உலகக்கோப்பை திரில்லர் போட்டி - 2019
இன்று, ஒரு ஆண்டிற்கு முன், ஆஸ்திரேலியா அணி மற்றும் பாகிஸ்தான் அணி, டாண்டன் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, வேகப்பந்து வீச்சிற்கு ஏற்ப அமைந்த விக்கெட்டில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்கம் மிகவும் அருமையாக இருந்தது ஆஸ்திரேலியா அணியிற்கு. அதற்கு நான் ஆஸ்திரேலியா அணியை காட்டிலும் பாக்கிஸ்தான் அணியின் ஃபீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது, என்று தான் கூற வேண்டும். ஆங்கிலத்தில் ஓர் கூற்று மொழி உள்ளது. "Catches Win Matches", அதன் அர்த்தம் " கேட்சுகள் போட்டிகளை வெல்லும்" என்பது தான். அன்று, பல கேட்சுகளை தவற விட்டது பாகிஸ்தான் அணி. அதன் காரணமாக ஃபின்ச் மற்றும் வார்னர் இருவருமே சீறினார்கள். மிகவும் அதிரடியான தொடக்கம். முதல் 20 ஓவர்களில் முடிவில் 122/0 என ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் இருந்தது. இவ்விணையான கூற்றை உடைக்க வேண்டிய கட்டாயம் பாக்கிஸ்தான் அணியிற்கு. உடைத்தார்கள், 25ம் ஓவரில். 82 ரன்களுக்கு ஃபின்சின் விக்கெட் துண்டிக்கப்பட்டது. அப்போது ஸ்கோர் 146/1 என இருந்தது. டேவிட் வார்னர் சதம் அடித்தார். ஆங்காங்கே ஃபீல்டிங்கில் தவறு செய்தாலும் பாகிஸ்தான் அணி போட்டியினுள் திரும்பியது என்று தான் கூற வேண்டும். காரணம், இரு ஒப்பார்கள் சரியாக விளையாடியிருந்தாலும், இடையில் உள்ளோர் சொதப்பினார்கள். அமீரின் பந்துவீச்சு தலைசிறந்து விளங்கியது. இடையில் உள்ள முக்கிய கட்ட வீரர்கள் யாவரும் 25 ரன்களுக்கு மேல் ரன் குவிக்கவில்லை. கடைசி 12 ஓவர்களில் 65 ரன்கள் மட்டுமே குவிக்கப்பட்டு, 6 விக்கெட்டுகள் இழந்தது ஆஸ்திரேலியா அணி. 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலியா அணி. டேவிட் வார்னர் அதிக ஸ்கோராக 107 ரன்கள் குவித்திருந்தார். அமீர் தான் வீசிய 10 ஓவர்களில், 30 ரன்கள் மட்டுமே வழங்கி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பாகிஸ்தான் அணி இன்று இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும், நல்ல தொடக்கம் கொடுத்தார்கள். இமாம் உல் ஹக் அரை சதம் குவித்தார். ஆனால், அவர்களிடம் உள்ள சிக்கலை நன்கு வெளிகொண்டுவந்தது ஆஸ்திரேலியா அணி. அவ்வின்னல் வேறேதும் இல்லை, அறைக்குழி பந்துகள் தான். அவ்வறைக்குழி பந்துகளில் வீழ்ந்தது பாகிஸ்தான் அணி. நன்கு வீசப்படும் மற்றப்பந்துகளில் துணிச்சலுடன் ஷாட்டுகள் விளையாடினார்கள், ஆனால் அறைக்குழி பந்துகளில் சரிந்தது. அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா அணி மிகவும் நன்கு பௌண்டரிகளை காத்தனர். ஃபீல்டிங் அருமையாக திகழ்ந்தது. இடையில் ஹபீஸ் நன்கு துணைபுரிந்தார். ஆனால், மாலிக் மற்றும் ஆசிஃப் அலி இருவரும் சொதப்பல். அவர்களால், ஓர் கட்டத்தில் 160/6 என ஸ்கோர் இருந்தது. ஆனால், இங்கு சில சிறப்பான ஆட்டங்கள் ஹசன் அலி மற்றும் வஹப் ரியாஸிடம் இருந்து வெளிப்பட்டது. எனக்கு தனிப்பட்ட முரையில் ஓர் நம்பிக்கை உள்ளது, மிகவும் ஆழமாக பேட்டிங் உள்ள எவ்வணியினாலும் நன்கு விளையாட முடியும் என்று தான். அதாவது, கீழ் தளத்தில் உள்ள பந்துவீச்சாளர்களை பேட்டிங் பயிற்சி அளித்தால், பரிகாலத்தில் நன்கு பயன்படும் என்று தான். அன்று, அது தான் நடந்தது. ஹசன் அலி மற்றும் வஹாப் ரியாஸ் நன்கு பௌண்டரிகளை அடிக்க, போட்டி பாக்கிஸ்தான் அணியின் பக்கம் திரும்பியது. கடைசி 6 ஓவர்களில் 44 ரன்கள் தேவை என்கிற நிலையில், அதிலும் வஹாபி ரியாஸ் 45 ரன்கள் குவித்து மறுபுறத்தில் அணியின் தலைவர் சர்ஃபராஸ் அஹ்மத் உள்ளே இருக்கும் நிலையில், வெற்றி பாக்கிஸ்தான் அணியின் பக்கம் என்று தான் அனைவரும் தீர்மானித்தார்கள். ஆனால், ஸ்டார்க்கிடம் வேறு சில யுக்திகள் இருந்தது. வஹாபி ரியாஸின் விக்கெட்டை கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி. மற்றும் பின்னர் உள்ள ம விக்கெட்டுகளையும் உடனுக்குடன் கைப்பற்றி போட்டியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஆட்ட நாயகன் விருதை வென்றது டேவிட் வார்னர்

Comments
Post a Comment