது.

இப்போது பந்துவீச்சில் மற்றும் ஃபீல்டிங்கில் செய்த தவற்றினை பேட்டிங்கில் சரி செய்ய வேண்டிய கட்டாயம். மறுபுறத்தில், பிட்சில் மிகவும் குறைந்த வேகத்தில் பந்து நகர்வதை உணர்ந்த மொர்தசா தெளிவாக சுழற்பந்து வீச்சாளர்களை கையாண்டார். நான், அங்கு கூற தவறிய செய்தி, இம்ரான் தாஹிர் 57 ரன்கள் வழங்கி இருந்தாலும், தேவையான தருணத்தில் விக்கெட்டுகளை தனது அணியிற்கு வழங்கினார். இங்கு இவர்கள் தெளிவாய், அதிலும் கோடை காலத்தில் கிரிக்கெட் நடைபெறுவதால், வெயில் மற்றும் வேகமின்றி இருக்கும் பிட்ச் நன்கு பயன்பட்டது. பந்துவீச்சில் மட்டும் அல்ல, ஃபீல்டிங்கிலும் சிறப்பாக தெரிந்தார்கள். தேவையற்ற ரன்களை கட்டுப்படுத்தினர். டூ ப்ளஸிஸ் சிறப்பாக அரை சதத்தை பதிவிட்டார், ஆனால் அதனை பெரிய ஸ்கோராக மாற்றமுடியாமல், ஃபீல்டிங்கின் நெருக்கடியினால் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அது மட்டுமின்றி, தேவையான சமயங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தினர் பங்களாதேஷ் அணி. குறிப்பாக, பங்களாதேஷ் அணியில் இடையில் அடித்த சீரான பார்ட்னெர்ஷிப் ரன்கள் இங்கு இல்லை. 3ம் விக்கெட் கூற்றாக அடிக்கப்பட்ட 142 ரன்கள், இங்கு எந்த இரு வீரரும் சேர்ந்து அடிக்கவில்லை. 30ல் இருந்து 40ரன்கள் அடிக்கும் நிலையில், பார்ட்னெர்ஷிப் உடைக்கப்பட்டது. ஆனால், ரன்கள் வந்தாலும், இறுதியில் விரைவாக பௌண்டரிகளை குவித்து ஆட்டத்தை முடிப்பதற்கு ஓர் வீரர் இருந்திருந்தால் போட்டியை வென்றிருக்க முடியும். ஆனால், பங்களாதேஷ் அணியிற்கு விளையாடிய வாறு இங்கு எவரும் விளையாடவில்லை. அதன் காரணமாக 309 ரன்கள் மட்டுமே தென் ஆஃப்ரிக்கா அணியினால் இறுதியில் அடிக்க முடிந்தது. பங்களாதேஷ் அணியிலும் வேகா பந்துத்வ ஈச்சளர்கள் சிறப்பாக, வேகத்தை குறைத்து கட்டர் பந்துகள் நன்கு வீச, திணறியது தென் ஆஃப்ரிக்கா அணி.

ஆட்ட நாயகன் விருதை வென்றது ஷாகிப் அல் ஹாசன் - பேட்டிங்கில் 75(84) மற்றும் பந்துவீச்சில் 1 விக்கெட், மற்றும் 10 ஓவர்களில் 50 ரன்கள் மட்டுமே வழங்கியதனால்.

            

Comments

Popular posts from this blog

A Decade and Future

ரஞ்சி'யா ? விஜய் ஹசாரே'வா ? - 2021

IPL 2021ல் புதிய அணியா ?